Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நீங்க நீண்ட நாள் ஃபிட்டா இருக்கணுமா? அப்ப முதல்ல இந்த 3 உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க...
Health Tips In Tamil: அனைவருக்குமே நீண்ட நாட்கள் ஃபிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பொதுவாக நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது ஆரோக்கியம் இருக்கும். தற்போது ஜங்க் உணவுகள் நம்மை அதிகம் சூழ்ந்து இருப்பதால், அந்த வகையான உணவுகளை வாங்கி சாப்பிடுவற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆனால் இந்த ஜங்க் உணவுகளில் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல நச்சுப் பொருட்கள் உள்ளன. இது தவிர நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் நமக்கு தீங்கை விளைவிக்கலாம் என்பது தெரியுமா? ஆம், நாம் உண்ணும் சில ஆரோக்கியமான உணவுகளிலும் நச்சுக்கள் நிறைந்திருக்கும். இந்த நச்சுக்களால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

எந்த ஒரு உணவுப் பொருளையும் சரியான அளவில், சரியான பதத்தில் வேக வைத்து சாப்பிடாமல் இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். அப்படி உடல் ஆரோக்கியத்தை பாழாக்கி, ஒருவரது ஃபிட்னஸிற்கு இடையூறாக இருக்கும் சில ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பச்சை உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பெரும்பாலானோரின் பிரியமான காய்கறியாகும். ஆனால் உருளைக்கிழங்கை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும். சில சமயங்களில் உருளைக்கிழங்குகள் பச்சை நிறங்களில் இருப்பதைக் காணலாம். இப்படி பச்சை நிறங்களில் இருக்கும் உருளைக்கிழங்கை உண்பது ஆபத்தானது மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஏனெனில் பச்சை உருளைக்கிழங்குகளில் சொலனேசி என்னும் பொருள் இருக்கும். இது தலைவலி, வாந்தி, குமட்டல், உட்புற இரத்தக்கசிவு, கோமா மற்றும் சில சமயங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடியது. எனவே உருளைக்கிழங்கை வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்க வேண்டும். ஆய்வுகளின் படி, பச்சை உருளைக்கிழங்கை 450 கிராம் உட்கொள்வது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜாதிக்காய்
ஜாதிக்காயில் மிரிஸ்டிசின் என்ற செயலில் உள்ள போருள் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் திறன் கொண்டது. அதுவும் ஒருவர் ஒரே வேளையில் 10 கிராம் ஜாதிக்காயை உட்கொண்டால், அது தலைவலி, தலைச் சுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற ஃபுட் பாய்சன் அறிகுறிகளை வெளிக்காட்டும்.
ஆய்வு ஒன்றில், 37 வயதான பெண் ஒருவர் அதிகளவு ஜாதிக்காயை உட்கொண்ட ஒன்றரை மணிநேரத்தில் கடுமையான அறிகுறிகளை சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே ஜாதிக்காயை உணவில் சேர்ப்பதாக இருந்தால், அதில் கவனமாக இருக்க வேண்டும்.
கசப்பான பாதாம்
பாதாம் மிகவும் ஆரோக்கியமான நட்ஸ்களுள் ஒன்று என்பதை அனைவருமே அறிவோ. ஆனால் பாதாம் சாப்பிடும் போது, அந்த பாதாம் கசப்புத்தன்மையுடன் இருந்தால், அவற்றை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். கசப்புத்தன்மையைக் கொண்ட பாதாமில் ஹைட்ரஜன் சயனைடு என்னும் நச்சுப் பொருள் உள்ளன.
ஆய்வுகளில் கசப்புத்தன்மையைக் கொண்ட பாதாமை 6-10 உட்கொண்டால், அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் என்றும், அதுவே 20-25 பாதாமை சாப்பிட்டால், அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதும் தெரிய வந்துள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications