Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
உடலில் கொலஸ்ட்ரால் 200-க்கு மேல் போனால் என்னலாம் நடக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கொழுப்பு மற்றும் மெழுகுப் பொருளாகும். இரத்தத்தில் இருக்கும் பெரும்பாலான கொலஸ்ட்ரால் கல்லீரலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மீதுள்ள கொலஸ்ட்ரால் அளவானது உணவில் இருந்து பெறப்படுகிறது. இந்த கொலஸ்ட்ரால் அப்படியே உங்கள் இரத்தத்தில் உள்ள லிப்போ புரோட்டீன்கள் எனப்படும் பாக்கெட்டுக்கு செல்கிறது.
எனவே கொலஸ்ட்ரால் அளவை சரியாக நிர்வகிக்காவிட்டால் அதிக எல்டிஎல் கொழுப்பு சேர்ந்து அது உங்கள் தமனிகளை சேதப்படுத்தும். இந்த கொழுப்பு தமனிகளை சேதப்படுத்தி கடுமையான இதய நோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது அப்படியே பக்கவாதத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடுகள், தவறாமல் உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் போன்றவை மிகவும் அவசியம். எனவே உங்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
சாதாரண மனிதனின் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
சராசரியாக: கொலஸ்ட்ரால் அளவானது 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும் (குறிப்பாக நீரிழிவு அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அளவை பராமரிக்க வேண்டும்.)
கொலஸ்ட்ரால் அளவு : 100-129mg/dL ஆகும்.
அதிக ஆபத்து வரம்பு :130 முதல் 159mg/dL ஆகும்.
மிக அதிக ஆபத்து வரம்பு : 160-180 mg/dL
அதிகபட்ச உச்ச வரம்பு : 190mg/dL ஆகும்.
கொலஸ்ட்ரால் அளவு 200 ஐ தாண்டும் போது என்ன நடக்கும்?
எல். டி. எல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். இது தமனிகளில் உருவாகி இரத்தக் குழாய்களின் நெகிழ்வுத் தன்மையை குறைக்கிறது. இதனால் பெருந்தமனி தடிப்பு (தமனிகள் கடினப்படுதல்) போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது. தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது இரத்த ஓட்டம் ஆனது தடைபடுகிறது. இதனால் இதயம் பம்ப் மற்றும் வேலை செய்வது கடினமாகிறது. அதிகமான கொலஸ்ட்ரால் உருவாக்கம் பிளேக் உருவாகுவதற்கு வழி வகுக்கும். இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இது இதய நிலைகளை மேலும் மோசமாக்குகிறது.
நம் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால் தமனிச் சுவர் கொழுப்பை ஏற்படுத்துகிறது. இது பெருந்தமனி தடிப்பை உண்டாக்குகிறது. அதாவது தமனிகளின் உள் மற்றும் இடைச் சுவர்களைச் சுற்றி கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்களைக் கட்டமைத்து, தமனிச் சுவரில் ஒரு தடுப்பு ஏற்படுகிறது. இது பெருந்தமனி தடிப்புத் தகடு என்று அழைக்கப்படுகிறது.
இது பிளேக் அடைப்புகளை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பு அடுக்கில் கரோனரி இஸ்கெமியாவை ஏற்படுத்துகிறது. இது சில சமயங்களில் மாரடைப்பை உண்டாக்குகிறது. பக்கவாதமும் ஏற்படுகிறது. இந்த அடைப்பு சிறுநீரகத்தில் இருந்தால் சிறுநீரக பாதிப்பு உண்டாகிறது. சில நேரங்களில் இது குடலிறக்கத்தை உண்டாக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க காரணமான காரணிகள்
சில சமயங்களில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு என்பது சில ஆபத்து காரணிகளைச் சார்ந்தது. நீரிழிவு நோய், புகைபிடித்தல், உடல் செயலற்ற தன்மை, மரபணு பின்னணிகள் போன்ற காரணிகள் காரணமாகின்றன. எனவே கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
கரையக்கூடிய நார்ச்சத்துக்களுடன் கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறைந்த அளவு உப்பு மற்றும் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளுங்கள். இது நீண்ட காலத்திற்கு கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
அதிக கொலஸ்ட்ரால் உங்கள் மூளையை பாதிக்கும்
உங்கள் மூளை சரியாகச் செயல்பட சிறுதளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் அதுவே அதிகப்படியான கொலஸ்ட்ரால் இரத்தத்தில் தேங்கி இருந்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
அதிகப்படியான கொழுப்பினால் இரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் தடையானது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இந்த தடை மூளையின் சில பகுதிகளை சேதப்படுத்துகிறது. இதனால் நினைவாற்றல் இழப்பு, பலவீனமான இயக்கம், பேசுவது மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
அதிக கொலஸ்ட்ரால் செரிமான அமைப்பை சேதப்படுத்துகிறது
பித்த நீர் உருவாக்கத்திற்கும், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் கொலஸ்ட்ரால் என்பது தேவைப்படுகிறது. இருப்பினும் பித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேங்கி இருந்தால் பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாகி கடுமையான வலியை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications