Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
Dhanush Birthday: 42 வயதிலும் நடிகர் தனுஷ் பிட்டா இருக்க.. இந்த டயட்டையும், உடற்பயிற்சியையும் ஃபாலோ பண்றாராம்!
Happy Birthday Dhanush: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ், இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 2002 ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் தனது திரையுல வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் போது, இவரது உடலமைப்பைப் பார்த்து, பலரும் இவரை கேலி-கிண்டல் செய்தனர்.
ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், தனுஷ் அவர்கள் தனது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றதோடு, இன்று அவர் இருக்கும் நிலையே வேறு. சொல்லப்போனால் தமிழில் எவரும் ஹாலிவுட் வரை சென்றதில்லை. ஆனால் நடிகர் தனுஷ் தனது சிறப்பான நடிப்பாலும், திறமையாலும் ஹாலிவுட் வரை சென்று கலக்கியுள்ளார். ஆரம்பத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த தனுஷ் அவர்கள், தற்போது பாலிவுட்டிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

முக்கியமாக தனுஷ் வெறும் நடிகர் மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர். இவர் நடித்த படங்கள் மட்டுமின்றி, இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை பெற்றுள்ளன. இப்படிப்பட்ட தனுஷ் அவர்கள் இன்றும் ஒல்லியாக இருந்தாலும், ஃபிட்டாக உள்ளார்.
42 வயதிலும் தனுஷ் அவர்கள் ஃபிட்டாக இருப்பதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷ் அவர்களின் ஃபிட்டாக இருக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளார் மற்றும் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. புரோட்டீன் நிறைந்த உணவுகள்
தனுசு அவர்கள் காலையில் வேகமாக எழுந்துவிடுவாராம். மற்றும் இவர் காலையில் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வாராம். காலை உணவை ஒருபோதும் தவறவிடமாட்டாராம். இவரது காலை உணவில் முட்டைகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, நட்ஸ் வெண்ணெய் மற்றும் காய்கறிகள் அடங்கியிருக்குமாம்.
2. சமச்சீரான மதிய உணவு
நடிகர் தனுஷ் மதிய வேளையில் எப்போதும், எங்கு இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்த தென்னிந்திய உணவுகளையே உட்கொள்வாராம். அதுவும் இவரது மதிய உணவில் சாதம், தால் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் கட்டாயம் இருக்குமாம். முக்கியமாக இவர் பெரும்பாலும் வீட்டு உணவுகளையே அதிகம் உண்பாராம்.
3. ஸ்நாக்ஸ்
நடிகர் தனுஷ் அவர்கள் ஸ்நாக்ஸ் வேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதான ஆவலைக் குறைக்க பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவற்றை ஸ்நாக்ஸ் போன்று எடுப்பாராம். இந்த ஸ்நாக்ஸில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்திருக்குமாம். இதன் மூலம் அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதான ஆவல் குறைவதாகவும் கூறுவாராம். முக்கியமாக இவர் ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பாராம்.
4. மிதமான டின்னர்
நடிகர் தனுஷ் இரவு நேரத்தில் பெரும்பாலும் சூப் அல்லது சாலட் போன்றவற்றை தான் உட்கொள்வாராம். அதுவும் இரவு நேரத்தில் வேகமாக டின்னரை முடிக்கும் போது, உணவு ஜீரணிக்க போதுமான நேரம் கிடைக்கும் என்றும், இதன் மூலம் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து, நாளை சிறப்பாக தொடங்கலாம் என்றும் தனுஷ் நம்புகிறார்.
5. தீவிரமான கார்டியோ
கார்டியோ உடற்பயிற்சிகளான ரன்னிங், சைக்கிளிங், HIIT போன்றவை தனுஷ் அவர்களின் வழக்கமான உடற்பயிற்சியில் இருக்குமாம். இந்த உடற்பயிற்சிகள் தான் அவரது உடலில் கொழுப்புக்களை அதிகம் சேர விடாமல் தடுத்து, அவரை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதாம்.
6. வலிமை பயிற்சிகள்
தனுசு அவர்களின் ஃபிட்னஸிற்கு அவர் மேற்கொள்ளும் வலிமை பயிற்சிகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஏனெனில் இந்த வகை பயிற்சிகள் தசை திசுக்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது. எனவே இப்படியான பயிற்சிகளை தனுஷ் வழக்கமாக மேற்கொண்டு வருகிறார். இதுவே திரைப்படங்களில் இவர் அவ்வளவு சிறப்பாக காட்சியளிக்க ஒரு முக்கியமான காரணமும் கூட.
7. யோகா
தனுஷ் அவர்கள் ஃபிட்டாகவும், எப்போதும் கூலாகவும் இருப்பதற்கு காரணம், அவர் மேற்கொள்ளும் யோகா பயிற்சிகளும் ஒரு காரணம். இவர் மனதையும், உடலையும் சமநிலையில் வைத்துக் கொள்ள மற்றும் பராமரிக்க யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவாராம்.
8. நீரேற்றம் மற்றும் ஓய்வு
தனுஷ் அவர்கள் தினமும் போதுமான அளவு நீரை தவறாமல் குடிப்பதை உறுதி செய்வாராம். முக்கியமாக உடற்பயிற்சியின் போதும், உடற்பயிற்சிக்கு பின்னரும், உடல் வேகமாக உடற்பயிற்சிகளால் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமாக நீரை அதிகம் குடிப்பாராம். அதோடு தினமும் போதுமான அளவு ஓய்வை உடலுக்கு தவறாமல் கொடுப்பாராம். இதுவும் இவரது ஃபிட்னஸின் ஒரு ரகசியமாகும்.
முக்கியமாக தனுஷ் அவர்களின் ஃபிட்னஸ் மந்திரம் என்னவென்றால், எதை செய்தாலும் ஒழுங்காக செய்ய வேண்டும். முக்கியமாக தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த ஒழுக்கம் தான் அவர் ஃபிட்டாக இருப்பதன் முக்கிய ரகசியமாக கூறப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











