Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
காபி எனிமாவை எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: எல்லாருக்கும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபியாவது குடிச்சாக வேண்டியிருக்கும். அப்பொழுது தான் அவர்களால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆனால் காபியை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. அதனால் தான் உங்களுக்கு நாங்கள் காபி எனிமாவை அறிமுகப்படுத்துகிறோம்.
காபி எனிமா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? எனிமா என்பது உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தும் முறையாகும். மலக்குடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்ய உதவுகிறது. பொதுவாக எனிமாவை பயன்படுத்த தண்ணீரில் சிறுதளவு சோப்பு சேர்த்து பயன்படுத்துவர்.

அதுவே இதனுடன் காபியை சேர்த்து பயன்படுத்துவது தான் காபி எனிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த காபி எனிமாவை நீங்கள் எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான நன்மைகளை நீங்கள் பெறலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம் .
காபி எனிமா எப்படி வேலை செய்கிறது?
காபியில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன. தியோப்ரோமைன், தியோபிலின் மற்றும் காஃபின். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காபியில் உள்ள இந்த மூன்று முக்கிய கூறுகளும் இணைந்து செயல்படுகிறது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற அந்தக் காலத்தில் 1900 களில் ஜெர்சன் சிகிச்சையில் காபி எனிமாவை அவர்கள் பயன்படுத்தினர்.
கெர்சன் இன்ஸ்டிட்யூட்டின் ஒரு ஆய்வறிக்கையின்படி, ஆற்றல் செல் உற்பத்தி, திசு ஆரோக்கியம், இரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் செல் வளர்ச்சி போன்ற பல நன்மைகளை காபி எனிமா வழங்குகிறது. இந்த காபி எனிமா புற்றுநோய் சிகிச்சையிலும் பெரிய பங்கை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காபி எனிமா வெறும் டையூரிடிக் மருந்தாக மட்டும் செயல்படுவதில்லை. இதன் மூலம் உங்கள் மலச்சிக்கலை போக்க முடியும். தினமும் இயற்கையான முறையில் உங்கள் குடலை சிரமமின்றி சுத்தம் செய்ய உதவுகிறது.
காபி எனிமாவின் அறிவியல் சான்றுகள்
2014 ஆம் ஆண்டில், ஒரு கொரிய ஆய்வு மருத்துவ ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் எண்டோஸ்கோபி நோயாளிகளுக்கு காபி எனிமா கொடுக்கப்பட்டது. இதற்காக அவர்கள் 34 எண்டோஸ்கோபி நோயாளிகளை அவர்கள் பயன்படுத்தினர்.
இந்த பங்கேற்பாளர்களின் பாதி பேருக்கு காபி எனிமாவும், மீதமுள்ள பேருக்கு பாலி எதிலீன் கிளைக்கோலும் கொடுக்கப்பட்டது. காபி எனிமா வழங்கப்பட்ட பங்கேற்பாளர்களின் சிறுகுடலில் நடுத்தர மற்றும் கீழ் பகுதிகளில் கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காபி எனிமாவின் நன்மைகள்
உடலை சுத்தம் செய்கிறது
காபி என்பது 800 க்கும் மேற்பட்ட பொருட்களால் ஆனது. இந்த சேர்மங்கள் உங்கள் உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. காபியில் உள்ள பால்மிட்டேட்டில் இரண்டு வகையான சேர்மங்கள் உள்ளன. Kahweol மற்றும் Cafestol ஆகும். இந்த தனித்துவமான பொருட்கள் காபி பீன்ஸில் மட்டும் காணப்படுகிறது. இது உங்கள் கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பிற்கு சக்திவாய்ந்த பொருளாக செயல்படுகிறது.
கல்லீரலை சுத்தம் செய்கிறது
பால்மிட்டேட்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஆக்ஸினேற்றத்தை அதிகரிக்கிறது. இரசாயன புற்றுநோயை தடுக்கிறது. உடலை சுத்தம் செய்கிறது.
குளுதாதயோனை அதிகரிக்கிறது
குளுதாதயோன் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்களாக செயல்படுகிறது. இது உண்மையில் நியோபிளாசியாவைத் தடுக்க உதவுகிறது. இது புதிய, அசாதாரணமான மற்றும் கட்டுப்பாடற்ற திசுக்களின் வளர்ச்சியால் , கட்டிகளுக்கு வழிவகுக்கிறது. இது புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. எனவே குளுதாதயோன் புற்றுநோய் கட்டிகளை தடுக்க உதவுகிறது.
பித்த உற்பத்தியை அதிகரிக்கிறது
நாம் உண்ணும் உணவை சீரணிக்க போதுமான அளவு பித்த நீர் தேவை. காபி பித்தத்தை தூண்ட உதவுகிறது. எனவே காபி எனிமா பித்த நீரை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. இது நமது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
குடலை பாதுகாக்க உதவுகிறது
காபி எனிமா குடலில் உள்ள நச்சுக்களை நீக்கி குடலை பாதுகாக்க உதவுகிறது. குடலை நன்றாக சுத்தம் செய்ய உதவுகிறது. காபியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
காபியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரலில் உள்ள வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியை குறைக்க உதவுகிறது.
நல்ல சரும ஆரோக்கியம்
பொதுவாக குடல் ஆரோக்கியம் சரியில்லை என்றால் முகப்பருக்கள் அதிகமாக தோன்ற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த காபி எனிமா உங்கள் குடலை முழுவதுமாக சுத்தப்படுத்தி விடுவதால் முகப்பருக்கள் தொல்லையை எளிதாக போக்க முடியும்.
இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது
காபியில் உள்ள காஃபைன் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நாள்பட்ட நோயைக் குறைக்கிறது
2017 ஆம் ஆண்டின் ஆராய்ச்சி படி, காபி எனிமா டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்க உதவுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் தெளிவு மனநிலை
காபி எனிமா இரத்த ஓட்டத்தில் காஃபின் மற்றும் பால்மிட்டேட்டுகளை நேரடியாக உறிஞ்சுவது பித்த நீரை வெளியேற்றுவதைத் தூண்டுவதால் இது மேம்படுத்தப்பட்ட ஆற்றல் நிலைகளை தர உதவுகிறது. மேலும் தெளிவான மனநிலையையும் இது தருகிறது. குடல் புழுக்கள் வயிற்றில் வளருவதையும் தடுக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











