Latest Updates
-
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்..
நீங்க 'சரக்கு' அடிக்கும்போது இந்த உணவுகள தெரியாம கூட சாப்பிடக்கூடாதாம்... இல்லனா ஆபத்துதானாம்!
பொதுவாக ஆல்கஹால் அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், அது தவறான உணவுகளுடன் சேரும்போது அதிக தீங்குகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். ஆம், மது அருந்தும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாடினாலும், விருந்தினர்களை உபசரிப்பதாக இருந்தாலும் அல்லது உங்கள் வீட்டிலேயே ஓர் மதுபான இரவை அனுபவிக்க விரும்பினாலும், சில விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆல்கஹால் உங்கள் உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மதுவை அளவாக உட்கொள்ளலாம்.

ஒருவர் எவ்வளவு அதிகமாக மது அருந்துகிறாரோ, அவ்வளவு அதிகமாக பசி எடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பசி எடுக்கும் நேரத்தில் பீட்சா, வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகள் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிட பலர் விரும்புவார்கள். அதற்கு காரணம், ஆல்கஹால் உங்கள் பசியை அதிகரிக்கிறது. ஆனால், அவை மோசமான உணவு இணைப்பு என்பதை தெரிந்துகொள்ளுலங்கள்.
மதுவுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பொதுவாக மது அருந்தும்போது, சில உணவுகளை ஆல்கஹாலுடன் சேர்த்து சாப்பிட பலர் விரும்புவார்கள். ஆனால், மது அருந்தும்போது, அவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. ஆம், நீங்கள் அளவோடு மது அருந்தும்போது, உட்கொள்ளும் உணவு வகைகளைக் கண்காணிப்பதும் முக்கியம்.
தவறான உணவு சேர்க்கை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பீர் மற்றும் ரொட்டி
பீர் மற்றும் ரொட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், அவை தீங்கு விளைவிக்கும் கலவை. அது உங்கள் உடலை நீரிழப்பு செய்கிறது. பீர் மற்றும் ரொட்டியில் அதிகளவு ஈஸ்ட் இருப்பதால், உட்கொள்ளும் மதுவை கல்லீரலால் செயல்படுத்த முடியாது.
உடலில் அதிகளவு ஈஸ்ட் இருப்பதால், செரிமான செயல்முறையை வயிற்றால் பூர்த்தி செய்ய முடியாது. இதனால், செரிமான பிரச்சினைகள் அல்லது வீக்கம் ஏற்படலாம்.
சாக்லேட்
சாக்லேட் சாப்பிடுவதால் கூடுதல் ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம் என்றாலும், அதை ஆல்கஹாலுடன் இணைப்பது நல்லதல்ல. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் போது, குடல் புறணிக்கு தீங்கு விளைவிக்கும் இரைப்பை குடல் பிரச்சனைகளை இவை தூண்டலாம்.
சாக்லேட்டில் காஃபின் மற்றும் கோகோ இரண்டும் உள்ளது. இது வயிற்றுப் பிரச்சனைகளை அதிகப்படுத்தி, தொடர்ந்து பசியை உண்டாக்கும். ஆதலால், மது அருந்தும்போது, சாக்லேட் சாப்பிடக்கூடாது.
பீட்சா
பொதுவாக மது அருந்தும்போது, பலர் பீட்சா சாப்பிட விரும்பலாம். ஆனால், இந்த கலவை ஆரோக்கியமானதல்ல. பீட்சாவும் மதுவும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஆல்கஹால், மாவை சரியாக ஜீரணிக்க முடியாது மற்றும் வயிற்றில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கூடுதலாக, பீட்சா உங்கள் இதய நோய் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
பீன்ஸ் அல்லது பருப்பு
பீன்ஸ் அல்லது பருப்பு போன்ற இரும்புச்சத்தின் நல்ல ஆதாரமான உணவுகளை செரிமானம் செய்வதை ஆல்கஹால் கடினமாக்குகிறது. ஆல்கஹால் மற்றும் பீன்ஸ் ஆகியவை குடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. இது உங்கள் உடலில் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
உப்பு உணவு பொருட்கள்
ஆல்கஹால் மற்றும் பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ் அல்லது பக்கோட்டாவை விட சிறந்த கலவை எதுவாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால், இந்த கலவை உங்களை ஆபத்தில் ஆழ்த்தும். உப்பு நிறைந்த உணவில் அதிக சோடியம் உள்ளடக்கம் இருப்பதால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். உண்மையில், அதிக உப்பு அளவுகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும், இது மது அருந்துவதை அதிகரிக்கிறது.
பால் பொருட்கள்
பாலாடைக்கட்டி, பால், ஐஸ்கிரீம், இனிப்பு, வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற பால் உணவுகளை மது அருந்துவதற்கு முன்பும் பின்பும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும். ஆல்கஹால் மற்றும் பால் பொருட்கள் ஒன்றாக எடுத்துக்கொள்வதால் வயிற்றில் தொற்று, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் கூட ஏற்படலாம்.
காரமான உணவுகள்
உப்பு நிறைந்த உணவுகளைப் போலவே, காரமான உணவுகளும் உங்கள் அமைப்பை பாதிக்கலாம். மதுவுடன் கூடிய காரமான உணவுகளை உண்பது உங்கள் வயிற்றை சீர்குலைத்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
காரமான உணவுகள் வயிற்றைக் காலியாக்கும் செயல்முறையைத் தாமதப்படுத்தி அமில வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீங்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு இந்த நிலை இன்னும் தீவிரமடையலாம். ஆதலால், மது அருந்தும்போது, இந்த உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

