Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
வாரம் ஒருமுறை இறால் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: வார இறுதி வந்தாலே பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் அசைவ உணவுகளை வாங்கி பலவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் எப்போதும் மட்டன், சிக்கன் என்று தான் வாங்கி சமைப்பீர்களா? ஆனால் அவற்றை விட இறால்கள் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.
இறால்கள் நன்னீரில் வளரக்கூடியவை. இவற்றில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக இருப்பதால், ஊட்டச்சத்து நிபுணர்களும் இவற்றை உணவில் சேர்க்க அறிவுறுத்துகிறார்கள்.

முக்கியமாக இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் இறாலை நாம் பலவாறு சமைக்கலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அட்டகாசமாக விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
இறாலை வாரத்திற்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடலினுள் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். இப்போது வாரந்தோறும் இறாலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. வைட்டமின் பி12 குறைபாடு நீங்கும்
இறால்களில் வைட்டமின் பி12 அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி12 உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அது உடல் பலவீனம், சோர்வு மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். வைட்டமின் பி12 குறைபாட்டை கண்காணிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் அது மூளையில் சேதத்தை ஏற்படுத்திவிடும். எனவே உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படக்கூடாதெனில், இறாலை வாரம் ஒருமுறை உட்கொண்டு வாருங்கள்.
2. எடை இழப்புக்கு உதவும்
இறால்களில் கலோரிகள் மிகவும் குறைவு. 100 கிராம் இறாலில் 115 கலோரிகளும், 1.72 கிராம் கொழுப்புக்களுமே உள்ளன. அதோடு இதில் ஜிங்க், அயோடின் போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால், அது அதிகளவு உணவுகளை உண்ணத் தூண்டி உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆனால் அடிக்கடி இறாலை சாப்பிட்டு வந்தால், இச்சத்து குறைபாடுகள் தடுக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.
3. புற்றுநோயை தடுக்கும்
தற்போது புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு, இறந்தும் வருகிறார்கள். ஆனால் இறால்களில் செலினியம் அதிகமாக உள்ளன. இந்த செலினியம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆகவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதெனில், இறாலை அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
4. சருமம் இளமையாக இருக்கும்
இறால்களை சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இறால்களில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளன. ஆகவே இறாலை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அது இளமையை நீட்டிப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
5. நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்
இறால்களில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளன. ஜிங்க் சத்தானது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுபடுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் இறாலை வாரந்தோறும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம்.
6. அல்சைமர் நோய் தடுக்கப்படும்
உலகில் மில்லியன் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வரும் ஒரு மனநல பிரச்சனை தான் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இறால்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடி மூளைக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன. ஆகவே மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், இறாலை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.
7. இதய நோய் தடுக்கப்படும்
புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக நிறைய பேர் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் இதய நோய். ஆனால் இறாலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோயின் அபாயத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே இதய நோய் வரக்கூடாதெனில், அடிக்கடி இறாலை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
8. எலும்புகள் வலுபெறும்
இறால்களில் கால்சியம் அதிகளவில் உள்ளன. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் அமைப்பு மற்றும் வலிமைக்கு இன்றியமையாத சத்தாகும். ஆகவே எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், கால்சியம் அதிகம் நிறைந்த இறாலை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைத்து, எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications