Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த சட்னியை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க...
நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பல்வேறு உணவுப் பொருட்கள், பானங்கள் இருந்தாலும், நாம் தினமும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் சட்னி ஒன்று கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?
Coriander Mint Chutney To Reduce Cholesterol Levels: தற்போது நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகு போன்ற பொருளாகும். இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. நமது உடலில் உள்ள கல்லீரல் இந்த கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றன. இருப்பினும் நாம் உண்ணும் உணவுகளின் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேர்கிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) ஆகும். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, அதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கிறது. எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியம்.

நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பல்வேறு உணவுப் பொருட்கள், பானங்கள் இருந்தாலும், நாம் தினமும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் சட்னி ஒன்று கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? ஆம், நம்மால் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு என்று பிரத்யேகமாக பானங்களைத் தயாரித்து குடிக்க முடியாமல் போகலாம். ஆனால் இட்லி, தோசைக்கு நிச்சயம் சட்னியை செய்வோம். அப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சட்னியை செய்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கலாம் அல்லவா! இப்போது அந்த சட்னியை எப்படி செய்வது என்பதையும், அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளையும் காண்போம்.

தேவையான பொருட்கள்:
* கொத்தமல்லி - 50 கிராம்
* புதினா - 20 கிராம்
* பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
* பூண்டு - 20 கிராம்
* ஆளி விதை எண்ணெய் - 15 கிராம்
* இசப்கோல் - 15 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 10 மிலி
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
மிக்சர் ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சட்னி தயார்.

புதினா மற்றும் கொத்தமல்லியின் நன்மைகள்
புதினா மற்றும் கொத்தமல்லியில் குளோரோஃபில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு பொருட்களுமே இந்திய சமையலறையில் அவசியம் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகைகள் ஆகும். இந்த புதினா மற்றும் கொத்தமல்லியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன.

பூண்டு நன்மைகள்
ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட மற்றொரு பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த குழாய்கள் சுருங்குவதைத் தடுத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இசப்கோல் நன்மைகள்
இசப்கோல் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ராலை பித்த அமிலங்களுடன் பிணைத்து குறைக்கிறது. முக்கியமாக இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவி புரிகிறது.

ஆளி விதை நன்மைகள்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்னியை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
