Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடலில் இந்த 8 அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்துண்டு..!
ஒவ்வொரு வயதை நாம் கடக்கும் போதும் ஏதோ ஒரு வித பாதிப்புகளால் நாம் அவதிப்பட்டு தான் வருகின்றோம். இது கால மாற்றத்தினாலும், உடல் அமைப்பின் மாற்றத்தினாலும் உண்டாக கூடிய பாதிப்புகள் என்றே சொல்லலாம். சிறு வயது முதலே பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுளோரும் இங்குண்டு.

நீண்ட காலமாக சிறிய காய்ச்சல் கூட வராத ஆட்களும் இங்குண்டு. இது அவரவர் உடலை சார்ந்தும், மரபணுவை சார்ந்தும், சூழலை சார்ந்தும் தான் அமையும். எந்த ஒரு நோய் வீரியம் அடைவதற்கு முன்னர் நமக்கு அவற்றை பற்றிய அறிகுறிகள் நிச்சயம் உடலில் தென்பட கூடும்.
நம்மில் பலர் இதை சாதாரணமாக எடுத்து கொள்வதுண்டு. ஆனால், இது போன்ற மோசமான பாதிப்புகள் தான் உயிரையே காவு வாங்கி விடுக்கின்ற. உடலில் தென்படும் எந்தெந்த அறிகுறிகள் மிக மோசமான ஆபத்தை உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய உறுப்பு
உடலின் மிக முக்கிய உறுப்பு எதுவென்றால் அது நிச்சயம் இதயமாக தான் இருக்கும். இதயத்தின் இயக்கம் நின்று விட்டால் மற்ற உறுப்புகளின் இயக்கமும் நின்று விடும்.
இதயத்தை பாதிக்க கூடிய அறிகுறிகள் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உண்டாக கூடும். இதற்கு மூல காரணம் தமனிகள் தான்.

தமனிகள்
இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் அவை தமனிகளை பாதித்து அடைப்புகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிக்க கூடும்.
தமனிகள் அடைக்கப்பட்டுள்ளதை நமது உடலில் ஏற்பட கூடிய ஒருசில அறிகுறிகளின் மூலமாக நாம் அறிந்து கொள்ள இயலும்.

வலி
தமனிகள் அடைப்பட்டுள்ளதை எளிதில் கண்டறிய உங்களின் காலில் ஏற்பட கூடிய வலிகளின் மூலம் அறியலாம். நடக்கும் போதும், உட்காரும் போதும் கால்களில் வலி இருந்தால் தமனி அடைப்பிற்கான அறிகுறியாகும். மேலும், இது போன்ற உள்ளார்ந்த வலி இடுப்பு பகுதியிலும் உண்டாக கூடும்.

கண் பார்வை
ஒரு கண்ணில் மட்டும் பார்வை மங்கலாக தெரிய கூடும். அல்லது ஒரு கண்ணில் மட்டும் திடீரென்று பார்வையே இல்லாதது போல மாற கூடும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது அவசியம். இல்லையேல் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.

கீழ் முதுகு வலி
முதுகின் கீழ் பகுதியில் பயங்கர வலி தொடர்ந்து ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். தமனிகள் அடைபட்டிருந்தால் இது போன்ற அறிகுறிகளின் மூலம் கண்டறிய இயலும். இவை இதயத்தை மட்டுமில்லாமல் நரம்புகளையும் சேர்த்தே பாதித்து விடும்.

குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்
இரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதை மிக எளிதாக கண்டறியும் அறிகுறி இது தான். அதாவது, கால் பாதங்கள் மற்றும் கைகளின் உட்பகுதியில் மிகவும் ஜல்லென்று இருந்தால் அவசியம் மருத்துவரை அணுகுவது நல்லது.

சோர்வு, மயக்கம்
உங்களது உடல் எப்போதுமே சோர்வாக இருந்தால் தமனிகள் அடைப்பட்டிள்ளதை இவை குறிக்கின்றன. மேலும், இரத்தத்தில் ஆக்சிஜென் அளவு குறைவாக இருந்தாலும் இது போன்ற நிலை உண்டாகும். மேலும் சிலருக்கு எப்போதும் மயக்கமாகவே இருக்க கூடும்.

மூச்சு திணறல்
நம்மை அறியாமலே பல நேரங்களில் நமக்கு மூச்சு திணறினால் அதற்கு தமனிகளுக்கும் தொடர்பு உண்டு. இரத்த ஓட்டம் தடைபடுவதால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே, இதை பற்றி அவசியம் மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டும்.

நெஞ்சு வலி
இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் அவை அழுத்தத்தை ஏற்படுத்தி நிச்சயம் நெஞ்சு வழியை உண்டாக்கும். மேலும், நெஞ்சு பகுதியில் இறுக்கமான நிலை, அழுத்தம், பயங்கர வலி ஆகிய பாதிப்புகளையும் இது ஏற்படுத்தும். நாளடைவில் இந்நிலை மாரடைப்பை உண்டாக்கி விடும்.

ஆபத்து!
மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு சற்று அதிகமாக இருந்தாலும் கட்டாயமாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். இதய துடிப்பு நின்று விட்டால் மற்ற உறுப்புகளை வைத்து நம்மால் எதுவும் செய்ய இயலாது. எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.



Click it and Unblock the Notifications