Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முக்கியமான வைட்டமின்களும் அவை அதிகம் இருக்கும் உணவுகளும்
ஆரோக்கியமான வாழ்விற்கு சீரான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். வைட்டமின்களில் பல வகைகள் உள்ளது. இதில் சில வைட்டமின்கள் மிக முக்கியமானவை. எனவே அவை உள்ள உணவுகளை உணவில் சேர்த்துகொள்வது அவசியம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு சீரான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். அது நீர் உணவுகள் மூலம் கிடைத்தாலும் சரி, திட உணவுகள் மூலம் கிடைத்தாலும் சரி உங்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்கள் கட்டாயம் தேவை. வைட்டமின்கள் மட்டுமின்றி நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்து சத்துக்களும் தேவை.

இதில் வைட்டமின்களில் பல வகைகள் உள்ளது. இதில் சில வைட்டமின்கள் மிக முக்கியமானவை. எனவே அவை உள்ள உணவுகளை உணவில் சேர்த்துகொள்வது அவசியம். இந்த பதிவில் என்னென்ன வைட்டமின்கள் உள்ளது அவை என்னென்ன உணவுகளில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

வைட்டமின் ஏ
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு வைட்டமின் ஏ. நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்திற்கு இது அத்தியாவசியமானதாகும். எலும்பு, பற்கள், நரம்பு மண்டலம், கண் என அனைத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஏ அவசியமாகும். முட்டை, மீன், கேரட் மற்றும் பாலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

வைட்டமின் சி
வைட்டமின் சி தொற்றுநோய் பரவாமலும், காயங்கள் விரைவில் குணமாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், இரும்பு சத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. மேலும் இதுதான் சரும ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின் ஆகும். ப்ரோக்கோலி, மிளகு, பப்பாளி, சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்கள் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் டி
நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்து கால்சியம் ஆகும். இதனை நமது எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான அளவு வழங்குவது வைட்டமின் டி தான். வெண்ணெய், முட்டையின் வெள்ளைக்கரு, சில மீன்கள் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது.

வைட்டமின் ஈ
உடலில் உள்ள செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியமானதாகும். தசைகளை வலுப்படுத்த மற்றும் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடக்கூடிய இரத்த சிவப்பு அணுக்களை போராட வைக்கிறது. முட்டை, கோதுமை, காய்கறிகள் எண்னெய் மற்றும் சில விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.

வைட்டமின் கே
வைட்டமின் கே இரத்த நாளங்களின் ஆரோக்கியம், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் இரத்த கசிவை கட்டுப்படுத்த அவசியமான வைட்டமின் ஆகும். ஈரல், பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சியில் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் பி1(தயாமைன்)
நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீரமைப்பதில் வைட்டமின் பி1 முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பசியை கட்டுப்படுத்துவது, செரிமானம் மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட வைப்பது போன்ற வேலைகளையும் செய்கிறது. முட்டை, கொட்டைகள், பால், பருப்பு மற்றும் பட்டாணியில் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் பி2(ரிபோபிளவின்)
தொற்றுநோய்களுக்கு எதிராக நமது உடல் போராட வைட்டமின் பி2 அவசியமாகும். மேலும் பொலிவான சருமம், சீரான பார்வை மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி போன்றவற்றையும் செய்கிறது. பால் பொருட்கள், அவகோடோ, காளான், உருளைக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் பி2 உள்ளது.

வைட்டமின் பி3(நியாசின்)
இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் நரம்பு மற்றும் இரத்த நாளங்களை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் இது கொழுப்பின் அளவை குறைக்கும் ஆற்றலுடையது. டூனா மீன், காளான், பீனட் மற்றும் பட்டாணியில் வைட்டமின் பி3 உள்ளது.

வைட்டமின் பி5(பெண்தொடேனிக் அமிலம்)
வைட்டமின் பி6 கொழுப்பு குறைப்பு, ஹீமோகுளோபின் மற்றும் ஹார்மோன்கள் சமநிலை மற்றும் சர்க்கரை அல்வாய் குறைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. இறைச்சி, முழுதானியங்கள், பால் பொருட்கள், மீன் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications