Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
நீங்க படிக்கும்போது கண்ணாடி போடுவீங்களா? இனி தேவையில்லை... இந்த ஒரு சொட்டு கண் மருந்து போதும்..!
இந்தையாவில் இயற்கையாக குறைபாடு ஏற்பட்டவர்களின் கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்டோட் பார்மா இந்தியாவில் ப்ரெஸ்பியோபியா, வயது தொடர்பான பார்வை பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க PresVu என்ற சொட்டு மருந்தை அறிமுகப்படுத்துகிறது.
ப்ரெஸ்பியோபியா என்றால் என்ன?
ப்ரெஸ்பியோபியா என்பது ஒரு பொதுவான வயது தொடர்பான இயற்கையாக கண்களில் ஏற்படும் குறைபாடு.. இது பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது, இதனால் கண்கள் படிப்படியாக பார்க்கும் அதன் சக்தியை இழக்கிறது.. அருகிலுள்ள பொருட்கள் கூட கண்களுக்கு தெரியாது.. அதனால் இந்த மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு படிக்கும் போது உதவியாக இருக்கும்.. அவர்கள் கண்ணாடிகளை போட தேவை இருக்காது..

நம் தாத்தா பாட்டி காலை நேரத்தில் பேப்பரைப் படிக்க, ஒரு கண்ணாடியை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். இதை ஆங்கிலத்தில் ரீடிங் கிளாஸ் என்று கூறுவார்கள். வயதுக்கு ஏற்ப, நம் கண்கள் அவற்றின் நெகிழ்ச்சித்தன்மையை இழப்பதன் காரணமாக இது போன்ற கண்ணாடிகள் தேவைப்படுகின்றன.இது பொதுவாக 40 வயதிற்குப் பிறகு தொடங்கும் ஒரு கண் நோயான ப்ரெஸ்பியோபியாவை பெறும்போது இந்த நிலை நமக்கு ஏற்படுகிறது. உலகளவில் சுமார் 1.8 பில்லியன் மக்கள் பிரஸ்பியோபியாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம்
மும்பையில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான என்டோட் பார்மாசூட்டிகல்ஸ், ப்ரெஸ்பியோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு கண் சொட்டு மருந்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரெஸ்பியோபியாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயதினருக்கு இந்த புதிய மருந்து ரீடிங் கிளாஸ்ஸை மாற்றும்.
பைலோகார்பைன் ஹைட்ரோகுளோரைடு என்ற பொதுவான வார்த்தையில் அறியப்படும் இந்த மருந்துக்கான சந்தைப்படுத்தல் அனுமதியை இந்த நிறுவனம் ஆகஸ்ட் மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடமிருந்து (DCGI) பெற்றுள்ளது. இந்தியாவில் PresVu என முத்திரை குத்தப்பட்ட இந்த மருந்தில் 1.25 சதவிகிதம் பைலோகார்பைன் உள்ளது.. சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கண் சொட்டு மருந்தின் ஒரு குப்பியின் விலை சில்லறை சந்தையில் ரூ.345 ஆக இருக்கும் என்று நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர்03) அன்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது..
என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து கூறுகையில், “ 2019 ஆம் ஆண்டு தொடங்கிய விரிவான ஆராய்ச்சியின் விளைவாக இந்தியாவில் கண் சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பைலோகார்பைன் ஹைட்ரோகுளோரைடு கண் சொட்டு மருந்து, கண்ணில் உள்ள தசைகளைத் தூண்டி, கண்ணை சுருக்கி, அருகில் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. ப்ரெஸ்பியோபியா சிகிச்சையில் சமீபத்திய கண்டுபிடிப்பான இந்த மருந்து, வயதானதால் ஏற்படும் கண் பார்வை குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் சரிச்செய்ய உதவுகிறது” என்றார்... மேலும், “ மருந்து பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.. அதுவே பல மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், கண் தொடர்பான சுகாதார வல்லுநரை ஆலோசித்த பின்பு இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது” என்றும் தெரிவித்தார்..
பிரஸ்பியோபியா சிகிச்சைக்கான அமெரிக்க நிறுவனம்
பிலோகார்பைன் ஹைட்ரோகுளோரைடு (-Vuity -) வியூட்டியின் அசல் பிராண்ட் அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான அலெர்கனுக்கு சொந்தமானது, இந்த நிறுவனம் முதன்முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது 2021 ஆம் ஆண்டில் AbbVie என்ற உலகளாவிய மருந்து நிறுவனமான AbbVie இன் ஒரு பகுதியாகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதே ஆண்டில் பிரஸ்பியோபியா சிகிச்சைக்காக இதை அனுமதித்தது.
இந்த கண் மருந்து எவ்வளவு நேரங்களில் வேலை செய்கிறது?
இந்தியாவில் 10 தளங்களில் 250 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் தரவு, இது 40 முதல் 55 வயதுக்குட்பட்ட லேசான முதல் இடைநிலை ப்ரெஸ்பியோபியாவுடன், தற்காலிகமாக பார்வைப் பிரச்சினைகளைச் சரிசெய்வதில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. மருந்து பயன்படுத்திய 15 நிமிடங்களுக்குள் வேலை செய்யத் தொடங்குகிறது.. ஆனால் 15 நாட்களுக்குப் பிறகு முழுமையான பலன்கள் தெரியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.. .
கண் மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவு எவ்வளவு?
PresVu கண் சொட்டு மருந்துக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவு தினமும் ஒரு முறை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி ஆகும். ஒரு நாளைக்கு பல டோஸ்களை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. துளி நிர்வாகத்திற்கு முன் அணிந்திருக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் அகற்றப்பட வேண்டும். மருந்து பயன்படுத்திய 15 நிமிடங்களுக்குள் வேலை செய்யத் ஆரம்பிக்கிறது.. அதன் பிறகு 6 முதல் 10 மணிநேரங்களுக்கு கூர்மையான பார்வையை அளிக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











