Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
அடிக்கடி முள்ளங்கி சாப்பிட்டால் உடம்புக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண இயற்கை நமக்கு அளித்த உணவுப் பொருள் தான் காய்கறிகள். இந்த காய்கறிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே நிறைந்துள்ளன. காய்கறிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் முள்ளங்கி. இந்த முள்ளங்கியானது ஒரு வேர் காய்கறி. அதாவது பூமிக்கு அடியில் வளரக்கூடியது.
ஆனால் முள்ளங்கியை கண்டாலே பலரும் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் இதன் மணம் சற்று மோசமாக இருக்கும். என்ன தான் இதன் வாசனை மோசமாக இருந்தாலும், இதனுள் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி இரண்டு நிறங்களில் கிடைக்கும். ஒன்று வெள்ளை; மற்றொன்று பிங்க். இதில் வெள்ளை நிற முள்ளங்கி பரவலாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் முள்ளங்கியை சாப்பிட மறுப்பவரானால், இக்கட்டுரையை தவறாமல் படியுங்கள். ஏனெனில் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நிச்சயம் இதை சாப்பிட மறுக்கமாட்டீர்கள். இப்போது ஏன் ஒருவர் முள்ளங்கியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.
1. இரத்த செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்
முள்ளங்கியை அடிக்கடி சாப்பிடும் போது, அது இரத்த சிவப்பணுக்கள் அதிகம் சேதமடைவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆக்ஸிஜன் எவ்வித தடையுமின்றி கிடைக்கியது.
2. மலச்சிக்கல் தடுக்கப்படும்
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது. மேலும் இது பித்த நீர் உற்பத்தியை சீராக்குகிறது, கல்லீரல் மற்றும் பித்தப்பையை பாதுகாக்கிறது. மேலும் உடலில் நீர்தேக்கமடைவதைத் தடுக்கிறது.
3. இதயத்திற்கு நல்லது
முள்ளங்கி இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு அதில் உள்ள அந்தோசையனின்கள் தான் காரணம். மேலும் இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே இதய நோய் வரக்கூதெனில், முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
4. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கொண்டவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி இரத்தத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதாக நம்பப்படுகிறது.
5. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள தேவையான வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இது சளி, இருமல் பிரச்சனையைத் தடுப்பதோடு, தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.
6. இரத்த குழாய்களின் பலப்படுத்தும்
முள்ளங்கி கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இது நமது இரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவி புரிகிறது. ஆகவே இரத்த குழாய்கள் வலுவாக இருக்க வேண்டுமானால் முள்ளங்கியை சாப்பிடுங்கள்.
7. உடல் பருமன் குறையும்
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கி பெரிதும் உதவி புரிகிறது. இந்த வேர் காய்கறியானது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதைத் தவிர, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் பருமனைக் குறைக்கிறது. மேலும் இது அசிடிட்டி, வாய்வு தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
8. சருமத்திற்கு நல்லது
உங்கள் சருமம் அழகாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்க வேண்டுமானால், முள்ளங்கி அல்லது முள்ளங்கி ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி, ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முகப்பரு, பிம்பிள் போன்றவை வராமல் தடுக்கிறது. முகம் பொலிவின்றி இருந்தால், முள்ளங்கியை அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.
9. உடல் வறட்சி தடுக்கப்படும்
ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருந்தால், உடல் வறட்சி அடையும். உடல் வறட்சி நீடித்தால், அதுவே உடலில் பல்வேறு பிரச்சனைகளை வரவழைத்துவிடும். ஆனால் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம். இந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.
10. அத்தியாவசிய சத்துக்களை கொண்டவை
சிவப்பு முள்ளங்கியை எடுத்துக் கொண்டால், அதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் உடலுறுப்புக்கள் நல்ல முறையில் செயல்பட தேவையான சத்துக்களாகும்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் முள்ளங்கியை கண்டால் ஓடுபவராக இருந்தால், இனிமேல் அவ்வாறு செய்யாமல், முள்ளங்கியை விரும்பி சாப்பிடுங்கள். பச்சையாக சாப்பிட பிடிக்காவிட்டால், முள்ளங்கி சாம்பார் வைத்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











