Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
சுட்டெரிக்கும் இந்த கோடைக்காலத்தில் உங்க உடலில் நீரின் அளவு குறையாம இருக்க இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க!
அனைவரையும் வாட்டி வதைக்கும் கோடைகாலம் வந்துவிட்டது, இந்த சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் இந்த பருவத்திற்கு ஏற்றவாறு நமது உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் நாம் அனைவரும் பலவிதமான உணவுகளை சாப்பிட்டு மகிழ்கிறோம். இருப்பினும், வானிலையில் ஏற்படும் மாற்றம் உணவிலும் மாற்றத்தை ஏற்படுத்த அறிவுறுத்துகிறது.
வெயில் காலத்தில் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த பருவக்காலத்தில் நமது உடல் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு நீரை இழக்கிறது. கோடைகாலத்தில் நீண்ட நேரம் நீரேற்றமாக இருக்க உதவும் உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், அதனுடன் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் வேறுசில உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுரைக்காய்
சுரைக்காய் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சுரைக்காயில் 96 சதவீத நீர்ச்சத்து நிறைந்துள்ளது. சுரைக்காயை சமைத்து சாப்பிட முடியவில்லை என்றால், காலையில் ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். அன்னாசி, சுரைக்காய் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் சாறு உங்களுக்கு போதுமான நீர்ச்சத்தை அளிக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்கிறது. வெள்ளரிக்காயில் இருக்கும் எலெக்ட்ரோலைட்டுகள் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
எலுமிச்சை
எலுமிச்சையின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். கோடைகாலத்தில் இதன் முக்கியத்துவம் இருமடங்காகிறது. எலுமிச்சை சாறு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் சிறந்தவை. கோடைக் காலத்தில், எலுமிச்சை சாறுகள் அதிகம் உட்கொள்வது கோடைக்காலத்தில் உங்களுக்கு அதிக நீரேற்றத்தைக் கொடுக்கும்.
பீன்ஸ்
பீன்ஸ் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். பீன்ஸ் சத்தானவை, குறைந்த கலோரிகள் மற்றும் வைட்டமின் கே, மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளன. இது உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் 92 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது மட்டுமின்றி வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த சிலுவைக் காய்கறியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தர்பூசணி
கோடைக்காலம் தர்பூசணி இல்லாமல் ஒருபோதும் முழுமையடையாது. தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்துடன் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் அத்தியாவசியமான ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்பிற்க்கும் உதவும்.
முள்ளங்கி
முள்ளங்கி 95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். நீரேற்றத்திற்கு உதவுவதுடன் இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் எடைக்குறைப்பிற்கும் உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

