ஒரே வாரத்துல உங்க உடல் எடையை டக்குனு குறைக்கணுமா? அப்ப காலையில வெறும் வயித்துல 'இத' குடிங்க...!

Weight Loss Drinks In Tamil: இன்றைய நாளில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் உடல்பருமனும் ஒன்று. இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதனால், உடல் பருமனை குறைத்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம்.

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
ஆரோக்கியமான பொருட்களால் செறிவூட்டப்பட்ட அமுத சாறுகள், எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகின்றன. இயற்கை பொருட்களால் நிரம்பியிருக்கும் ஆரோக்கியமான ஷாட்களை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

Early Morning Shot Recipes For Quick Weight Loss In Tamil

இந்த ஆரோக்கிய ஷாட்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை தொப்பை கொழுப்பை எரிக்க எளிதாக உதவுகின்றன. எளிதாக தயாரிக்கக்கூடிய ஐந்து வெல்னஸ் ஷாட் ரெசிபிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். இந்த சாறுகளுடன் பயனுள்ள, நீண்ட கால முடிவுகளைப் பெற, சீரான உணவு மற்றும் வழக்கமான வொர்க்அவுட்டைப் பின்பற்றுவது முக்கியம்.

இந்த ஷாட்களை வெறும் வயிற்றில் அல்லது அதிகளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். குறிப்பாக உங்களுக்கு முன்பே உடல்நலக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும். விரைவான எடை இழப்புக்கான அதிகாலை 'ஷாட்' ரெசிபிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) ஷாட்

ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் சிறிதளவு இலவங்கபட்டை தூள் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலக்கிய சாற்றை ஒரு சிறிய ஷாட் கிளாஸில் ஊற்றி, அதை அப்படியே எடுத்து குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் இந்த சாற்றை குடிப்பது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல அதிசயங்களை செய்யும்.

ஆப்பிள் சைடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் பசியைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. அதே நேரத்தில் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் இலவங்கப்பட்டை தூள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

இஞ்சி மஞ்சள் ஷாட்

ஒரு அங்குல அளவு இஞ்சி மற்றும் மஞ்சள் வேரை துருவிய வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் அரை டீஸ்பூன் பச்சை தேன் ஆகியவற்றுடன் கலந்து இந்த ஷாட்டை தயாரிக்க வேண்டும். பின்னர், இந்த கலவையை வடிகட்டி அதை ஒரு ஷாட் போல உட்கொள்ள வேண்டும்.

இஞ்சி மற்றும் மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. அத்துடன் எடை மேலாண்மைக்கு உதவுகின்றன. கருப்பு மிளகு சேர்ப்பது மஞ்சளின் செயலில் உள்ள கலவையான குர்குமின் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இந்த சாற்றை குடிப்பது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

கிரீன் டீ மற்றும் கெய்ன் பெப்பர் ஷாட்

ஒரு பை கிரீன் டீயை வெந்நீரில் ஊற்றி ஆறவிடவும். ஆறியதும் ஒரு சிட்டிகை மிளாகாய் தூளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். உங்கள் உணவுக்கு முன் அல்லது அதனுடன் இந்த ஷாட்டை குடிக்க வேண்டும்.

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன. கெய்ன் மிளகாயில் உள்ள கேப்சைசின் உள்ளடக்கம் கலோரி செலவை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும், எடை இழப்பைத் தூண்டவும் உதவும்.

அலோ வேரா மற்றும் லெமன் ஷாட்

ஒரு புதிய கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுத்து, ஒரு எலுமிச்சை சாறுடன் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அதை ஷாட் போல குடிக்க வேண்டும். கற்றாழையில் செரிமானம் மற்றும் நச்சுத்தன்மையை ஆதரிக்கும் கலவைகள் உள்ளன. இவை எடை இழப்புக்கு உதவுகின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் செரிமான அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது.

முருங்கை இலை மற்றும் வீட்கிராஸ் ஷாட்

ஒரு கப் தண்ணீரில் தலா ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடி மற்றும் கோதுமைப் புல் சாற்றை ஆகியவற்றைக் கலந்து இந்த சக்திவாய்ந்த ஆரோக்கியமான பானத்தை உருவாக்க வேண்டும். இவற்றை நன்கு கலந்தவுடன், கலவையை வடிகட்டி, ஒரு ஷாட் போல உட்கொள்ளவும்.

முருங்கை மற்றும் கோதுமை புல் சாறு நச்சு நீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. விரைவாக உங்கள் உடல் எடையை குறைக்க மேலே கூறப்பட்டுள்ள சாறுகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion