Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 அறிகுறிகளை அசால்ட்டா எடுத்துக்காதீங்க.. அது தீவிர கல்லீரல் சேதத்தின் அறிகுறி.. எச்சரிக்கும் டாக்டர்!
Liver Damage Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். இந்த கல்லீரல் நமது வயிற்றில் உள்ளது. இது நமது உடலில் ஏராளமான முக்கிய வேலைகளை செய்கிறது. அதில் இரத்தத்தை வடிகட்டுவது, மெட்டபாலிசத்தை பராமரிப்பது, பித்தநீரை உற்பத்தி செய்வது, இரத்த உறைதலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வது, வைட்டமின்களை சேமிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இது தவிர இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்யும் கல்லீரல் நமது மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் சேதமடைகின்றன.

ஆனால் கல்லீரலில் பிரச்சனை இருந்தாலோ அல்லது சேதம் ஏற்பட்டிருந்தாலோ, அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், எளிதில் குணப்படுத்திடலாம். அதுவே கல்லீரல் பிரச்சனை முற்றிவிட்டால், பின் சிகிச்சை அளிப்பது சிரமமாகிவிடும்.
இரைப்பை குடல் நிபுணர் மற்றும் கல்லீரல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்லீரல் சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதுவும் ஒவ்வொருவரும் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாத கல்லீரல் சேதத்தின் ஆரம்பகால அறிகுறிகளை எடுத்துரைத்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
1. மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்
டாக்டர் ஜோசப் அவர்களின் கூற்றுப்படி, மஞ்சள் காமாலை அதாவது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரல் சேதத்தின் மிகவும் முக்கியமான அறிகுறிகளாகும். இப்படியான மாற்றத்தை கண்களிலும், சருமத்திலும் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
2. வீங்கிய வயிறு
வயிற்றுப் பகுதி வீங்கியோ அல்லது மிகுந்த உப்புசத்துடன் இருப்பதையோ உணர்ந்தால், உங்கள் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார். இப்படியான நிலையை திரவக் குவிப்பு என்று அழைப்பர். எப்போது கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லையோ, அப்போது வயிறு, கால்கள் போன்ற பகுதிகளில் திரவங்கள் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தும் என்றும் டாக்டர் ஜோசப் கூறினார்.
3. குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல், வாந்தி போன்றவற்றை காரணமில்லாமல் அடிக்கடி சந்தித்தால் மற்றும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், குறிப்பாக இரவு நேரத்தில் சந்தித்தால், அது கல்லீரல் சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும் என்று டாக்டர் கூறினார். எனவே இப்படி வாந்தி, குமட்டலை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. வலது மேல் வயிற்று வலி
கடைசியாக, வயிற்றின் மேல் பகுதியில் வலி நீங்காமல் இருந்தால், அது கல்லீரல் சேதத்தின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். இது ஹெபடைடிஸ் மூலம் ஏற்படலாம். அதாவது கல்லீரல் வீக்கத்தினால் ஏற்படலாம். இது தவிர வைரஸ் தொற்று அல்லது அதிக மது போன்றவற்றாலும் ஏற்படலாம் என்று டாக்டர் கூறினார்.
காரணங்கள்
டாக்டர் ஜோசப் கல்லீரல் சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளைத் தவிர, கல்லீரல் பிரச்சனைகளுக்கு வேறு என்னவெல்லாம் காரணங்களாக இருக்கலாம் என்றும் டாக்டர் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு:
* ஆல்கஹால் முதன்மையான குற்றவாளி.
* கொழுப்பு கல்லீரல் நோயால் ஏற்படும் வடுக்கல் மற்றும் கல்லீரல் அழற்சி
* வைரஸ்களுள் ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி போன்றவை.
* ஆல்கஹால், சில சப்ளிமெண்ட்டுகள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளும் கல்லீரலை சேதப்படுத்தும்.
* ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ், பிபிசி மற்றும் பிஎஸ்சி போன்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள்.
எனவே நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு, கல்லீரலை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் டாக்டர் அறிவுறுத்தினார். ஆகவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications