Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு, புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.
மருத்துவப்பயன் உடைய பகுதிகள்
தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல் பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன. குறிப்பாக இலைகள், வேர் மற்றும் வேர்ப்பட்டை மிக முக்கியமானவை.
தோல்நோய்களுக்கு மருந்து
இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும். இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும் இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.
வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது. கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
புற்றுநோயை குணப்படுத்தும்
'நைகோபோடிஸ் போடிடா" என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
நஞ்சாகும் அரளிச் செடி
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படவில்லை எனில் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
