Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
காஃபி குடிக்கப் போகிறீர்களா? கொஞ்சம் ஜாக்கிரதை
காஃபி குடிக்க யாருக்குதான் பிடிக்காது. அதன் நிறமும் மணமும் எல்லாரையும் மயக்கும் குணமும் கொண்ட சுவை எல்லாரையும் கட்டிப்போட வைக்கும்.
நிற்க.. காஃபி நீங்கள் குடிக்கலாம். ஆனால் அதற்கு வரைமுறை உள்ளதாம். விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாங்க அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

காஃபியில் காஃபின் என்கின்ற பொருள் உள்ளது. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதனை 4 மற்றும் 5 முறை குடிக்கும் பெண்களுக்கு என்டோமெட்ரியோஸிஸ் தாக்கும் அபாயம் உள்ளது என கூறுகின்றனர்.
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
பொதுவாக கருப்பைக்கு உள்ளே வளரும் திசுக்கள், கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அந்த நோய்க்கு எண்டோமெட்ரியோஸிஸ் என்று பெயர்.
ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் பெண்களுக்கு சுரக்கும். இதுவே பூப்படைவதற்கும், தாய்மையடைவதற்கு காரணம். இந்த ஈஸ்ட்ரோஜன் அளவுக்குஅதிகமாக சுரந்தால், எண்டோமெட்ரியோசிஸ் வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சரி அதற்கு காபி குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேக்கறீர்களா? இன்னும் விரிவாக படியுங்கள்.
கஃபைன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் :
ஒரே ஒரு கப் காஃபி குடிக்கும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு, காஃபியே குடிக்காதவர்களை விட மிக அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர் ஆய்வின் முடிவில் கூறியிருக்கின்றனர். அப்படியெனில் தினமும் 4, 5 முறை காஃபி குடிப்பவர்கள்க்கு 70 % அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் .
நமது உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மூன்று வகையாக பிரிக்கலாம். அவை ஈஸ்ட்ரான், ஈஸ்ட்ரையால் மற்றும் ஈஸ்ட்ரேடியால்.
இதில் மூன்றாவதாக சொல்லப்பட்ட, ஈஸ்ட்ரேடியால் எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் வர காரணமாகிறது. மேலும் இது சில வகை புற்று நோயை உருவாவதற்கும் காரணமாகிறது.
காஃபின் , இந்த வகை ஈஸ்ட்ரேடியாலை அதிகரிக்க தூண்டுகிறது. இது கல்லீரலின் செயலையும் பாதிக்கிறது.
மேலும் அட்ரினல் சுரப்பியின் செயல்களை தடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் என பல்வேறு பிரச்சனைகளை கொண்டு தருகிறது.
ஒரு முறை காஃபி குடிக்கலாம் தப்பில்லை அல்லது குடிக்காமலே இருக்கலாம் மிக நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



