Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க போதும்..!
Heart Attack: தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக பலர் தங்கள் ஆரோக்கியத்தின் மீது போதுமான அக்கறை காட்ட முடியாமல் உள்ளனர். முக்கியமாக நமது உடலில் பிரச்சனை உள்ளது என்று நமது உடல் நமக்கு ஒருசில அறிகுறிகளை தெரிவித்தாலும், அதை கவனிக்காமல் புறக்கணிக்கின்றனர்.
அப்படி சமீப காலமாக உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் மரணமடைந்து வருகின்றனர். மாரடைப்பு என்பது அமைதியாக ஒருவரை தாக்கக்கூடியது. ஆனால் இந்த மாரடைப்பின் அபாயத்தை வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் பெரிய அளவில் மாற்றத்தைக் காணலாம்.

சமீபத்தில் கார்னெல் பல்கலைக்கழகத்தின் எம்.டி.யுடன் கூடிய நீண்ட ஆயுள் நிபுணரும், லாங்கிவிட்டியின் இணை நிறுவனரும் தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் வாசிலி எலியோபௌலோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் 5 எளிய பழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
"பெரும்பாலான மக்கள் மாரடைப்பை தடுக்க உதவும் பழக்கங்களை புறக்கணித்துவிடுகிறார்கள். ஏனெனில் இந்த சிறிய பழக்கங்கள் எப்படி தடுக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதய நோயானது ஒரே இரவில் ஏற்படுவதில்லை. இது மெதுவாக, நமது தினசரி பழக்கவழங்களின் மூலம் தான் உருவாகிறது. எனவே அதே மாதிரியான சில பழக்கவழங்களின் மூலம் அதைத் தடுக்கவும் முடியும்" என்று டாக்டர் வாசிலி கூறினார்.
நீங்கள் உண்மையான பாதுகாப்பை விரும்பினால், சிறு விஷங்களை தொடர்ந்து செய்யுங்கள். அதுவே உங்கள் இதயத்தை பல ஆண்டுகளாக வலுவாக வைத்திருக்க உதவும் என்றும் டாக்டர் வாசிலி குறிப்பிட்டிருந்தார். அதோடு மாரடைப்பைத் தடுக்க உதவும் 5 எளிய பழக்கங்களையும் பகிர்ந்து கொண்டார்.
1. உணவுக்கு பின் நடைப்பயிற்சி
உணவு உட்கொண்ட பின் 10 நிமிட உடற்பயிற்சி பெரிய அற்புதத்தை உண்டாக்கும். குறிப்பாக,
* இரத்த சர்க்கரை குறையும்
* உணவுக்கு பிந்தைய வீக்கத்தைக் குறைக்கும்
* இன்சுலின் செயல்பாட்டை ஆதரிக்கும்.
உணவு உட்கொண்ட பின் சிறு நடைப்பயிற்சி மேற்கொள்வது ஒரு சிறிய விஷயமாக தோன்றதாம். ஆனால், அது இதயத்திற்கு பெருமளவில் நல்ல பலனைத் தரும் என்று டாக்டர் கூறினார்.
2. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை எடுங்கள்
"இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியம். ஏனெனில் இந்த வகை கொழுப்பு அமிலங்கள் இதய நோயின் அபாயத்தை பின்வரும் வழிகளில் ஆதரிப்பதன் மூலம் குறைக்கின்றன. அவை,
* குறைந்த ட்ரை கிளிசரைடுகள்
* தமனி விறைப்பைக் குறைக்கிறது
* வாஸ்குலர் வீக்கத்தை குறைக்கிறது
அதற்கு வாரத்திற்கு 2 முறை சால்மன் மீனை உட்கொள்ளலாம் அல்லது மருத்துவர் பரிந்துரையின் படி ஒமேகா-3 சப்ளிமெண்ட்டுகளை எடுக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.
3. போதுமான தூக்கம் அவசியம்
மோசமான தூக்கம் மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குவது, மாரடைப்பின் அபாயத்தை 200 சதவீதம் வரை அதிகரிக்கும். அதிக கார்டிசோல் மற்றும் போதுமான தூக்கமின்மையால் ஏற்படும் வீக்கம் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். எனவே தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்வதில் உறுதியாக இருங்கள் என்று டாக்டர் கூறினார்.
4. பிளாஸ்டிக்கை அகற்றுங்கள்
பிளாஸ்டிக்குகளை சூடுபடுத்தும் போது, அவை இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பித்தலேட்டுகளை வெளியிடுகின்றன. மேலும் அவை,
* ஹார்மோன்களை சீர்குலைக்கும்
* வீக்கத்தை அதிகரிக்கும்
* தமனிகள் கடினமாக வழிவகை செய்யும்.
எனவே உணவுகளை கண்ணாடி பாத்திரத்தில் வைத்திருங்கள், நீரை வடிகட்டி குடியுங்கள் மற்றும் மைக்ரோஓவனில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என்று டாக்டர் கூறினார்.
5. பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்
இதய நோயின் அபாயத்தை அளவிட வெறும் LDL கொழுப்பை மட்டும் கவனிக்காதீர்கள். அத்துடன், பின்வருவனவற்றையும் சரிபார்க்க வேண்டும். அவை,
* அப்போப் (ApoB)
* லிப்போபுரோட்டீன் (a)
* எச்எஸ்-சிஆர்பி (hs-CRP)
* ஹோமோசிஸ்டீன்
போன்றவற்றையும் எடுத்து பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இவற்றைக் கொண்டு ஒரு வருடத்திற்கு முன்பே மாரடைப்பு வரும் அபாயம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று டாக்டர் கூறினார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 எளிய பழக்கங்களையும் ஒருவர் தங்களின் தினசரி பழக்கத்தில் வைத்துக் கொண்டால், இதயத்தை மட்டுமின்றி, நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்று டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications