Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை.! எப்படி பயன்படுத்தணும்?
இப்பேரண்டத்தில் ஏராளமான மூலிகைகள் இருந்தாலும் ஒரு சில மூலிகையின் பெயர்களே நமக்கு தெரிந்திருக்கும். சில மூலிகை நம் வீட்டிலே வளர கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். சில மூலிகைகளை தெரு ஓரங்களில் நம்மால் காண முடியும். ஒரு சில அபூர்வ மூலிகைகள் மலை பகுதியில் வளர கூடிய தன்மை கொண்டவையாக இருக்கும்.

அந்த வகையில், தேள் கொடுக்கு என்கிற இந்த மூலிகை மிக எளிதாக தெரு ஓரங்களிலே நம்மால் காண முடியும். இது போன்று தெரு ஓரங்களில் கிடைக்கும் மூலிகைக்கு சக்தி அதிகம் என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகையை நம்மால் வீட்டிலே வளர்த்து கொள்ள இயலும்.
ஆண்களுக்கான அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்கவும் இது மிக சிறந்த மூலிகை என சித்தர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இனி இந்த மூலிகையின் முழு பயன்களையும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

தேள் கொடுக்கு
பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த செடியை எளிதில் நம்மால் அறிந்து கொள்ள இயலும். இது தேள் கொடுக்கு போன்ற அமைப்பை கொண்டிருப்பதால் இதை தேள் கொடுக்கு என நம் ஊரில் அழைத்து வருகின்றனர்.
பெரும்பாலும் இது தெரு ஓரங்களில் காணப்படும். இதை பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

நுரையீரல் பிரச்சினை
நுரையீரலில் அதிக சளி சேர்ந்து விட்டால் அதனை விரட்ட இந்த எளிய மூலிகை பயன்படும். இதை நம் வீட்டிலே மூலிகை மருந்தாக தயாரிக்க கூடிய குறிப்பை சித்தர்கள் தந்து விட்டு சென்றுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள்...
திப்பிலி 3
சுக்குப் பொடி சிறிது
தேன் 1 ஸ்பூன்
தேள் கொடுக்கு இலை

தயாரிக்கும் முறை
முதலில் தேள்கொடுக்கு இலைகளை அலசி அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து அதில் அரைத்த இலை, பொடியாக்கிய திப்பிலி, சுக்கு பொடி போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.
இதை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.

சிறுநீரக பிரச்சினைகளுக்கு
சிறுநீரக பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை தர சிறந்த மருந்தாக தேள் கொடுக்கு உதவுகிறது. சிறுநீரக கற்களினால் உண்டாகும் பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது.

விஷக்கடி
பாம்பு, தேள், பூரான் போன்ற விஷக்கடியை முறிக்க இந்த மூலிகை உதவுகிறது. இதற்கு பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக தேள் கொடுக்கு இலையை அலசி, அரைத்து கொண்டு விஷக்கடி இருக்கின்ற இடத்தில் தடவி வந்தால் தீர்வு கிடைக்கும்.

அந்தரங்க பிரச்சினை
அந்தரங்க உறுப்பில் உண்டாக கூடிய சில பிரச்சினைகளை நம்மால் வெளியில் கூட சொல்ல முடியாது. குறிப்பாக அந்தரங்க உறுப்பில் அரிப்பு, தொற்றுகள், புண்கள், சிராய்வு ஏற்பட்டதன் மூலமாக உண்டாக்கிய காயங்கள் போன்றவற்றிற்கு தீர்வை தர தேள் கொடுக்கு உதவுகிறது.
இதற்கு தேவையான பொருட்கள்...
தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்
தேள் கொடுக்கு இலை
மஞ்சள் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் தேள் கொடுக்கு இலையை அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த இலையை சேர்க்கவும்.
பின் மஞ்சள் சேர்த்து நன்றாக காய்ச்சி தையலாம் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொள்ளவும். இதை அந்தரங்க இடத்தில் உள்ள புண்கள், சிராய்வுகள், சொரி, அரிப்பு போன்றவற்றில் தடவி வந்தால் எளிதில் குணமாக்கி விடலாம்.

பல தீர்வுகள்
இந்த வகை மூலிகை செடிகள் பெரும்பாலும் ஏராளமான நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும். அந்த வகையில், இவற்றை கல்லீரல் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், சரும பிரச்சினை, சிறுநீரக தொற்றுகள் போன்றவற்றிற்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இவை மூட்டு வலிகளை தீர்க்கவும் அருமருந்தாக பயன்படுகிறது.

எச்சரிக்கை
பொதுவாகவே மூலிகைகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது என்கிற வரையறை இருக்க தான் செய்யும். அதே போல தான், தேள் கொடுக்கு மூலிகையை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள கூடாது.
இவை கருக்கலைப்பை உண்டாகும் அபாயம் கொண்டவையாம். மேலும், இதனை மிக குறைந்த அளவே எடுத்து கொள்ள வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் விஷ தன்மை பெற்று விடும்.



Click it and Unblock the Notifications