பன்னீர் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதுதானா?

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த பன்னீர் பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே உருவாக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. இதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை இங்கே பார்க்கலாம்.

இன்றைய இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர்தான். சென்ற தலைமுறை வரை வெகுசிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த பன்னீர் நாகரீக வளர்ச்சியால் இன்று கிட்டத்தட்ட அனைவரின் இல்லத்தையும் சென்றடைந்து விட்டது என்றே சொல்லலாம்.

Health benefits and side effects of paneer

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறிவிட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம். அதுமட்டுமின்றி பன்னீரை அதிக குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த பன்னீர் பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே உருவாக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. இதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுமஸ்தான உடலுக்கு

கட்டுமஸ்தான உடலுக்கு

100கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. எனவே கட்டுமஸ்தான உடலை விரும்புபவர்கள் பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மேலும் இது பசியை கட்டுப்படுத்துவதால் அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம்

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம்

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

இளைஞர்கள் பலரும் சருமம் ஆரோக்கியமாக இருக்க அதிக செலவு செய்கிறார்கள். ஆனால் பன்னீர் இந்த வேலையே மிகசுலபமாக செய்யக்கூடியது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் செலேனியம் சரும பொலிவை அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது பன்னீரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கிறது. இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் பன்னீர் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது குறைகிறது. இது ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஜிங்கானது உயிரியல் செயல்பாடுகளை அதிகரிக்க அவசியமான ஒன்று. ஜிங்க் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மைக்குறைவை போக்க கூடிய ஒன்று. ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் தொடர்பான பிரச்சினைகளான உற்பத்தி குறைவு, தரம் குறைவு போன்ற பிரச்சினைக்ளுக்கு ஜிங்க் மிகச்சிறந்த மருந்தாகும். எனவே பன்னீரை தொடர்ந்து உணவில் சேர்ப்பது ஆண்மைகுறைவிற்கான மிகச்சிறந்த தீர்வாகும்.

நினைவாற்றல்

நினைவாற்றல்

பன்னீரில் உள்ள வைட்டமின் பி குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, இது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. இது குழந்தைகளின் கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

இத்தனை நன்மைகள் கொண்ட பன்னீரில் பக்கவிளைவுகள் இல்லாமல் இல்லை. எந்தவொரு ஆரோக்கியமான உணவிலும் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பன்னீரில் அவை கொஞ்சம் அதிகம் உள்ளது. பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக கொழுப்பு

அதிக கொழுப்பு

பன்னீரில் அதிகளவு கொழுப்பு உள்ளது. ஏற்கனவே கொழுப்பு உள்ளவர்கள் பன்னீர் சாப்பிடும்போது துஆ அவர்கள் கொழுப்பின் அளவை உடனடியாக அதிகரிக்கும். இதனால் உச்சகட்டமாக மாரடைப்பு வரை கூட ஏற்படலாம். எனவே கொழுப்பு உள்ளவர்கள் பன்னீர் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

சிலருக்கு பால் பொருட்களால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்டவர்கள் பன்னீரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பாலை காட்டிலும் அதிகளவு அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

தரமற்ற பன்னீரை சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதேபோல பயன்படுத்தும் காலம் முடிந்த பன்னீர் உபயோகிக்கும்போது வயிற்றுப்போக்கு, இரைப்பை பிரச்சினைகள் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

பன்னீரில் அதிகளவு சோடியம் உள்ளது. இது மனஅழுத்தத்தை அதிகரிக்க கூடிய ஒன்று. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதிகளவு சோடியம் உடலில் சேரும்போது அது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion