Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோடையில் தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வெயில் காலத்தில் உடல் சூட்டு பிரச்சனையால் தான் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இந்த உடல் சூட்டைக் குறைக்க நமது சமையலறையில் உள்ள வெந்தயம் பெரிதும் உதவி புரியும்.
Fenugreek Seeds In Summer: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் அதிகமாகும் போது, அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். குறிப்பாக வெயில் காலத்தில் உடல் சூட்டு பிரச்சனையால் தான் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இந்த உடல் சூட்டைக் குறைக்க நமது சமையலறையில் உள்ள வெந்தயம் பெரிதும் உதவி புரியும்.
அதற்கு இந்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு, நீரைக் குடிக்க வேண்டும் இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை நீருடன் உட்கொள்ள வேண்டும்.

வெந்தயத்தை இப்படி உட்கொண்டு வந்தால், உடல் சூடு குறைந்து, உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதோடு, பல்வேறு நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். ஏனெனில் வெந்தயத்தில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள், டானின், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் சாப்போனின் போன்றவைகளும் உள்ளன. இப்போது வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

உடல் சூடு குறையும்
கோடையில் சந்திக்கும் முக்கியமான ஆரோக்கிய பிரச்சனை தான் உடல் சூடு. இந்த உடல் சூடு பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் காண வேண்டும் மற்றும் கோடையில் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும்
வெந்தயமானது செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும். நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளான வாய்வு தொல்லை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தால், தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வர, இவற்றில் இருந்து விடுபடலாம். ஏனெனில் வெந்தயத்தில் உள்ள லூப்ரிகேட்டிங் பண்புகள் வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்
வெந்தய விதைகளானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கு வெந்தயத்தில் உள்ள நாரின்ஜெனின் என்னும் ப்ளேவோனாய்டுகள் தான் காரணம். இவை தான் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க காரணமாக உள்ளன.

டெஸ்டோஸ்டிரோன் அளவு மேம்படும்
பாலியல் பிரச்சனைகளை ஆண்கள் சந்திப்பதற்கு டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனில் உள்ள பிரச்சனைகள் தான் காரணம். ஆனால் ஆண்கள் தினமும் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுவதோடு, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, ஆண்களின் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். ஆய்வுகளில் கூட இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அது அவர்களின் உடலில் நல்ல நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். டைப்-2 நோயாளிகளின் மீது வெந்தயத்தின் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெந்தயத்தில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இன்சுலின் எதிர்ப்பு குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் வீக்கம்/அழற்சியைக் குறைக்கும்
வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலினுள் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவி புரியும். எனவே மூட்டு வலி அல்லது மூட்டு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications