Latest Updates
-
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க..
தமனிகளில் அடைப்பு இருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!
தற்போது இதய நோய் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இத்தகைய இதய நோய் 40, 50 வயதுகளில் தான் வரும். ஆனால் தற்போது 30 வயதிற்கு உட்பட்டோர் கூட இதய நோய்க்கு பாதிக்கப்படுகின்றனர். இதய நோய்களில் மாரடைப்பால் தான் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ளோர் தான் அதிக அளவில் மாரடைப்பால் இறக்கின்றனர்.
இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான் பெரிதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இத்தகைய மாரடைப்பு வருவதற்கு முன்பு ஒருசில அறிகுறிகள் உடலில் தென்படும். அத்தகைய அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், ஒருசில ஆரோக்கியமான செயல்களை மேற்கொண்டு, மாரடைப்பால் இறப்பதை தவிர்க்கலாம். உதாரணமாக, மாரடைப்பின் ஒரு அறிகுறி தான் தமனிகளில் அடைப்பு ஏற்படுவது. இப்படி தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கு, உடல் பருமன், கொலஸ்ட்ரைல் மற்றும் கலோரிகள் தான் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதுமட்டுமின்றி, இரத்தத்தின் அடர்த்தியானது அதிகரித்து, அவை தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவைக் குறைத்து, மாரடைப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான சில அறிகுறிகளை முன்பே அறிந்து கொண்டால், வாழ்க்கை முறை மற்றும் டயட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இதயத்திற்கு இரத்த ஓட்டமானது சீராக செல்வதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகளைப் பார்க்கலாம்.

திடீரென்று கடுமையான மார்பக வலி
அவ்வப்போது திடீரென்று மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டால், உடனே சோதனை செய்து கொள்ள வேண்டும். அதிலும் அந்த வலியானது கத்தியைக் கொண்டு குத்துவது போல் வலிக்கும். இப்படி இருந்தால், அது தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது என்று அர்த்தம்.

எழுச்சி குறைவு
ஆண்களுக்கு உறவு கொள்ளும் போது எழுச்சி குறைவானாலும், மாரடைப்பு வரப் போகிறது என்று அர்த்தம்.

சோர்வு
உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே அடிக்கடி சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல், உடனே சோதனை செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான நெஞ்செரிச்சல்
தினமும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதோடு, அத்துடன் செரிமான பிரச்சனை ஏற்பட்டாலும், தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

தூக்கமின்மை
மாரடைப்பு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்று தான் தூக்கமின்மை. மன அழுத்தம், மன இறுக்கம், மன கவலை ஆகியவையும் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிப்பவை.

ஆர்வமின்மை
இதுவரை அனைத்திலும் ஆர்வம் இருந்து, திடீரென்று எதையுமே செய்யப் பிடிக்காவிட்டால், அதுவும் தமனிகளில் அடைப்பு உள்ளதற்கான அறிகுறியே. ஆகவே இந்நிலையில் யோகாவை தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.

சுவாசக் கோளாறு
தமனிகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதோடு, எளிதில் சோர்வடைந்துவிடுவோம்.

வழுக்கைத் தலை
தமனிகளில் அடைப்பு இருப்பதற்கு வழுக்கைத் தலையும் ஒரு அறிகுறியே. எனவே வழுக்கையானது எந்த வயதில் வர ஆரம்பித்தாலும், தவறாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொதுவானவையே.

காதுகளில் சுருக்கம்
காதுகளில் சுருக்கங்கள் அதிகம் காணப்பட்டால், அது உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். எனவே வழக்கத்திற்கு மாறாக காதுகளில் சுருக்கங்கள் அதிகம் காணப்படும் போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கால் வலி
இதயத்தில் பாதிப்பு இருந்தால், குறிப்பாக பெருந்தமனிகளில் அடைப்பு இருந்தால், நடந்தாலோ அல்லது சிறு உடற்பயிற்சி செய்தாலோ, கணுக்கால்களில் கடுமையான வலி ஏற்படும்.



Click it and Unblock the Notifications