Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
குளிர்காலத்தில் ஏன் கட்டாயம் கொய்யாப்பழம் சாப்பிடணும் தெரியுமா?
குளிர்காலத்தில் மட்டுமின்றி தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், தற்போது பலரும் அவதிப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பழங்களிலேயே ஆப்பிளை விட அதிகமான சத்துக்களைக் கொண்ட பழம் தான் கொய்யாப் பழம். ஒரு கொய்யாப்பழமானது 9 ஆப்பிள்களுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது. ஆப்பிளை விட தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கொய்யாப்பழத்தின் உட்பகுதி மட்டுமின்றி, வெளிப்பகுதியும் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் இது பல முக்கியமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்லது. முக்கியமாக கொய்யாப்பழம் ஆப்பிளை விட விலைக் குறைவானது.

ஆனால் குளிர்காலத்தில் பலர் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பதுண்டு. இதற்கு காரணம் கொய்யாப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தான். இருப்பினும் கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளதால், குளிர்காலத்தில் மட்டுமின்றி தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், தற்போது பலரும் அவதிப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது குளிர்காலத்தில் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொய்யாப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மட்டுமின்றி, வைட்டமின் சி உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் பி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரிகிறது.

மலச்சிக்கலை நீங்கும்
தற்போது பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கொய்யாப்பழம் உதவி புரியும். ஏனெனில் கொய்யாப்பழத்தில் உள்ள விதைகள் வலுவான மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

சர்க்கரை நோயைத் தடுக்கும்
கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம். ஏனென்றால் கொய்யாப்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. கூடுதலாக கொய்யப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால், அது இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும்.

மன அழுத்தத்தைப் போக்கும்
உங்களுக்கு மன அழுத்தம் அதிகம் உள்ளதா? அதை குறைக்க எளிய மற்றும் சிறந்த வழியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். ஏனென்றால் கொய்யப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தசைகளின் டென்சனைப் போக்குகிறது. எனவே ஒருவர் தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் மனதை அழுத்தமின்றி, அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.

எடை இழப்பிற்கு உதவும்
முக்கியமாக கொய்யாப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஏனெனில் இதில் புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் உள்ளது. இவை எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதோடு, தைராய்டு மெட்டபாலிசத்தை நிர்வகிக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications