Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உங்க சிறுநீரில் அழுகிப்போன முட்டை மற்றும் முட்டைகோஸ் நாத்தம் அடிக்குதா? அப்ப அதுக்கு இதுதான் காரணமாம்!
நீங்கள் ஆரோக்கியமான நபராக இருக்கும்போது, சிறுநீர் கழிக்க ஒரு நாளைக்கு பல முறை கழிவறைக்குச் செல்வீர்கள். வழக்கமாக உங்கள் சிறுநீரின் நிறம் வெள்ளையானது முதல் வெளிர் மஞ்சள் நிறம் வரை இருக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட வாசனையும் இருக்கலாம். அது பொதுவாக விசித்திரமானதாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்காது.
இருப்பினும், சில நேரங்களில் நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது வித்தியாசமான துர்நாற்றம் வீசலாம். பொதுவாக, இது கவலைக்குரிய ஒரு காரணம் அல்ல, அது தானாகவே போய்விடும். இருப்பினும், அது தொடர்ந்து இருந்தால், உங்கள் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏனெனில், நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் மற்றும் மலம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி நிறைய கூறும்.

உங்கள் சிறுநீரில் வினோதமான வாசனையை உணர ஆரம்பித்தால், நீங்கள் உட்கொண்ட சில உணவுகள் காரணமாக அது தற்காலிகமாக ஏற்படலாம். எந்த காரணம் மற்றும் உணவுகளால் நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் வாசனை ஏற்படும் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உணவு மற்றும் பானங்கள்
உண்மையில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் வாசனையை விசித்திரமானதாக மாற்றக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. இங்கே சில பொதுவான காரணங்களாக உணவு மற்றும் பானங்கள் உள்ளன. அவை உங்கள் சிறுநீர் கழிக்கும் வாசனையை எவ்வாறு பாதிக்கின்றன என்று இங்கே காணலாம்.
காபி
மிதமான காபி உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால், தொடர்ந்து அதிகமாக காபி குடிப்பதால் சிறுநீரில் துர்நாற்றம் வீசும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், காபியில் காணப்படும் கலவை சிறுநீருக்கு வலுவான மற்றும் தனித்துவமான வாசனையைக் கொடுக்கக்கூடும்.
மேலும், காஃபின் ஒரு டையூரிடிக் ஆகும். எனவே, அதிகப்படியான காபி உட்கொள்வதால், நீங்கள் அதிக சிறுநீரை உற்பத்தி செய்து, நீரிழப்புக்கு ஆளாக நேரிடலாம். மேலும், இது சிறுநீர் கழிக்கும்போது ஒரு வலுவான வாசனையையும் ஏற்படுத்தும். அதனால், உங்கள் காபி உட்கொள்ளலை குறைப்பது நல்லது.
பூண்டு மற்றும் வெங்காயம்
பெரும்பாலும், நாம் சமையலில் பூண்டு மற்றும் வெங்காயம் இடம் பெறும். பூண்டு மற்றும் வெங்காயத்தில் கந்தகம் கொண்ட இரசாயனங்கள் உள்ளன. மேலும் அவை உடைந்து போகும்போது, அவை உங்கள் சிறுநீரில் மோசமான வாசனையை வெளியேற்றலாம்.
இந்த வாசனை பொதுவாக அழுகிய முட்டைக்கோஸ் அல்லது அழுகிய முட்டைகளுடன் ஒப்பிடப்படுகிறது. நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, உங்களுக்கு இந்த துர்நாற்றம் வீசினால், பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் அளவாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
மசாலா
சீரகம், மஞ்சள், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களால் கூட சிறுநீரில் துர்நாற்றம் வீசுலாம். ஏனென்றால், மசாலாப் பொருட்களுக்கு வாசனையைத் தரும் நறுமண இரசாயனங்கள் அவை உடலில் செல்லும்போது பராமரிக்கப்படுகின்றன.
உங்கள் உணவு செரிமானம் ஆன பிறகும், உங்கள் சிறுநீரில் வாசனையைக் கண்டறிய முடியும். அதிக மசாலா நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது, மோசமான வாசனை கொண்ட சிறுநீரை நீங்கள் வெளியேற்ற நேரிடலாம்.
தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கும்?
துர்நாற்றத்துடன் சிறுநீர் கழிப்பது எப்போதும் தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். ஏனெனில், சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் வீசுவது பொதுவாக கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல எனத் தெரிவிக்கிறது தேசிய சுகாதார அமைப்பு.
ஆனால் உங்களுக்கு வலி போன்ற பிற நோய்த்தொற்றுகள் இருந்தால், நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கிறீர்கள் அல்லது சிறுநீர் மேகமூட்டமாக இருந்தால், உங்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருக்க வாய்ப்புள்ளது. ஆதலால், இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது போன்ற பிற சுகாதார நிலைகளாலும் சிறுநீர் கழிக்கும்போது குறைவான துர்நாற்றம் வீசும். உங்கள் சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து, நீங்கள் கவலையாக இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
