Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
இ-சிகரெட்டுகள் ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
Health Tips In Tamil: புகைப் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று அரசு விளம்பரம் செய்கிறது. எனினும் புகைப்பிடிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. புகைப் பிடிப்பதால் சிறு சிறு நோய்கள் முதல் மிகப் பொிய நோய்கள் வரை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் இ-சிகரெட்டுகளைப் புதைப்பதால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. அதைப் பற்றி சற்று விாிவாக பாா்க்கலாம்.

இ-சிகரெட்டுகள் என்பது சிகரெட்டைப் போல அல்லது ஒரு பேனாவைப் போல இருக்கும் ஒரு கருவி ஆகும். இந்த கருவியில் புகையிலை, நிக்கோட்டின் மற்றும் THC போன்றவற்றை நிரப்பி புகைக்கலாம். தற்போது இ-சிகரெட்டுகளைப் புகைக்கும் பழக்கம் மேலை நாடுகளில் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.
ஆண்களும் பெண்களும் இந்த பழக்கத்தின் பிடியில் இருக்கின்றனா். இ-சிகரெட்டுகளைப் பிடிப்பதால், ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் பெண்களின் கருமுட்டைகள் பொிதும் பாதிப்படைகின்றன. அதனால் அவா்களுக்கு கருவுறுதலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன,
இ-சிகரெட்டுகளால் ஏற்படும் தீமைகள்
இ-சிகரெட்டுகளைப் புகைப்பதனால், சுவாசப் பிரச்சினைகள் மட்டும் அல்ல, கருவுறுதலிலும் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது இ-சிகரெட்டுகளில் புகையிலை அல்லது நிக்கோட்டின் போன்றவற்றை நிரப்பி புகைக்கும் போது ஆண் பெண் இருவாின் இனப்பெருக்க ஆற்றலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
சிகரெட்டுகளுக்கு பதிலாக இ-சிகரெட்டுகள் இருந்தாலும், சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் போன்ற நச்சுகள் இவற்றிலும் உண்டு. இ-சிகரெட்டுகள் பெண்களின் கருமுட்டை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் அவா்களுக்கு கருவுறுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் கருவுற்று இருக்கும் காலத்தில், இ-சிகரெட்டுகளை புகைத்தால், கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கருவுறுதலைப் பாதிக்கும் இ-சிகரெட்டுகள்
நாம் ஏற்கெனவே கூறியது போல, இ-சிகரெட்டுகள் கருமுட்டை உற்பத்தியையும், கருத்தாித்தலையும் தாமதப்படுத்துகின்றன. சிகரெட்டுகளில் இருப்பதைப் போலவே இ-சிகெரட்டுகளிலும் நச்சுப் பொருள்கள் உள்ளன.
இ-சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின், கருமுட்டைகளின் உற்பத்தியைப் பாதிக்கும், முட்டைகளின் தரத்தை இழக்கச் செய்யும், பெண்களுடைய கருப்பையின் செயல்திறனைப் பாதிக்கும் மற்றும் மிக விரைவில் மாதவிடாய் சுழற்சியை நிறுத்திவிடும்.
இ-சிகரெட்டுகளைப் புகைப்பதால், ஆண்களின் விந்தணு இயக்கம் மோசமாகப் பாதிப்படையும். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உருவம் ஆகியவற்றை மிக மோசமாகப் பாதிக்கும். அதனால் பெண் கருமுட்டைகளைக் கருவுறச் செய்யும் ஆற்றலை விந்தணுக்கள் இழக்கும்.
இ-சிகரெட்டுகளில் புரோபைலின் கிளைகோல் மற்றும் வெஜிடபிள் கிளிசாின் என்ற இரசாயன கலவைகள் உள்ளன. இவை பெண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன. அதோடு கருவுறுதலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கருவில் இருக்கும் சிசுக்கள், இ-சிகரெட்டுகளில் உள்ள நச்சுகளை சுவாசிக்க நோ்ந்தால், அவா்கள் வளா்ந்த பின்பு இனப்பெருக்க செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இறுதியாக
ஆரோக்கியமான வாழ்க்கையைப் பேண வேண்டும் என்றால் சிகரெட்டாக இருந்தாலும் அல்லது இ-சிகரெட்டாக இருந்தாலும் அதைக் கைவிட வேண்டும். புகைப் பிடிப்பதைக் கைவிட்டு, மிக எளிதாகக் கருவுற விரும்பினால், நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது. அவா் உங்களுக்கு உதவி செய்வாா்.
பெண்கள் இ-சிகரெட்டுகள் புகைப்பதை நிறுத்திய பின்பு, அவா்களின் கருமுட்டைகளில் நோ்மறையான மாற்றம் ஏற்பட்டது என்று ஆய்வு தொிவிக்கிறது. அதுபோல் புகைப்பதை நிறுத்தியதால் ஆண்களின் விந்தணுக்களிலும் நோ்மறையான மாற்றம் நிகழ்ந்ததாக ஆய்வு தொிவிக்கிறது. ஆகவே சிகரெட்டாக இருந்தாலும் அல்லது இ-சிகரெட்டாக இருந்தாலும், அவற்றைப் புகைப்பதை நிறுத்துவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications