Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!
உடலின் உள்ளுப்புக்களில் ஒன்று தான் கல்லீரல். இந்த கல்லீரல் உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய கிளைகோஜனை சேமித்து வைப்பது, இரத்த சிவப்பணுக்களை சீர்செய்து இரத்தத்தை சுத்தப்படுத்துவது, செரித்த உணவுகளில் இருந்து புரோட்டீனை பிரிப்பது மற்றும் உடலில் சேரும் பல்வேறு நச்சுக்களை நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.
இவ்வளவு வேலையை செய்து உடலின் ஆரோக்கியத்தைக் காக்கும் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இதன் இயக்கம் சிறிது குறைய ஆரம்பித்தாலும், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க புகைப்பிடித்தலை நிறுத்துவதோடு, கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்க ஒருசில உணவுப்பொருட்களை உட்கொள்ளவும் வேண்டும். இதனால் சிறு இடைவெளிகளில் கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றலாம்.

பூண்டு
பூண்டுகளில் செலினியம் மற்றும் அல்லிசின் போன்ற கல்லீரலை சுத்தப்படுத்த தேவையான பொருட்கள் உள்ளன. ஆகவே இதனை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமையாக நிறைந்துள்ளது. இதனால் கல்லீரலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் இதனை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற்று, தடையின்றி கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும். எனவே ஆப்பிளையும் முடிந்த அளவில் தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக்காய்கறிகளான ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்டுகள் அதிகம் உள்ளது. அதனால் தான் அன்றாட சமையலில் வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருகிறோம்.



Click it and Unblock the Notifications
