Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தினமும் 3 வாழைப்பழங்களை சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
Health Tips In Tamil: பழங்களிலேயே வருடம் முழுவதும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழமானது பெரும்பாலானோரின் விருப்பமான பழமும் கூட. நிறைய பேருக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
இப்படி வாழைப்பழம் சாப்பிடுபவர்களைப் பார்த்தால், அவர்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை வாழைப்பழம் சாப்பிடாதவர்களை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.

ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான 1500 கிலி பொட்டாசியம் கிடைக்கிறது மற்றும் ஏராளமான நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன. கீழே தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. இரத்த அழுத்தம் குறையும்
தினமும் 3 வாழைப்பழங்களை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் கணிசமாக குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 422 மிகி பொட்டாசியம் உள்ளது மற்றும் இதில் சோடியம் எதுவும் இல்லை. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 3 வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி புரியும்.
2. செரிமானம் மேம்படும்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் வாழைப்பழத்தை சாப்பிடுவது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது. அதுவும் வாழைப்பழத்தை காலை உணவின் போது உட்கொண்டால், உடல் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.
3. இதய ஆரோக்கியம் மேம்படும்
நார்ச்சத்து அதிகமான உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் அந்த நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. ஆய்வு ஒன்றில், நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்பது, இதய நோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடும் போது இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதய நோயின் அபாயமும் குறைகிறது.
4. ஆரோக்கியமான செல்களை உருவாக்கும்
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளன. அதுவும் ஒருநாளைக்கு உடலுக்கு வேண்டிய அளவில் சுமார் 20 சதவீதம் ஒரு வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கிறது. வைட்டமின் பி6 ஆனது இன்சுலின் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தி உதவுவதோடு, ஆரோக்கியமான செல்களை உருவாக்கவும் உதவுகிறது.
மேலும் இது உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட தேவையான ஆன்டி-பாடிகளின் உற்பத்திக்கும் உதவுகிறது. ஆகவே உடலை நோய்த்தொற்றுகள் எதுவும் தாக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
5. வைட்டமின் சி அதிகம்
வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இந்த வைட்டமின் சி-யானது சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி பழங்களில் மட்டும் தான் இருப்பதாக நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த வைட்டமின் சி வாழைப்பழத்திலும் உள்ளன.
அதுவும் ஒரு வாழைப்பழத்தில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமினி சி-யில் 15 சதவீதம் உள்ளது. அதுவும் 3 வாழைப்பழத்தை உட்கொண்டால், உடலுக்கு போதுமான வைட்டமின் சி கிடைத்து, இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, தசைகள் மற்றும் எலும்புகளைத் தாங்கும் கொலாஜனின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
6. இரத்த சோகையை தடுக்கும்
வாழைப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகளவில் உள்ளன. இரும்புச்சத்தானது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டி, இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆகவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், தினமும் 3 வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
7. உடல் எடை கட்டுப்படும்
வாழைப்பழமானது ஒருவரது பசியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. வாழைப்பழத்தின் இனிமையான சுவை மட்டுமின்றி, வாசனை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
8. மன அழுத்தம் குறையும்
ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் 27 மிகி மக்னீசியம் உள்ளன. இந்த கனிமச்சத்து மனநிலையை மேம்படுத்துவதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 420 மிகி மக்னீசியமும், பெண்களுக்கு 320 மிகி மக்னீசியமும் தேவை.
உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கும் போது தான், ஒருவர் மிகுந்த பதட்டம், எரிச்சலுணர்வு, மன இறுக்கம் மற்றும் பிற மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மனநலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications