Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஏன் அறுவைசிகிச்சை செய்யப்படுவதில்லை... விளக்குகிறார் மருத்துவர் சாந்தி!
Diabetes: பொதுவாகவே நமது உடலில் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்த அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். இரத்த சர்க்கரை அளவு உடலில் அதிகரித்தால் அது இலவச இணைப்பாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை அழைத்துவரும்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அங்கு முதலில் சோதிக்கப்படுவது அவர்களின் சர்க்கரை அளவுதான். குறிப்பாக ஒருவரின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை கூட செய்ய மாட்டார்கள் அல்லது சர்க்கரை அளவு குறையும் வரை அறுவை சிகிச்சையை தள்ளிபோடுவார்கள்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகுதான் அறுவை சிகிச்சையைத் தொடங்குவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் என்னவென்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? இதற்கான காரணத்தை விளக்குகிறார் சர்க்கரை நோய் மருத்துவர் சாந்தி.
உயர் இரத்த சர்க்கரை (ஹைப்பர் கிளைசீமியா)
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அறுவை சிகிச்சை செய்வதை மேலும் சிக்கலாக்கும். இதனால் ஏற்படும் சிக்கல்களை சாந்தி விளக்கியுள்ளார்.
தொற்றுகளின் வாய்ப்பை அதிகரிக்கும்
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது உடலின் தொற்றுநோயை எதிர்த்து போராடும் திறனைப் பாதிக்கும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடலில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் இந்த நிலையில் உடல் குணமடையும் நிலையில் இருக்கும். உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும்போது தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.
குணமடைவதைத் தாமதமாக்கும்
பொதுவாகவே சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காயங்கள் மெதுவாக குணமடையும். குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் காயங்கள் பொதுவாகவே மெதுவாக குணமடையும். காயங்கள் மெதுவாக குணமடைவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகள்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் (DKA) அல்லது ஹைபரோஸ்மோலார் ஹைப்பர் கிளைசெமிக் நிலை (HHS) போன்ற ஆபத்தான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு பிரச்சினைகளும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த நிலைகளை குணப்படுத்திய பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அனஸ்தீசியாவில் சிக்கலை ஏற்படுத்தும்
அனஸ்தீசியா என்பது அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்தாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது அது அனஸ்தீசியாவுடன் குறுக்கிடலாம். அறுவைசிகிச்சையின் போது கொடுக்கப்படும் பிற மருந்துகளுக்கு உடல் ரியாக்ட் செய்யும் விதத்தை இது பாதிக்கலாம்.
அறுவை சிகிச்சையின் முதன்மையான நோக்கமே நம்முடைய பிரச்சினையை சரிசெய்வதும், நோயைக் குணப்படுத்துவதும்தான். நம்முடைய இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், அது அறுவை சிகிச்சையின் போது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே அறுவைசிகிச்சைக்கு முன் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்த பிறகே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்குவார்கள் என்று சாந்தி கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
