Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
எச்சரிக்கை! இந்த 4 உணவுகள அடிக்கடி சாப்பிட்டா? உங்க பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் வளர ஆரம்பிக்குமாம்!
உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுகள் உங்கள் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் கட்டிகளையும் உண்டாக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், நீங்கள் சாப்பிடும் சில உணவு உங்கள் உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஒவ்வொருவரும் தங்கள் உட்கொள்ளும் உணவுக்கும் கட்டிகளின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதில் சில உணவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் உள்ளன.

உண்மையில், ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வில், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகம் உள்ள உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது. மேலும், சில உணவுகளும் நாள்பட்ட சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, புற்றுநோயையும் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய உணவுகளை பற்றியும் அவை எப்படி உங்களை பாதிக்கிறது என்பது பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சர்க்கரை
சர்க்கரை பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் மிகவும் சுவையாக இருக்கும். இனிப்பு உணவுகளை சாப்பிட அனைவரும் விருப்புவார்கள். ஆனால், இவை உங்கள் உடலில் தீவிரமான சுகாதார நிலையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, அந்த சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக வெறும் தண்ணீரை அதிகமாக குடியுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சிவப்பு இறைச்சி
பன்றி இறைச்சி மற்றும் பிற சிவப்பு இறைச்சிகள் பர்கர் போன்ற பல உணவுகளில் பிரதானமானவையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவை பெருங்குடல் புற்றுநோயின் அதிக ஆபத்துடன் தொடர்புடையவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், சிவப்பு இறைச்சிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
அதற்கு பதிலாக உங்கள் குடலுக்கு ஓய்வு கொடுக்க கோழி போன்ற மெலிந்த புரதங்கள் அல்லது டோஃபு போன்ற தாவர அடிப்படையிலான மாற்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஹாட் டாக் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்றவை பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பாதுகாப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்த சேர்க்கைகள் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் உடலில் புற்றுநோய் கட்டிகளை வளர்க்கலாம்.
குறிப்பாக வயிறு மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வளர வழிவகுக்கும். ஆதலால், பதப்படுத்தபட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மது
பெரும்பலான இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக மது அருந்துகிறார்கள். அதிகமாக மது அருந்துவது வாய், தொண்டை மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையே சீர்குலைக்கும். ஆதலால், இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது உடலுக்கும் வாழ்க்கைக்கும் நல்லது.
இறுதிக் குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமற்ற உணவுகள் உண்மையில் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை பாதிக்கும். அதனால், அதிகமாக அந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சாப்பிடும் உணவுகள் குறித்து மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பதப்படுத்தப்படாத உணவுகளை உண்ணுங்கள், சர்க்கரைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
(மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் உணவுமுறை மாற்றங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதலுக்கு எப்போதும் ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
