Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...!
உடலின் வெளியில் உள்ள உறுப்புகளை விட அவற்றின் உள்ளே இருக்கும் ஒவ்வொரு அணுக்களும் மிக முக்கியமானவை. குறிப்பாக ரத்தத்தில் உள்ள அணுக்கள் மற்றவற்றை காட்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நமது உடல் முழுக்க இவை நிரம்பி உள்ளது. கிட்டத்தட்ட நமது உயிர் கூட இந்த ரத்த அணுக்களிடம் தான் இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு, எவ்வாறு இதன் எண்ணிக்கையை உயர்த்துவது என்பதை இனி அறிவோம்.

ரத்த அணுக்கள் குறைவது ஏன்..?
ரத்த அணுக்கள் உடலுக்கு மிக அவசியமான ஒன்றாகும். இதன் எண்ணிக்கை குறைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இவை உள்ளுக்குள்ளே அழிந்து வருவது. வேறொரு காரணம் இவற்றின் உற்பத்தி குறைந்து விடுவது. மேலும், ரத்த சோகை, ஊட்டசத்து குறைபாடு, வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றாலும் இவற்றின் எண்ணிக்கை குறைவதுண்டு.

அஸ்வகந்தா
மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு அதிக பலத்தை தருகிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து விதமான பிரச்சினைக்கும் இவை தீர்வை தருகிறது. தினமும் வெது வெதுப்பான நீரில் அஸ்வகந்தா பொடியை சிறிது சேர்த்து உண்டாலே ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம்.

வல்லாரை
மூளையின் செயல்திறனை பன்மடங்காக அதிகரிக்க இந்த வல்லாரை நன்கு உதவும். அதே போன்று இவை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பல வித பயன்கள் விரைவிலே கிடைக்கும்.

கற்றாழை சாறு
ரத்த அணுக்கள் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு அருமையன வழி உள்ளது. தினமும் கற்றலை சாற்றை குடித்து வந்தால் அணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயர தொடங்கும். ஏனெனில், இதில் 200 வகையான மூல பொருட்கள் உள்ளன.

நெல்லிக்காய்
தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே சித்தர்கள் ஓலை சுவடிகளில் பதிந்து உள்ளனர். அந்த வகையில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை இந்த நெல்லிக்காய் அதிகரிக்க செய்கிறது. இதற்கு தினமும் நெல்லிக்காய் பொடியை 2 முறை தேனுடன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

முளைக்கீரை
வைட்டமின் பி9 நிறைந்துள்ள உணவு பொருட்களில் இந்த முளைக்கீரை முதன்மையானது. செல்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் இந்த கீரை நன்கு உதவும். முளைக்கீரை ஜுஸ் அல்லது சாப்பாட்டில் இதனை சேர்த்து கொண்டாலே போதும்.

கோதுமை புல்
மெக்னீசியம், ஜின்க், அந்தோ ஆக்சிடன்ட்ஸ் போன்ற சத்துக்கள் இந்த கோதுமை புல்லில் அதிகம் நிறைந்துள்ளது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த மூலிகை அருமையாக பயன்படுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும், ரத்த சோகை நோய்களை குணப்படுத்தவும் இந்த கோதுமை புல் உதவுகிறது.

எலுமிச்சை
வைட்டமின் சி அதிகமாக எலுமிச்சையில் உள்ளதால் உடலுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த எலுமிச்சை சாற்றை தினமும் காலை வேளையில் குடித்து வந்தாலே போதும். மேலும், இவற்றை அழிவில் இருந்தும் எலுமிச்சை காத்து கொள்ளும்.

சீந்தில்
ஆயுர்வேத மூலிகைகளில் இந்த சீந்தில் பல மகத்துவங்களை கொண்டது. ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்த மூலிகையை சாப்பிட்டாலே போதும். இவை ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அலர்ஜிக் தன்மையை கொண்டுள்ளது. மேலும், எதிர்ப்பு சக்தியை இந்த மூலிகை அதிகரிக்கவும் உதவுகிறது.

உணவின் தேவை..!
பச்சை காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை உணவாவில் அதிகம் சேர்த்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம். மேலும், இயற்கை ரீதியான உணவு பொருட்களை சாப்பிட்டால் நலமோடு வாழலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications