Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Heart-Healthy Cooking Oils: மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..
நிறைய பேருக்கு எந்த சமையல் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரியவில்லை. எனவே இப்போது ஒருவரது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில சமையல் எண்ணெய்களைக் காண்போம்.
Heart-Healthy Cooking Oils: நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் தான் எண்ணெய். இந்த எண்ணெயை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் எண்ணெயானது கொழுப்புக்களின் வடிவமாகும். தவறான, அதாவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் எண்ணெயை ஒருவர் தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதன் விளைவாக உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து, இதய நோய்கள் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக தற்போது நிறைய பேர் இதய நோயால் மரணமடைந்து வருகிறார்கள். இதற்கு நாம் தினசரி உணவில் பயன்படுத்தும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க விரும்பினால், சரியான எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சமையலில் பயன்படுத்தி வாருங்கள். நிறைய பேருக்கு எந்த சமையல் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரியவில்லை. எனவே இப்போது ஒருவரது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில சமையல் எண்ணெய்களைக் காண்போம்.

வேர்க்கடலை எண்ணெய்/கடலை எண்ணெய்
கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் அதிகளவிலான மோனாஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இந்த வைட்டமின் ஈ இதயத்திற்கு நல்லது மற்றும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த கடலை எண்ணெயை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தும் போது, உடலுக்கு ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில்
தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு சமையல் எண்ணெய் தான் ஆலிவ் ஆயில். இந்த எண்ணெயில் தாவர வகை கலவைகளான பாலிஃபீனால்கள் உள்ளன. இவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளதால், இவை உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். இது தவிர இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது.

சூரிய காந்தி எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெயும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் இந்த எண்ணெயில் உள்ள அதிகப்படியான வைட்டமின் ஈ என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் இதயத்திற்கு மட்டுமின்றி, சருமம், மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் நன்மை விளைவிக்கின்றன. உலகின் பல பகுதிகளில் சமையலுக்கு கடுகு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில் இந்த எண்ணெயில் மோனா அன்சாச்சுரேட்டட்ட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3, ஒமேகா.6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தும் போது, இதய ஆரோக்கியம் மேம்படுவதைத் தவிர, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

சோயாபீன் எண்ணெய்
சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவது தான் சோயாபீன் எண்ணெய். இந்த எண்ணெயில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. சோயாபீன் எண்ணெயானது உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் , சோயாபீன் எண்ணெயை சமையலில் பயன்படுத்துங்கள்.

அரிசி தவிட்டு எண்ணெய்
அரிசி தவிட்டு எண்ணெய் என்பது அரிசி தவிட்டில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயாகும். இந்த எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் மோனா அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சமநிலையில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்த எண்ணெயில் உள்ள ஒரைசனால் என்னும் பொருள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுப்பதால், இது இதய நோயின் அபாயத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications