Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வாயு தொல்லை உங்கள ரொம்ப இம்சை படுத்துதா? இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க...
Gastric Problem Home Remedies In Tamil: அடிக்கடி உங்கள் வயிறு வீங்கி உங்களை இம்சை படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் கடுமையான வாயு தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு வாயு பிரச்சனையானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
அதில் முக்கியமான ஒன்று நாம் உண்ணும் உணவுகள் தான். செரிமான மண்டலத்தில் வாயுக்கள் உருவாகி சரியாக வெளியேற்றப்படாமல் போகும் போது, அந்த வாயு அப்படியே சிக்கி, வயிற்று வீக்கம், உப்புசம், கூர்மையான வலியுடன் பிடிப்புகள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

இப்படியான வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலியில் இருந்து விடுவிடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக ஒருசில ஆயுர்வேத பானங்கள் இப்பிரச்சனையில் இருந்து உடனே விடுவிக்கும். நீங்கள் கடுமையான வாய்வு தொல்லையால் அவதிப்படும் போது இந்த பானங்களை குடித்தால், உடனடி நிவாரணம் பெறலாம். இப்போது அந்த பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
இஞ்சி டீ
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தான் இஞ்சி. மருத்துவ குணம் அதிகம் கொண்ட இஞ்சி செரிமான மண்டலத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதத்தின் படி, உணவிற்கு பின் ஒரு டம்ளர் இஞ்சி டீயை குடித்து வந்தால், அது செரிமானத்தைத் தூண்டி, வாயு உருவாவதைக் குறைத்து, வயிற்று உப்புசத்தில் இருந்து விடுவிக்கிறது. மேலும் வயிற்றில் வாயு தேங்கியிருந்தால், அதை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.
புதினா டீ
செரிமான பிரச்சனைகளில் இருந்தும், வாயு தொல்லைகளில் இருந்தும் விடுபட உதவும் மற்றொரு அற்புதமான ஆயுர்வேத பானம் தான் புதினா டீ. எனவே அஜீரண கோளாறு மற்றும் வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், புதினா டீயைக் குடித்து வர, செரிமான பாதையில் உள்ள தசைகள் தளர்வடைந்து, சிக்கிய வாயுவை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.
சீரக நீர்
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் சீரகம். இந்த சீரகமும் ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள். இதுவும் செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவும். இப்படிப்பட்ட சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்த, அந்நீரை செரிமான பிரச்சனையின் போது குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம் மற்றும் வயிற்று உப்புசமும் தடுக்கப்படும்.
சோம்பு டீ
பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பும் செரிமான பிரச்சனைகளைப் போக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகையாகும். இந்த சோம்பு கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் செரிமான பிரச்சனைகள் எதையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. முக்கியமாக வாயு தொல்லையால் அவதிப்படும் போது இதைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மல்லி டீ
சமையலில் நல்ல மணத்திற்காக சேர்க்கப்படும் மல்லி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. குறிப்பாக மல்லி வயிற்றில் தேங்கியுள்ள வாயுக்களை எளிதில் வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். அதற்கு மல்லியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பின் குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செரிமான பிரச்சனைகளின் போது குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அதோடு இந்த பானங்களில் உள்ள மருத்துவ பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications