For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பழத்தை சாப்பிட்டா போதுமாம்..!

வாழைப்பழங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள பிற பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவு வகை 2 நீரிழிவு அபாயத்தைத் தடுக்க உதவும் என்றும் ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது.

|

உலகளவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அவற்றில் நிறைந்துள்ளது. அவற்றில் சில மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் பி6 மற்றும் சி. வாழைப்பழம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும். வாழைப்பழம் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். உண்மையில், ஒரு வாழைப்பழத்தில் 455 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. ஒவ்வொரு இதயத்துடிப்பும் பொட்டாசியத்தை சார்ந்துள்ளது.

study-reveals-eating-bananas-prevents-heart-diseases-in-tamil

ஒவ்வொரு நாளும் 1,00,000 முறை உடல் வழியாக இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தைத் தள்ளுகிறது. கூடுதலாக, இது நியூரான்கள், தசைகள் ஆகியவற்றின் செயல்பாட்டை எளிதாக்குகிறது. சிறுநீரகங்களுக்கு இரத்தத்தை வடிகட்ட உதவுகிறது மற்றும் உயிரணுக்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இது உடலின் திரவ அளவை பராமரிக்க உதவுகிறது. புதிய ஆராய்ச்சியின் படி, பொட்டாசியம் அளவைச் சரிபார்ப்பதன் மூலம் சில இதய நோய்களைத் தடுக்க முடியும் என்று கூறுவதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வு என்ன சொல்கிறது?

ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் எலிகளைப் பயன்படுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் குறைந்தளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல் மற்றும் தமனி கால்சிஃபிகேஷன் மற்றும் பெருநாடி விறைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்தனர். மக்களில் இதய நோய் பொதுவாக பெருநாடி விறைப்பால் கணிக்கப்படுகிறது. எலிகள் சாதாரண பொட்டாசியம் நிறைந்த உணவை உண்பதை விட, குறைக்கப்பட்ட பொட்டாசியம் உணவை உண்ணும் எலிகள் அதிகளவு பெருநாடி விறைப்புத்தன்மையைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாரடைப்பு வராமல் தடுக்க வாழைப்பழம் உதவுகிறது

மாரடைப்பு வராமல் தடுக்க வாழைப்பழம் உதவுகிறது

தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுவது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வாழைப்பழங்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள பிற உணவுகள் அபாயகரமான அடைப்புகளைத் தடுக்கின்றன. அவை தமனிகள் கடினப்படுத்துதல் மற்றும் குறுகுவதைத் தடுக்கலாம். ஒரு வாழைப்பழம் தினசரி பொட்டாசியம் தேவையில் 10% பூர்த்தி செய்கிறது. ஆய்வின்படி, பொட்டாசியம் மிகக் குறைந்தளவிற்கு எடுத்துக்கொள்பவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 50% அதிகமாக உள்ளது.

உப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகள்

உப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகள்

அதிகப்படியான உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது பரவலாக அறியப்படுகிறது. ஒரு நபரின் உடலில் உப்பு ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கங்களையும் வாழைப்பழங்கள் குறைக்கின்றன. தாது இதயத்தின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பயனடைகிறார்கள்.

உப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்

உப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்

உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது சுகாதார ஆலோசனையின் முக்கியத்துவமாக இருந்து வருகிறது. இருப்பினும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நவீன உணவுகளில் பெரும்பகுதியாக இருக்கும்போது அது சவாலானதாக உள்ளது. இதற்கு வாழைப்பழம் உங்களுக்கு உதவும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும் இது சிறுநீரில் சோடியம் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

 வாழைப்பழத்தின் மற்ற நன்மைகள்

வாழைப்பழத்தின் மற்ற நன்மைகள்

இதயம் தொடர்பான அபாயங்களைக் குறைப்பதைத் தவிர, வாழைப்பழம் பலவிதமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. சரியான விகிதத்தில் வாழைப்பழங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தை உயர்த்த உதவும் வேறு சில வழிகள் இங்கே உள்ளன.

நினைவகத்தை பாதுகாக்கிறது மற்றும் மனநிலையை அதிகரிக்கிறது

நினைவகத்தை பாதுகாக்கிறது மற்றும் மனநிலையை அதிகரிக்கிறது

வாழைப்பழத்தில் காணப்படும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம், நினைவாற்றலைப் பாதுகாக்கவும், கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கான ஒருவரின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், மனநிலையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. சீரான மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் இரண்டு ஊட்டச்சத்துக்களும் இதிலுள்ளன. ஒரு நடுத்தர வாழைப்பழம் ஒரு நபரின் தினசரி தேவைகளில் 10% நார்ச்சத்தை வழங்குகிறது. ஒரு ஆய்வின் படி, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாயு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றை அனுபவிக்கும். இருப்பினும், வாழைப்பழங்களை சாப்பிடுவது அறிகுறிகளுக்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்

நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்

வாழைப்பழங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள பிற பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவு வகை 2 நீரிழிவு அபாயத்தைத் தடுக்க உதவும் என்றும் ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும்

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும்

சோடியம் அல்லது உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுமாறு மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். பொட்டாசியம் இருதய அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து தரவுகளின்படி, நடுத்தர வாழைப்பழம் ஒரு நபருக்கு தினசரி பொட்டாசியம் தேவைகளில் கிட்டத்தட்ட 10% வழங்குகிறது.

புற்றுநோயின் ஆபத்து குறைக்கப்படும்

புற்றுநோயின் ஆபத்து குறைக்கப்படும்

லெக்டின் எனப்படும் புரதம் இருப்பதால் லுகேமியா செல்கள் வளர்ச்சியைத் தடுக்க வாழைப்பழம் உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ரேடிக்கல்களை வெளியேற்ற உதவுகிறது. அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கம் செல் சேதத்தையும் இறுதியில் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும். வாழைப்பழம் சாப்பிடுவதால், புற்றுநோய் ஆபத்து குறைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Study reveals, eating bananas prevents heart diseases in tamil

Here we are talking about the Study reveals, eating bananas prevents heart diseases in tamil.
Desktop Bottom Promotion