Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தோல் புற்றுநோயை தடுக்கும் அழிஞ்சல்!

அனஞ்சி என அழைக்கப்படும் அழிஞ்சில் மரம் தென்னிந்தியா, மியான்மர் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் விதை, பட்டை வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இது மனித உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையும் சீராக்கும் தன்மை கொண்டது அழிஞ்சல். அதேசமயம் இது பித்தத்தை அதிகரிக்கும் என்று தேரையர் நளவெண்பாவில் கூறப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
நான்கு அல்கலாய்டுகள் இதில் அடங்கியுள்ளன. ஐசோலேட்டுகளின் பிரிவுகளும் இதில் காணப்படுகின்றன.வெனோட்டர்பைன், அன்கோரின், செபேலின், மற்றும் சைகோட்ரின் போன்றவையாகும்
விஷநீர் வெளியேறும்
அழிஞ்சில் பட்டையை இடித்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத் தாதுக்களை வெளியேற்றும். இந்த கசாயம் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர்கள் வெளியேறும்.
தோல் புற்றுநோய்
இந்த மரத்தின் வேரானது தோல் புற்றுநோயை நீக்குவதற்கு மருந்தாக பயன்படுகிறது. பாம்புகடி, தேள்கடி, நாய்கடி போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இதயநோய்களை குணப்படுத்துகிறது.
குடல்புண்ணை ஆற்றும்
மரப் பட்டையின் குடிநீர் உடல் சூட்டைத் தணிக்கும். உடலானது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை குணமாக்கும் தன்மையடையது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடல் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கலைப் போக்கும். நாள்பட்ட மலத்தை இளக்கும் தன்மை கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். வியர்வையைத் தூண்டி சருமத்தைப் பாதுகாக்கும்.
குஷ்ட நோய் குணமாகும்
விதையைக் காயவைத்து அதன் பருப்பை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் இளைத்த உடல் தேறும். அழிஞ்சலின் வேர்ப்பட்டையை காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மேகப்புண், சீழ் வடிகின்ற புண், சொறி, சிரங்கு மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். விதையிலிருந்து எடுக்கப்படும் தைலம் குஷ்ட நோய்க்கு பயன்படுத்தப் படுகிறது.
முகச் சுருக்கம் நீங்கும்
இதன் பட்டை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூட்டுவலி, கீழ்வாதம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். பாத வெடிப்பு, பாத எரிச்சலுக்கு இத்தைலத்தைத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பரு, முகத்தில் சுருக்கம், முகக் கருமை போக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications