இந்த வீக் எண்ட் வெளிய போறீங்களா?... இதெல்லாம் எடுத்து வச்சீங்களான்னு செக் பண்ணிக்கோங்க...

Posted By: Sam Asir
Subscribe to Boldsky

கோடை விடுமுறை நெருங்கி விட்டது. விடுமுறை என்றாலே அது பயணத்திற்கான நேரம். கார் பயணங்கள் அதிகமாகிவிட்ட காலம் இது. நீண்ட பயணங்கள் பல நேரங்களில் சலிப்பை தந்து விடும். சலிப்பாக உணரும் நேரங்களில் இயல்பாகவே மனம், 'நொறுக்குவதற்கு ஏதாவது கிடைக்குமா?' என்று எதிர்பார்க்கும். சலிப்பை மறக்க, நொறுக்குத் தீனி எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தால் போதும்.

சர்க்கரை, கலோரி, புரோட்டீன், க்ளூட்டன், ஜிஎம்ஓ என்று உணவினை குறித்து ஏகப்பட்ட வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்திருக்கும் காலம் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டி ட்ரிப் பிளான்

குட்டி ட்ரிப் பிளான்

ங்காவது செல்லும்போது பெரும்பாலும் சாக்லேட், பட்டர், லெமன், ஆப்பிள் இதெல்லாம் நிச்சயம் வைத்திருப்போம். எல்லா பயணங்களிலும் ஒரே மாதிரியாக சாப்பிட முடியாதல்லவா... அதற்கேற்றாற்போல ஸ்நாக்ஸ்கள் இருந்தால் தான் அந்த பயணமே மகிழ்ச்சியாக இருக்கும். உடல் எடையை குறித்த, சர்க்கரை நோயைக் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விடுமுறையை கழிக்கிறோம் என்று மனம்போல எதையாவது வாயில் போட்டு நொறுக்கிவிட்டு, உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டுவிடக்கூடாது. வழியில் நெடுஞ்சாலை ஓரங்களில், தெருக்களில் கிடைப்பதையெல்லாம் சாப்பிடுவது நலம் பயக்காது.

மிக்ஸ்டு நட்ஸ்

மிக்ஸ்டு நட்ஸ்

'ஸஹல்லே ஸ்நாக்ஸ்' என்பது அமெரிக்காவில் பெயர்பபெற்ற நொறுக்குத் தீனி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் பல்வேறு முந்திரி தயாரிப்புகள் தரமானவை. அதேபோன்று நீங்களும் தரமான முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்காக எடுத்துக் கொள்ளலாம். மிக்ஸட் நட்ஸ் பல்வேறு ருசிகளில் கிடைக்கிறது. தரமான நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குங்கள். முந்திரி பருப்பில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் தலை கேசத்திற்கு பலனளிக்கும் பயோட்டின் சத்துகள் காணப்படுகிறது. வெவ்வேறு ருசிகளில் வாங்குங்கள்; பயணத்தில் சலிப்பே தட்டாது.

ஹம்மஸ் - மசித்த கொண்டைக்கடலை

ஹம்மஸ் - மசித்த கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையை மசித்து செய்யப்படும் ஒரு வகை உணவுப்பொருள் 'ஹம்மஸ்'. நார்ச்சத்து, அதிக புரதம், குறைவான மாவுச்சத்து என்னும் கார்போஹைரேட் அடங்கியது. இப்போது 'ஹம்மஸ்' வெவ்வேறு விதங்களில் கிடைக்கிறது. சிவப்பு குடமிளகாய் சேர்த்தும் செய்யப்படுகிறது. காய்கறிகளுடன் அல்லது கிராக்கர் எனும் நொறுக்குத் தீனியுடன் சேர்த்து சான்ட்விச் போன்று சாப்பிடலாம். வெவ்வேறு எடைகள் கொண்ட கப்களில் இது கிடைக்கிறது.

புரோட்டீன் பார்

புரோட்டீன் பார்

'புரோட்டீன் பார்' சாப்பிடுகிறேன் என்று கண்ட வேதிப்பொருள் கலந்த பொருட்களை வாங்கிவிடக்கூடாது. ஹார்மோன் இல்லாத இறைச்சியில் செய்யப்படும் புரோட்டீன் பார்களை கவனித்து வாங்குங்கள். அமெரிக்காவில் குறிப்பிட்ட 'எபிக்' என்னும் நிறுவனம் இதுபோன்ற வேதிப்பொருட்கள் இல்லாத புரோட்டீன் பார்களை (ஜெர்கி பார்) தயாரிக்கிறது. உலர் பழங்கள் மற்றும் இயற்கைமுறை தயாரிப்பிலான, தீங்கு விளைவிக்கும் க்ளூட்டன் புரதம் தவிர்த்த இறைச்சிகளால் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பார்களையே வாங்குங்கள்.

பீநட் பட்டர்

பீநட் பட்டர்

'பீநட் பட்டர்' என்று அழைக்கப்படும் நிலக்கடலை வெண்ணெய் புரதம், நார்ச்சத்து அடங்கியது. இயற்கை உணவு பொருட்கள் மட்டுமே அடங்கிய நிலக்கடலை வெண்ணெய், எத்தனை புதிய உணவு பொருட்கள் வந்தாலும் தன் இடத்தை விட்டுக் கொடுக்காதது. அதுவும் வாழைப்பழத்தோடு சேர்த்து உண்டால் இதற்கு இணையில்லை.

நியூட்ரீஷன் பார்கள்

நியூட்ரீஷன் பார்கள்

'சூப்பர் ஸ்நாக்ஸ்' அதாவது 'நொறுக்குத் தீனிகளின் ராஜா' என்று இதை அழைக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் இல்லை; க்ளூட்டன் என்னும் தீங்கு தரும் புரதம் இல்லை என்பது இதன் சிறப்பு. வெறுமனே 110 கலோரிகள் மட்டுமே கொண்ட இந்த தட்டைகளில் சால்மன் மீனைக் காட்டிலும் அதிக ஒமேகா-3 சத்து அடங்கியுள்ளது. பல்வேறு ருசிகளில் கிடைக்கும் இதையும் தைரியமாக வாங்கி உண்ணலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

'நாள்தோறும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரே தேவையில்லை' என்று பாட்டி காலத்தில் இருந்து கேள்விப்பட்டு வருகிறோம். இயற்கை தந்துள்ள ஒரு வரப்பிரசாதம் ஆப்பிள் பழம். பெருவயிற்றை குறைக்கக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல், ஆப்பிள் சாப்பிடுங்கள்; இதயத்திற்கும் நல்லது.

பாப்கார்ன்

பாப்கார்ன்

பாப்கார்ன், குறைந்த கார்போஹைரேட், அதிக நார்ச்சத்து கொண்டது. தேவையற்ற வேதிப்பொருள்கள் இல்லாதது. நான்கு கப் பாப்கார்ன் சாப்பிட்டாலும் வெறும் 150 கலோரி மட்டுமே கிடைக்கும். தரமான சோளப்பொறி (பாப்கார்ன்) உங்கள் பயணத்தை சுவாரஸ்யமாக்கும்.

ஸீவீட் என்னும் கடற்பாசி உணவுகள்

ஸீவீட் என்னும் கடற்பாசி உணவுகள்

கண்ட பொருளும் சேர்க்கப்பட்ட சிப்ஸ் போன்ற பாக்கெட் நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக ஸீவீட் என்னும் கடற்பாசிகளால் தயாரிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை சாப்பிடலாம். வறுக்கப்பட்ட கடற்பாசி சிப்ஸ் போன்று கிடைக்கிறது. மிகக்குறைந்த அளவு 25 கலோரி கொண்ட உணவு. நுண்சத்துகள், எலும்பை உறுதியாக்கும் இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் அடங்கியது ஸீவீட். சாப்பிட்டு பயன் பெறுங்கள்.

ஃப்ளாஸ் கிராக்கர்ஸ்

ஃப்ளாஸ் கிராக்கர்ஸ்

பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றால், தேவையான அளவு உப்பு சேர்க்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு வகை நொறுக்குத் தீனி ஃப்ளாஸ் கிராக்கர்ஸ். க்ளூட்டன் என்னும் ஆபத்தான புரத பசை அறவே இல்லாத உணவு. உங்கள் உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. உடலியக்கம் என்னும் மெட்டோபாலிஸத்தை அதிகப்படுத்தக்கூடியது.

சீஸ்

சீஸ்

பள்ளிக்கூட நாட்களிலிருந்து நீங்கள் விரும்பி உண்ணும் சீஸ் ஒரு நல்ல உணவு. தட்டையாக, பட்டையாக, வட்டமாக வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கக்கூடியது. கால்சியம், புரதம் போன்ற சத்துகள் அடங்கியது. தனியாகவும் சாப்பிடலாம்; மற்ற உணவுகளோடு சேர்த்தும் உண்ணலாம்.

வறுத்த கடலை

வறுத்த கடலை

பதற்றத்தை, டென்ஷனை குறைக்க நல்ல மாற்று வறுத்த கொண்டைக்கடலை என்னும் ரோஸ்டட் சிக்பீஸ். பயணம் என்றாலே பதற்றம், கோபம் எல்லாம் இருக்கும். டிராபிக் ஜாம் டென்ஷனா? யாராவது காரில் இடித்ததால் கோபமா? 'டக்'கென்று வாயை திறந்து ஒரு கைப்பிடி வறுத்த கடலையை உள்ளே போடுங்கள். டென்ஷன் ஃப்ரீயாகி விடுவீர்கள். வைட்டமின் பி6 சத்து நிறைந்த இந்த உணவு, மூளையில் செரோடோனின் மற்றும் டோபோமைன் ஆகியவை சுரப்பதை தூண்டுகிறது. ஆகவே, டென்ஷன் மறைந்து சந்தோஷம் பிறக்கிறது. ஆகவே, பயணத்தின்போது மறக்காமல் வறுத்த கொண்டைக்கடலையை கொண்டு செல்லுங்கள்.

