Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
பால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா?
பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவது உண்மைதான் என்றாலும் அதிகளவு பால் குடிப்பது உங்கள் எலும்புகள் முறிவடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் அன்றாடம் கலந்திருக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது பால்தான். பால் என்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும். பால் அனைத்து விதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் அதில பல பக்கவிளைவுகளும் உள்ளது.

பொதுவாக பால் எலும்புகளை பலப்படுத்தும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவது உண்மைதான் என்றாலும் அதிகளவு பால் குடிப்பது உங்கள் எலும்புகள் முறிவடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.

பாலும் எலும்பு முறிவும்
சமீபத்தில் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவு பால் குடிப்பது எலும்பு முறிவு, இதய கோளாறுகள், வயதானவர்களிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயம் என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. தினமும் அதிகளவு பால் குடிப்பது நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 15 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கான பாதிப்பு
பொதுவாக ஆண்களுக்கு பாலால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட குறைவுதான். ஆண்களுக்கு பாலால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களை விட 12 சதவீதம் குறைவு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் பெண்கள் அதிகளவு சீஸ் மற்றும் தயிர் சாப்பிடும்போது அது அவர்களின் இறப்பு விகிதத்தை அதிகரிப்பதுடன் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியம்
நீங்கள் தினமும் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தால் இந்த ஆய்விற்காக பயந்து அதனை நிறுத்த வேண்டாம். ஆனால் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், சீராக்கவும் பாலை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் பாலில் உங்களுக்கு போதுமான அளவு கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

கால்சியத்தால் ஏற்படும் பிரச்சினை
எலும்புகளின் ஆராயத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்று. இது பாலில் அதிகம் உள்ளது. ஆனால் இது மட்டுமே எலும்புகளை பலப்படுத்தாது ஏனெனில் அதற்கு பல ஊட்டச்சத்துக்களும் தேவை. எனவே சத்துள்ள உணவுகளையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் எலும்புகளை பலப்படுத்த பின்வரும் ஆரோக்கிய முறைகளை பின்பற்ற வேண்டும்.

மாற்று வழியில் பாலை எடுத்துக்கொள்ளவும்
தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் பாலை விட குறைவான ஆரோக்கிய பாதிப்புகளையே ஏற்படுத்தும். தினமும் மூன்று டம்ளர் பால் குடிப்பதை விட காலை நேரத்தில் ஒரு கப் தயிர் அல்லது சீஸ் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். திட பொருட்களான இவற்றில் பாலை விட அதிக சத்துக்கள் உள்ளது.

பால் குடிக்கவில்லையெனில் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்
சோயா, பட்டாணிகள், கீரைகள், ப்ரோக்கோலி, பாதாம், பீன்ஸ் போன்ற பொருட்களில் பாலில் இருக்கும் அளவிற்கு கால்சியம் உள்ளது. பால் குடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சோயா பால் அல்லது பாதாம் பாலை குடிக்கலாம்.

காய்கறிகள்
போதுமான அளவு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் புரத உணவுகளை அதிகளவில் சாப்பிடுங்கள். இவை பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி குறிப்பாக கால்சியம் அதிகம் உள்ளது. இவை உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு அதன் அமைப்பையும் சீராக்குகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இதில் குறைந்தளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களே உள்ளது. மேலும் இதில் அதிகளவு சோடியம் உள்ளது. இந்த அதிகளவு உப்பு உங்கள் உணவில் கால்சியத்தை அதிகரிப்பதுடன் எலும்புகளின் அடர்த்தியையும் குறைக்கும்.

வைட்டமின் டி
உடலில் எப்பொழுதும் வைட்டமின் டி அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானது. உங்கள் மருத்துவரிடம் சென்று அடிக்கடி வைட்டமின் டி யின் அளவை பரிசோதித்து கொள்ளவும். இதனை உணவுகளில் இருந்து போதுமான அளவு பெறுவது என்பது கஷ்டம்தான்.



Click it and Unblock the Notifications











