Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்!
ரம்ஜான் என்றாலே பலரது நினைவிற்கு வருவது பிரியாணி தான். அந்த பிரியாணியுடன் பல வித்தியாசமான நாவிற்கு விருந்தளிக்கும் படியான சுவைகளையுடைய ரெசிபிக்களையும் செய்து சுவைத்து மகிழலாம்.
ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது. கொரோனா ஊடரங்கால் ரம்ஜான் பண்டிகையை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் பலரும் வருத்தம் கொள்வதுண்டு. ஆனால் வெளியே உறவினர்களை காண முடியாவிட்டாலும், ரம்ஜான் பண்டிகையை வீட்டிலேயே பல வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சித்து சமைத்து சுவைக்கலாம் அல்லவா?

ரம்ஜான் என்றாலே பலரது நினைவிற்கு வருவது பிரியாணி தான். அந்த பிரியாணியுடன் பல வித்தியாசமான நாவிற்கு விருந்தளிக்கும் படியான சுவைகளையுடைய ரெசிபிக்களையும் செய்து சுவைத்து மகிழலாம். உங்களுக்கு இந்த ஐடியா இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை சில ருசியான மட்டன் மற்றும் சிக்கன் ரெசிபிக்களை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, ரம்ஜான் பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? ரம்ஜான் அன்று தலப்பாக்கட்டு பிரியாணியை வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அப்படின்னா படிச்சு ட்ரை பண்ணுங்க...

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு
ரம்ஜான் பண்டிகையன்று ஆந்திரா ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், அங்கு மிகவும் பிரபலமான மட்டன் கைமா குழம்பை சமைத்து சுவையுங்கள். இது நிச்சயம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை சிறப்பானது ஆக்கும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள, அதன் செய்முறையை படியுங்கள்.

காரைக்குடி கோழி குழம்பு
காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் அதன் செய்முறையை படிச்சு ட்ரை பண்ணுங்க...

சிக்கன் மலாய் டிக்கா
இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

திருநெல்வேலி ஸ்டைல்: சிக்கன் குழம்பு
திருநெல்வேலி என்றால் அல்வா மட்டும் பிரபலமல்ல, சிக்கன் குழம்பும் தான். அதிலும் இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இதனால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பு வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை
சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம்.

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு
கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு புலாவ், தேங்காய் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

காஷ்மீரி ரோகன் ஜோஷ்
காஷ்மீரி ஸ்டைல் ரெசிபிக்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு, சற்று காரமாகவும் இருக்கும். அதிலும் மட்டன் மற்றும் தயிர் கொண்டு செய்யப்படும் ரெசிபியான ரோகன் ஜோஷ் செய்வதற்கு ஈஸியாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

பெப்பர் சிக்கன் வறுவல்
ரமலான் மாத நோன்பை முடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் போது, நாவிற்கு விருந்தளிக்கும் வகையிலான ஓர் எளிமையான சிக்கன் ரெசிபியாக பெப்பர் சிக்கன் வறுவல் இருக்கும்.

க்ரீன் சில்லி சிக்கன்
உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications