Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா? அப்ப இனிமேல் இத வாங்குங்க...
வெங்காய விலை உயர்வால் பலர் வெங்காயத்தை வாங்கவும் முடியாமல், சமைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். இனிமேல் கவலை வேண்டாம். வெங்காயத்திற்கான சில மாற்றுப் பொருட்கள் உள்ளன.
வெங்காயம் சமையலில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை நாம் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு அஞ்சினோம். இப்போது தங்கத்துடன் போட்டி போடும் வகையில் வெங்காய விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயத்தை வாங்குவதற்கே பயமாக உள்ளது. ஆனால் வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது மிகவும் கடினம்.

நாம் சமைக்கும் ஒவ்வொரு சமையலிலும் வெங்காயம் முதன்மையான அடிப்படை பொருளாக சேர்க்கப்படுகிறது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, நிறைய கிரேவியைப் பெறவும் உதவுகிறது. ஆனால் வெங்காய விலை உயர்வால் பலர் வெங்காயத்தை வாங்கவும் முடியாமல், சமைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். இனிமேல் கவலை வேண்டாம். ஏனெனில் சமையலில் அதிக கிரேவியைப் பெறவும், சமையலின் சுவையை அதிகரிக்கவும் உதவும் சிறந்த மாற்று பொருட்களைக் குறித்து இப்போது பார்க்கப் போகிறோம்.

கடலை மாவு
நீங்கள் சமைக்கும் போது சமையலில் கட்டாயம் வெங்காயத்தை முற்றிலும் தவிர்ப்பது என்பது சற்று கடினம் தான். ஆனால் உங்களுக்கு கிரேவி அதிகமாக வேண்டுமானால், சமைக்கும் போது மிகச்சிறிய அளவு வெங்காயத்தை சேர்த்து, கிரேவிக்கு கடலை மாவை நீரில் கலந்து சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கிரேவியின் சுவை சற்று வித்தியாசமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்
சமையலில் வெங்காயத்தின் சுவைக்கும், மணத்திற்கும் இணையாக எதுவும் வர முடியாது. ஆனால் வித்தியாசமான ருசி என்று வரும் போது, சமையலில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொண்டாலே போதும், வெங்காயம் தேவையே படாது. வேண்டுமானால், இனிமேல் நீங்கள் சமைக்கும் கிரேவி முதல் சட்னி வரையிலான அனைத்து சமையலிலும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்துப் பாருங்கள்.

கடுகு பேஸ்ட்
கிழக்கத்திய பகுதிகளில் வலுவான மணத்திற்கும் சுவைக்கும் பயன்படுத்தப்படும் ஓர் பொருள் தான் கடுகு. கடுகு விதைகளை நீரில் ஊற வைத்து மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த கடுகு பேஸ்ட்டை சிக்கன், மீன் மற்றும் இதர அசைவ கிரேவிகளுடன் சேர்த்துக் கொண்டால், சுவை விசித்திரமாகவும், நல்ல மணமாகவும், அடர்த்தியான கிரேவியுடனும் இருக்கும்.

முந்திரி
சமையலில் முந்திரி மற்றும் வெங்காயம் இரண்டுமே முற்றிலும் வித்தியாசமான பொருட்கள். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் சமையலில் அடர்த்தியான கிரேவியைப் பெறவும், அற்புதமான சுவையையும் கொடுக்கும். வெங்காய விலை உயர்வால், கிரேவியில் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துவதற்கு பதிலாக, முந்திரி பேஸ்ட்டை கிரேவியில் சேர்த்துக் கொண்டால், நிறைய கிரேவி கிடைப்பதோடு, நல்ல சுவையுடனும் இருக்கும்.

தக்காளி
பெரும்பாலான குழம்பு வகைகள் மற்றும் கிரேவி வகைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் வெங்காயத்தின் விலை உயர்வால், தற்போது அதிகளவு வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாமல் பலர் தவிப்பார்கள். இந்நேரத்தில் கிரேவின் சுவை குறையாமல் இருக்க, வெங்காயத்துடன் வழக்கமாக சேர்க்கும் தக்காளியை விட இரண்டு மடங்கு அதிகமாக தக்காளியை சேர்த்தால், கிரேவி நன்கு அதிகமாகவும், சுவையுடனும் கிடைக்கும்.

க்ரீம்
நீங்கள் சமைக்கும் கிரேவி மற்றும் குழம்பின் சுவை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க நற்பதமான க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குழம்பு நல்ல வலுவான மணத்துடன் மட்டுமின்றி, அதிக கிரேவியையும் பெற உதவும்.

தயிர்
கிரேவி மற்றும் குழம்பைத் தயாரிக்கும் போது அத்துடன் சிறிது தயிரை சேர்த்துக் கொண்டால், அதன் சுவை அற்புதமாகவும், குழம்பு சற்று கெட்டியாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications