Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மிளகாய்த்தூளை உங்க உணவில் தினமும் சேர்த்துகிறீங்களா? அப்ப உங்களுக்கான நல்ல செய்திதான் இது...!
அனைத்து மசாலாக்களிலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கும். அவை பல நூற்றாண்டுகளாக குணப்படுத்துதல் மற்றும் அவற்றின் சுவை ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து மசாலாக்களிலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கும். அவை பல நூற்றாண்டுகளாக குணப்படுத்துதல் மற்றும் அவற்றின் சுவை ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம்மில் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, மசாலா இல்லாத அல்லது மிளகாய் இல்லாத ஒரு உணவு உணவாகவே இருக்காது. சிவப்பு மிளகாய் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாவாகும்.

லால் மிர்ச் என்றும் அழைக்கப்படும், சிவப்பு மிளகாய் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பொதுவான உணவாக இருக்கிறது. அவை முதலில் உலர்த்தப்பட்டு பின்னர் ஒரு தூளாக அரைக்கப்படுகின்றன. மிளகாய் தூள் உணவிற்கு கார சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. செரிமானம், எடையை பராமரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், இரத்த நாளங்களை தளர்த்துதல் மற்றும் பலவற்றிற்கு உதவுகிறது. மேலும் அதன் ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது
மிளகாய் தூளில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால், இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

எடைக்குறைப்பில் உதவுகிறது
சிவப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் எடைக்குறைப்பை துரிதப்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது
சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பதுடன், நீண்ட நாள் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

தமனி அடைப்புகளை நீக்குகிறது
சிவப்பு மிளகாய் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களைத் தடுக்க உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளையும் கொண்டிருக்கின்றன. தமனிகளில் இருக்கும் அடைப்பதை நீக்குவதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது.

சருமம் மற்றும் முடியை பாதுகாக்கிறது
சிவப்பு மிளகாயின் முக்கிய கூறுகள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகும். இது உங்கள் முடி மற்றும் சருமத்தை நல்ல நிலையில்ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்
உங்களுக்கு தசை அல்லது மூட்டு வலி இருந்தால், சிவப்பு மிளகாயை தொடர்ந்து சாப்பிடுங்கள். இது வலி மற்றும் வீக்கத்தை விரைவில் குறைக்கும்.



Click it and Unblock the Notifications