Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க...
ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. அதற்கு உணவுகள் மூலம்தான் தீர்வுகாண முடியும். அவை இதோ
எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஆஸ்துமா மட்டும் நிரந்தரமாக குணமாவதே இல்லை. மருந்து மாத்திரைகள் மூலம் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே முடிகிறது. ஆனால் ஒன்றை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். எந்த நோயாக இருந்தாலும் அதற்கு முதன்மையான தீர்வு உணவிலிருந்து தான் கிடைக்கும்.
மருந்துகளெல்லாம் சப்ளிமமெண்ட்ரிகள் போலத்தான். ஆனால் நாமோ மருந்து மாத்திரைகளை முதன்மையாக எடுத்துக் கொண்டு, உணவை இரண்டாம் பட்சமாக நினைத்து சாப்பிடுகிறோம்.

ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். ஆஸ்துமா என்பது ஒரு பிரச்சினை மட்டுமல்ல. அது மற்ற சில பிரச்சினைகளையும் நம்முடைய உடலில் தூண்டிவிடும். அதைவிட மிக முக்கியமான விஷயம் சுவாசிப்பதற்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தும். அதாவது ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்துவதற்கு இதுவரை எந்த மருந்துகளும் இல்லை. ஆனால் இந்த அற்புதத்தை சில உணவுகளால் செய்து காட்ட முடியும். அப்படிப்பட்ட அற்புத உணவுகள் பற்றி இங்கே காண்போம்.

ஃப்ரக்கோலி
சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவின்படி, ஃப்ரக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கவும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவும் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஃப்ரக்கோலியை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், மூச்சுத்திணறல் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.

அவகேடோ
ஆஸ்துமாவிலிருநு்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த தீர்வாக அவகேடோ இருக்கும். குறிப்பாக, ஆஸ்துமா இருக்கும் சிலருக்கு வால்நட் போன்ற நட்ஸ்களால் அழற்சி இருக்கும். அத்தகைய அழற்சி இருப்பவர்களுக்கு அவகுடோ மிகச்சிறந்த உணவாக இருக்கும். குறிப்பாக, அவகேடோவில் உள்ளடங்கியுள்ள குளுட்டாதையோன் செல்களில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸை பாதுகாக்கிறது. அதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலும் கொண்டது.

ஆப்பிள்
ஆப்பிளும் ஆஸ்துமாவுக்கு சிறந்த பலனளிக்கும் என் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவிலான பயோ பிளவனாய்டுகள் இருக்கின்றன. அதனால் ஆப்பிள் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

வாழைப்பழம்
வாழைப்பழம் மூச்சுவிடுதலில் உள்ள சிரமங்களைத் தீர்க்கிறது. அதனால் தான் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வாழைப்பழத்தை முதன்மையாக பரிந்துரைக்கப்படுகிறது. வாழைப்பழத்தில் பைரிடாக்சைல் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வைட்டமின் பி6 ம் நிரம்பியிருக்கிறது. குறிப்பாக, மூச்சுக்குழாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைப்பகுதிக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

இஞ்சி
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுப் பிரச்சினையில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் மற்றொரு அற்புத மருந்து தான் இஞ்சி. இதில் மிக அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது. அதனால் இஞ்சி அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள் மூலமும் நேரடியாக இஞ்சியையும் கூட சாப்பிடலாம். நல்ல தீர்வைக் கொடுக்கும்.

ஸ்பின்னாக்
ஸ்பின்னாக் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. ஆஸ்துமாவின் ஆபத்தையும் அதனால் உண்டாகும் சிரமங்களையும் மிக வுமாக எதிர்க்கும் ஆற்றல் ஸ்பின்னாக்கிற்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.

ரோஸ்மேரி
ரோஸ்மேரியில் நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றது. மூச்சுக்குழாயை சுத்தப்படுத்துதல், ஆஸ்துமா ஆகியவற்றை தீர்ப்பதற்கு இந்த ரோஸ்மேரி முதன்மையானதாக பரிந்துரை செய்யப்படுகிறது.

சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களும் மூலக்கூறுகளும் ஆஸ்துமாவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. சிலருக்கு சூரியகாந்தி விதைகள் அழற்சியை ஏற்படுத்தும். அதனால் இதை சாப்பிடும் முன் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

புதினா
புதினாவில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளும் மூச்சுப் பிரச்சினையையும் மூச்சுக் குழாய்களும் சுத்தப்படுத்துகிறது. இது ஆஸ்துமாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த ஆறுதலையும் தீர்வையும் தருகிறது. மூச்சுக்குழாய் தொடர்புடைய பிரச்சினைக்கான மருந்துகளில் புதினாவின் எக்ஸ்ட்ராக்ட் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

வைட்டமின் சி
மேற்கண்ட எல்லாவற்றையும் போல, ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த உணவுகளாக வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இருக்கின்றன. இது மூச்சுக்குழாயை சுத்தப்படுத்தி, மிகச்சிறந்த நோயெதிர்ப்புப் பொருளாக செயல்படுகிறது.
பிறகென்ன மாத்திரை, மருந்துகள் எதுக்கு. இந்த உணவுகளை சாப்பிடுஞ்க. ஆஸ்துமாவை அடியோடு ஒழிக்கப் பாருங்க.



Click it and Unblock the Notifications
