Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் தயிர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
Curd Benefits In Tamil: தற்போது வெயில் காலம் என்பதால் பலரது வீடுகளில் தயிர் எப்போதுமே இருக்கும். தயிர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது நன்கு க்ரீமியாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
மேலும் பலர் கோடைக்காலத்தில் தயிரை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவார்கள். தயிரை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் தயிரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. தயிர் ஒரு லைட் ஃபுட் மற்றும் இது பாலை விட வேகமாக ஜீரணமாகக்கூடியது. இப்போது தயிரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.
செரிமானத்திற்கு நல்லது
தயிரில் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் அதிகம் உள்ளன. இந்த செயலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. எனவே ஏற்கனவே செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தயிரை தினமும் காலையில் உட்கொள்ள, அப்பிரச்சனைகளைப் போக்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து, குடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. ஆய்வு ஒன்றில், தயிர் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளன. எப்படியெனில் தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உடலில் வெள்ளைணுக்களின் அளவு சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலமும் வலுவாக இருக்கும்.
சருமம் ஆரோக்கியம்
தயிரை தினமும் உட்கொண்டு வந்தால், அது சருமம் வறட்சி அடைவதைத் தடுத்து, சருமத்தை போதுமான ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். ஒருவருக்கு இரைப்பை குடல் பிரச்சனைகள் இருந்தால், அது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் தயிரை காலையில் எழுந்ததும் உட்கொள்ளும் போது, இரைப்பை பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சரும பிரச்சனைகளும் தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் குறையும்
ஆய்வு ஒன்றில் தயிரை தினமும் உட்கொண்டு வந்தவர்களுக்கு தயிரை உட்கொள்ளாதவர்களை விட 31 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. தயிரில் புரோட்டீன்களுடன், பொட்டாசியம், வைட்டமின் பி12 மற்றும் மக்னீசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உட்கொண்டு வந்தால், அது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
யோனி தொற்றுகள்
பெண்கள் தினமும் தயிரை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவி புரியும். இதற்கு தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் தான் காரணம். இவை உடலில் தொற்றுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
எலும்புகளுக்கு நல்லது
ஒரு கப் அதாவது 250 கிராம் தயிரில் சுமார் 275 மிகி கால்சியம் உள்ளன. இது ஒரு நாளைக்கு இந்த அளவு கால்சியத்தை ஒருவர் பெற்றோமேயானால், எலும்புகள் வலுவாகவும், அடர்த்தியுடனும் இருக்கும். மேலும் தயிரில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவு என்பதால், இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். அதோடு, தயிர் பற்களை வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எடை குறைய உதவும்
நமது வயிற்றைச் சுற்றி கெகாழுப்புக்கள் தேங்குவதற்கு காரணம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் ஒழுங்கற்ற தன்மை தான் காரணம். தயிரில் கால்சியம் அதிகளவில் உள்ளன. இவை கார்டிசோல் உற்பத்தியைக் குறைத்து, நம்மை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் தயிர் லைட் ஃபுட் மட்டுமின்றி, வயிற்றை எளிதில் நிரப்பக்கூடியது. எனவே எடையைக் குறைக்க நினைத்தால், காலையில் ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