ஆலிவ் பழங்கள்

ஆலிவ் பழங்கள்

ஒலிவ பழங்கள் துளையிடப்பட்டு, உள்ளே உணவு பொருட்கள் வைக்கப்படுகின்றன. பல்வேறு ருசிகளில் இது தயாரிக்கப்படுகிறது. பசியை ஆற்ற மட்டுமல்ல, இருதய ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.

புரூட் ஸ்டிரிப்

புரூட் ஸ்டிரிப்

குழந்தை பருவத்திலிருந்து சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு புரூட் ஸ்டிரிப். ஒவ்வொரு ஸ்டிரிப்பும் வெறும் 50 கலோரிகளையே கொண்டது. ஆனால், சர்க்கரை கொஞ்சம் அதிகமான பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புரூட் சிப்ஸ்

புரூட் சிப்ஸ்

எந்த உணவுப் பொருளையும் வாங்கும்போது, அதில் என்னவெல்லாம் சேர்ந்துள்ள என்ற பட்டியலை படித்து சோர்ந்து போகிறோமல்லவா? அந்த கவலையே வேண்டாம்! புரூட் சிப்ஸ் எந்தக் கலப்படமுமில்லாத இயற்கை சார்ந்த உணவு.

ஃபிரைடு பீன்ஸ்

ஃபிரைடு பீன்ஸ்

நட்ஸ் வகைகளையே சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டீர்களா? ரோஸ்டட் பீன்ஸ் எனப்படும் வறுத்த பீன்ஸ் உங்களுக்கு நல்ல மாற்று. 100 கலோரி ஆற்றல் கொடுக்கக்கூடிய பீன்ஸில் 11 கிராம் புரத சத்து உள்ளது என்பது கூடுதல் தகவல்.

பீன்ஸ் சிப்ஸ்

பீன்ஸ் சிப்ஸ்

சிறந்த 35 வகை சிப்ஸ்களுள் ஒன்றாக தர வரிசை பெற்றது பீன்ஸ் சிப்ஸ். சாலை பயணம் ரொம்ப போரடித்தால் பீன்ஸ் சிப்ஸ் உங்களுக்கு உதவும். இயற்கை சத்து மிக்க, நார்ச்சத்து நிறைந்த உணவு. ஆகவே, இதை சாப்பிட்டால், தேவையில்லாமல் டிரட் மில் பரிசோதனையெல்லாம் செய்யவேண்டியதிருக்காது.

கிரினொலா பைட்ஸ்

கிரினொலா பைட்ஸ்

ஓட்ஸ், நட்ஸ் மற்றும் தேன் போன்றவை சேர்த்து செய்யப்படும் கிரினொலா பைட்ஸ் வெவ்வேறு ருசிகளில் கிடைக்கும். எந்த ருசியையும் புறக்கணிக்க இயலாது. ஆரோக்கியமான நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம், தேவையான அளவு கார்போஹைரேட் நிறைந்த சமச்சீர் உணவு இது.

காரட் ஸ்டிக்ஸ்

காரட் ஸ்டிக்ஸ்

கண்ட பொருளையும் சேர்க்காமல் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான, சுவையான உணவு காரட் துருவல் என்னும் காரட் ஸ்டிக்ஸ். நல்ல காரட்டை குச்சி போன்று வெட்டி காரட் ஸ்டிக்ஸ் செய்யலாம். தனியாகவும் சாப்பிடலாம். மற்ற உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். எந்த கவலைக்கும் காரணமாக ஆரோக்கியமான உணவு.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்களில் 40 கிராமில் 220 கலோரி ஆற்றல் இருக்கிறது. ஆல்மௌண்ட் என்னும் வாதுமை மற்றும் கோகோ வெண்ணெயின் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அடங்கியது டார்க் சாக்லேட்.

ஸ்பார்க்கிளிங் வாட்டர்

ஸ்பார்க்கிளிங் வாட்டர்

குளிர்பானங்களை தேவையில்லாமல் குடித்து வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை தவிர்க்க, பயணத்தின்போது குறைந்த கலோரி மற்றும் குறைந்த சர்க்கரை அளவுள்ள கார்போனேட் வாட்டர் எனப்படும் சோடாவை அருந்துங்கள். பயணம் சிறப்பாக அமைய அதிக நெடியில்லாத, அதிக உப்பில்லாத, அதிக இனிப்பும் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோடை விடுமுறை பயணம், மறக்க இயலாத இனிய அனுபவங்களால் நிறைந்திட வாழ்த்துகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health
English summary

20 Best Road Trip Snacks on the Planet

Chocolate and peanut butter, apples and brie, tequila and lime. Do you know another pair you’re subconsciously obsessed with? Snacking and boredom
Story first published: Thursday, March 29, 2018, 17:20 [IST]