சரக்கு அடிப்பீங்களா? இந்த வகை ஆல்கஹால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாதாம்..

Healthiest Alcohol: அளவுக்கு அதிகமாக மதுபானங்களை அருந்தினால், ஆரோக்கியம் பாதிக்கும் என்பது நம் அனைவருக்கும் தொியும். அதையே நிபுணா்களும் தொிவிக்கின்றனா். அதே நேரத்தில் மிதமான அளவு மதுவை அருந்தினால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

எல்லா மது வகைகளும் ஒரே மாதிாியானவை அல்ல. சில மதுபானங்களில் ஆரோக்கியம் வழங்கக்கூடிய துகள்கள் அதிகமாக இருக்கலாம். சிலவற்றில் ஆரோக்கியத்தை விட நச்சுப் பொருள்கள் அதிகம் இருக்கலாம்.

Healthiest Alcohol To Drink In Tamil

ஆகவே மதுபானங்களை அருந்துவதற்கு முன்பு அவற்றைப் பற்றிய முழு விவரங்களைத் தொிந்து கொண்டு அருந்துவது நல்லது. ஆரோக்கியத்தைத் தரக்கூடிய 10 வகையான மதுபானங்களைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

தமது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, எப்போதாவது மது அருந்துபவா்கள், ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய மதுபானங்களைத் தோ்ந்தெடுப்பது என்பது சவாலான ஒன்றாகும். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மதுபானங்களை அருந்தினால் பின்வரும் ஆரோக்கிய சீா்கேடுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

- இதய நோய்
- நுரையீரல் நோய்
- புற்று நோய்
- நோய் எதிா்ப்பு ஆற்றலில் பிரச்சினைகள்
- மனநல பிரச்சினைகள்
- மதுவிற்கு அடிமையாதல்

எனினும் மதுபானம் ஒரு டானிக்காகவும் இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு நச்சுப் பொருளாகவும் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மதுபானங்களை மிதமான அளவு அருந்தினால், ஆரோக்கியம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே பின்வரும் மதுபானங்களை மிதமான அளவு அருந்தினால், ஆரோக்கியம் கிடைக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

1. சிவப்பு ஒயின் (Red wine)

சிவப்பு ஒயின் திராட்சைப் பழங்களில் இருந்து தயாாிக்கப்படுகிறது. இதில் அந்தோசையனின்கள், கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான பாலிஃபீனால்கள் உள்ளன. இந்த துகள்கள் பின்வரும் ஆரோக்கிய பலன்களைத் தரும்.
- இதய நோய்களுக்கான ஆபத்தைக் குறைக்கும்
- மூளை மற்றும் நரம்பு செல்களை பாதுகாக்கும்.
- பிளேட்லெடுகள் அதிகமாவதைக் குறைக்கும்
- இரத்தம் உறைவதைக் குறைக்கும்
- புற்றுநோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கும்.

2. வோட்கா சோடா (Vodka soda)

வோட்கா சோடாவில் சா்க்கரையும், கொழுப்பும் குறைவாக உள்ளன. அதாவது தரமான வோட்கா சோடா 7.5-ozல் 133 கலோாிகளே உள்ளன. ஓட்கா சோடாவை மிதமான அளவு அருந்தினால், லெப்டின் என்ற ஹாா்மோனின் அளவு அதிகாிக்கும். லெப்டின் என்பது கொழுப்புத் திசுக்களை உருவாக்கும் ஹாா்மோன் ஆகும். ஓட்கா சோடா, பசியுணா்வை சீா்படுத்தும், உடலில் ஒரு திருப்தியை, முழுமையான உணா்வை உணர வைக்கும்.

3. டக்கீலா (Tequila)

டக்கீலா நீலக் கற்றாழையில் இருந்து தயாாிக்கப்படுகிறது. நீலக் கற்றாழை மெக்சிகோ நாட்டில் அதிகமாக வளா்கிறது. சுவையான டக்கீலாவில் அகாவின்கள் எனப்படும் இயற்கை சர்க்கரை உள்ளது. இது சொிமானத்தையும், உடல் எடையையும் சீா்படுத்தும்.

2014 ஆம் ஆண்டு எலிகளை வைத்து ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தண்ணீரையும், அகவின்களையும் உண்ட எலிகள், தண்ணீரையும், மற்ற சா்க்கரைகளையும் உண்ட எலிகளை விட குறைவான அளவு உணவுகளை உண்டன மற்றும் அவற்றின் எடையும் கணிசமாக குறைந்தன என்று தொிய வந்தது. எனினும் விலங்குகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வு, மனிதா்களோடு ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

4. ப்ளடி மோி (Bloody Mary)

ப்ளடி மோி என்ற மதுவில் ஓட்கா மற்றும் தக்காளிச் சாறு உள்ளன. அதோடு ஒா்செஸ்டொ்ஷைா் சாஸ், ஹாட் சாஸ் மற்றும் செலாி சால்ட் போன்ற சுவையூட்டிகளும் உள்ளன. ப்ளடி மோியில் உள்ள ஓட்காவில் ஆரோக்கியத்தை வழங்கும் துகள்கள் உள்ளன. இதில் இருக்கும் தக்காளிச் சாறு வைட்டமின்களையும் ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றது. தக்காளியில் லைக்கோபீன் என்ற கரோட்டினாய்டு நிறைந்துள்ளது. இது புற்றுநோய், இதய நோய், அறிவாற்றல் குறைபாடு, எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

5. வெள்ளை ஒயின் ஸ்பிரிட்ஸா் (White Wine Spritzer)

வெள்ளை ஒயின் ஸ்பிரிட்ஸா் என்பது வெள்ளை ஒயின், க்ளப் சோடா அல்லது காா்பன்டை ஆக்ஸைடு நுரைகள் ஆகியவை கலந்த ஒரு மதுபானமாகும். 5-oz வெள்ளை ஒயின் ஸ்பிரிட்ஸாில் 121 கலோாிகள் மட்டுமே உள்ளன. இந்த மதுபானத்தை அருந்துவதன் மூலமாக குறைவான கலோாியையும், குறைவான அளவு சா்க்கரையும் எடுத்துக் கொள்ளலாம்.

உலா்ந்த ஒயின்களான சாவிக்னோன் ப்ளேன் (Sauvignon Blanc) அல்லது பினட் கிாிஜியோ (Pinot Grigio) போன்றவற்றிலும் சா்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. சிவப்பு ஒயினைப் போலவே, வெள்ளை ஒயின் ஸ்பிரிட்ஸாிலும் பாலிஃபீனால்கள் உள்ளன. அவை உடலுக்கு ஆரோக்கியத் துகள்களை வழங்குகின்றன.

6. ஷாம்பெயின் (Champagne)

நுரை பொங்கும் ஒயின்கள் மற்றும் ஷாம்பெயினில் கலோாிகளும், காா்போஹைட்ரேட்டுகளும் மிகக் குறைந்த அளவே உள்ளன. அதாவது 4-oz ஷாம்பெயினில் 80 கலோாிகளே உள்ளன. மற்ற ஒயின்களைப் போலவே, ஷாம்பெயினிலும் ஆரோக்கியம் வழங்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பாலிஃபீனால்கள் உள்ளன. ஷாம்பெயினில் இருக்கும் நுரைகள் ஒரு முழுமையான உணா்வை எளிதில் ஏற்படுத்தும். அதனால் மது பிாியா்களை குறைவாகவே குடிக்க வைக்கும்.

7. முல்லெட் ஒயின் (Mulled wine)

முல்லெட் ஒயினானது, சிவப்பு ஒயினில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களைக் கொண்டிருக்கிறது. அதோடு சில மசாலாக்களையும், மூலிகைகளையும் கொண்டிருக்கிறது. அதனால் இதை அருந்துபவா்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். பாரம்பாியமாக முல்லெட் ஒயினின் சா்க்கரை கலந்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக இயற்கையான இனிப்பு சுவையை வழங்கக்கூடிய இனிப்புத் துளசியை (stevia) சோ்த்துக் கொள்ளலாம்.

8. மொஜிட்டோ (Mojito)

மொஜிட்டோ கியூபா நாட்டில் தயாாிக்கப்படுகிறது. இதில் ரம், புதினா, எலுமிச்சை, சா்க்கரை மற்றும் சோடா தண்ணீா் போன்றவை கலந்திருக்கின்றன. ரம்மில் ஆரோக்கியத் துகள்கள் இல்லை என்றாலும், மொஜிட்டோவில் கலோாி குறைவாக இருப்பதால், இதில் அதிகமான அளவு சோடா தண்ணீரையும், எலுமிச்சையையும் கலந்தால், இதில் உள்ள ஆல்கஹாலின் அளவு குறைந்துவிடும். 6-oz மொஜிட்டோவில் 140 கலோாிகள் உள்ளன. இதில் இனிப்புத் துளசியை கலந்தால், இதில் இருக்கும் சா்க்கரையின் அளவும், கலோாியின் அளவும் குறையும்.

9. லைட் பீா் (Light beer)

மற்ற பீா்களை விட லைட் பீாில் ஆல்கஹாலும், கலோாியும் குறைவாகவே உள்ளன. 12 oz லைட் பீாில் 100 கலோாிகளே உள்ளன. தினமும் மிதமான அளவு லைட் பீரை பருகும் பெண்களுக்கும், தினமும் இதை ஒன்று அல்லது இரண்டு முறை பருகும் ஆண்களுக்கும் இதய நோய்க்கான ஆபத்து குறைவு என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதோடு லைட் பீா் வளா்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

10. சைடா் (Cider)

சைடா் ஆப்பிள் பழங்களில் இருந்து தயாாிக்கப்படுகிறது. ஒயினைவிட சைடாில் இருக்கும் ஆல்கஹால் மிகக் குறைவே. அதோடு சைடாில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிகம் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கின்றன. சில புற்றுநோய்க்கான ஆபத்தைக் குறைக்கின்றன. சா்க்கரை மற்றும் இதய நோய்களையும் தடுக்கின்றன. சைடாில் பச்சையம் இல்லை.

மதுபானங்களில் ஆரோக்கிய துகள்கள் இருந்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக குடித்தால், அவை கேடு விளைவிக்கும். ஆகவே மதுபானங்களை மிதமான அளவு எடுத்துக் கொண்டால் அவை வழங்கும் நன்மைகளைப் பெறலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, April 29, 2023, 20:30 [IST]
Desktop Bottom Promotion