Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குளிக்கும் முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க...
இங்கு குளிக்கும் முன் ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான உண்மையான காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம்? குட்டித் தூக்கம் போடுவோம்? அல்லது ஒரு கப் டீ குடிப்போம்? ஆண்களை எடுத்துக் கொண்டால், ஒரு சிகரெட் அடிப்பார்கள். ஆனால், நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கமும் கூட.
நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க விடமாட்டார்கள். சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது என்று பலமுறை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவர்களிடம் ஏன் என்று காரணம் கேட்டால், நல்லதல்ல என்று மட்டும் சொல்வார்கள்.
அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் மட்டும் உள்ளது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குளிக்கும் போது நடக்கும் செயல்
குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

ஏன் சாப்பிட்டு குளிப்பது வீண்?
உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது

குளித்த பின் உண்பதால் நேரும் நன்மைகள்
ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.

சாப்பிட்ட பின் குளிப்பதால் சந்திக்கும் விளைவு
உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

குறிப்பு
இந்து மத நூல்களின் படி, குளித்து முடித்த பின் ஒரே உடையை சாப்பிடும் போதோ, படிக்கும் போதோ அல்லது கடவுளைத் தொழும் போதோ அணியக்கூடாதாம். எனவே தினமும் உடையைத் தவறாமல் மாற்றுங்கள். இதனால் வேறு ஏதேனும் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, நம் உடல் சுகாதாரமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
