Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
Hot Milk Benefits In Tamil: நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று தான் பால். பாலில் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன.
முக்கியமாக பாலில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது. இது தவிர மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்களும், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற வைட்டமின்களும் உள்ளன.

இந்த பாலை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் உட்கொள்வோம். சிலர் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிக பாலை குடிப்பார்கள். இன்னும் சிலர் இரவு தூங்கும் முன் பாலைக் குடிப்பார்கள். இதற்கிடையே பாலை இரவு தூங்கும் முன்பு தான் குடிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
சரி, தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பாலைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கீழே இரவு தூங்கும் முன் பால் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
நல்ல தூக்கம்
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் கிடைக்கும் முதன்மையான நன்மை நல்ல தூக்கம் கிடைக்கும். ஏனெனில் பாலில் ட்ரிப்டோபேன் மற்றும் மெலடோனின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை நல்ல தூக்கத்தைப் பெற உதவுகின்றன. ட்ரிப்டோபேன் உடலில் செரடோனின் என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனநிலையை மேம்படுத்தி, உடலுக்கு ஒருவித ரிலாக்ஸை அளிக்கிறது. அதேப் போல் மெலடோனின் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இரத்த சர்க்கரை குறையும்
பால் ஒரு முழுமையான உணவு. இதில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றன. நாள் முழுவதும் போதுமான ஊட்டச்சத்துக்களை எடுக்காதவர்கள், இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பால் குடித்தால், ஊட்டச்சத்து குறைபாடுகளை ஈடுசெய்யும்.
எடை இழப்பிற்கு உதவும்
பாலில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. கூடுதலாக, பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. இது ஒரு மெட்டபாலிச ஊக்கியாக செயல்பட்டு, எடை இழப்பிற்கு உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பாலைக் குடிப்பது நல்ல பலனைத் தரும்.
எலும்புகள் வலுவாகும்
பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே எலும்புகளின் வலிமைக்கு அத்தியாவசியமானவை ஆகும். இப்படிப்பட்ட பாலை தினமும் ஒருவர் குடித்து வந்தால், அது வயதாகும் போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
மன அழுத்தம் குறையும்
நாள் முழுவதும் பல டென்சனுடன் அலுவலகத்தில் வேலை பார்த்து வீட்டிற்கு வருவோம். இப்படி டென்சனுடன் இருந்தால், அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பாலைக் குடித்தால், அதில் உள்ள குறிப்பிட்ட அமினோ அமிலம் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் அளவைக் குறைத்து, மனதை ரிலாக்ஸ் செய்வதோடு, மறுநாள் காலையில் தூங்கி எழும் போது புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
எனவே இதுவரை உங்களுக்கு இரவு தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், இனிமேல் அந்த பழக்கத்தை கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications