Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கார்டியாக் அரெஸ்ட் Vs. மாரடைப்பு - இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? விளக்கும் இதய டாக்டர்!
Sudden Cardiac Arrest Awareness Month: தற்போது உலகளவில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு இதயம் தொடர்பான நோய்கள் தான் காரணமாக உள்ளன. முக்கியமாக மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்றவை தான் முதன்மையான காரணங்களாக உள்ளன.
நிறைய பேர் மாரடைப்பும், கார்டியாக் அரெஸ்ட்டும் ஒன்றென நினைக்கிறார்கள். ஆனால் இவ்விரண்டும் வெவ்வேறு பிரச்சனைகளாகும். இவ்விரண்டுமே வெவ்வேறு காரணங்களால் நிகழ்கின்றன. இதில் மாரடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் மரணம் உறுதி.

அதுவும் இந்த கார்டியாக் அரெஸ்ட்டானது இளம் வயதிலேயே ஒருவருக்கு ஏற்படும் அளவில் ஆபத்தானது. சமீபத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 39 வயதுடைய இதய அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளிகளை பார்க்க மருத்துவமனையில் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த செய்தி மருத்து உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட கார்டியாக் அரெஸ்ட் குறித்தும், அதற்கான காரணங்கள் மற்றும் இதய அவசரநிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் திடீர் கார்டியாக் அரெஸ்ட் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தை முன்னிட்டு, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்புக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்தும், கார்டியாக் அரெஸ்ட் எந்த காரணங்களால் ஏற்படலாம் என்பது குறித்தும் இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்த் துருவாசல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
மாரடைப்புக்கும், கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் உள்ள வித்தியாசம்
" மாரடைப்பு என்பது இதயத்தில் இருக்கும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. அதாவது, இதயத்திற்கு மூன்று முக்கிய இரத்தக்குழாய்கள் உள்ளன. அந்த இரத்தக்குழாய்கள் தான் இதயத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்கின்றன. அவற்றில் அடைப்பு ஏற்பட்டால் தான் மாரடைப்பு ஏற்படும்.
இதயத்தில் இருக்கும் 3 முக்கிய இரத்தக்குழாய்கள் பின்வருமாறு:
* LCA (இடது கரோனரி தமனி)
* RCA (வலது கரோனரி தமனி)
* LCA-ல் இருக்கும் கிளைகளான LAD (இடது முன்புற இறங்கு தமனி), LCX (இடது வட்டவளைவு தமனி)
இந்த 3 இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது உண்டாவது தான் மாரடைப்பு. மறுபுறம் கார்டியாக் அரெஸ்ட் என்றால் இதயமே முற்றிலும் நின்றுவிடுவது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 70-80 முறை துடிக்கும் இதயம், துடிக்காமல் நின்றுவிடுவது தான் கார்டியாக் அரெஸ்ட். இந்த கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் போது இதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பப்படுவது முற்றிலும் நின்று, அதன் விளைவாக உயிரிழப்பு ஏற்படும்." என்று டாக்டர் கூறினார்.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான காரணங்கள்
"கார்டியாக் அரெஸ்ட் வேறு பல காரணங்களால் ஏற்படலாம். அதில் ஒரு முக்கியமான காரணம் தான் தீவிரமான மாரடைப்பு (Massive Heart Attack). இந்த தீவிரமான மாரடைப்பானது, மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 விதமான இரத்தக்குழாய்களில் இதயத்துக்கு பெரும்பாலான இரத்தத்தை வழங்குவது இடது பக்க இரத்தகுழாய்கள் தான். இந்த இடது பக்க இரத்தக்குழாய்களான LCA மற்றும் அதன் கிளைகளில் அடைப்பு ஏற்பட்டால் வரக்கூடியது தான் தீவிரமான மாரடைப்பு.
இந்த தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் மாரடைப்பின் போது பிபி அளவு 90/60-யை விட குறைவாகவும், இதயத் துடிப்பு 60-100-யை வி30-40 என்று வரும் போது, கார்டியாக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக இளம் வளதில் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு இந்த தீவிரமான மாரடைப்பைத் தவிர 5 முக்கியமான காரணங்களும் உள்ளன" என்று டாக்டர் அரவிந்த் துருவாசல் கூறினார்.
வேறு சில முக்கியமான காரணங்கள்
1. Hypertrophic Obstructive Cardiomyopathy
இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே வரும் பாதையில் இருக்கும் தசைகள் வீங்கியிருந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இந்நிலையில் திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
2. Arrhythmogenic Right Ventricular Dysplasia
இதில் அரித்மோஜெனிக் என்பது இதயம் சீராக துடிக்காமல், சீரற்று துடிப்பதைக் குறிக்கிறது. இந்த நிலையாலும் கார்டியாக் அரெஸ்ட் ஒருவருக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
3. Severe Valvular Heart Disease
இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே வருவதற்கு 4 வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகளில் பிரச்சனை இருந்தால், அதன் விளைவாக கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
4. Coronary Artery Anomalies
இதயத்திற்கு வழக்கமாக வரக்கூடிய இரத்தக்குழாய்களில் இருந்து இரத்தம் வராமல், அசாதாரணமான வழியில் இரத்தம் வந்தால், அத்தகையவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
5. Dilated Cardiomyopathy
இது எந்த ஒரு காரணமும் இல்லாமல், மரபணுக்கள் காரணமாக இதயம் வீங்கி போய், அதன் விளைவாக கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த நிலைமைகள் எல்லாம் ஒருவருக்கு உள்ளதா என்பதை ப்ரீ கிளீனிக்கல் ஸ்க்ரீனிங்கில் கண்டுபிடிக்க முடியும் என்று டாக்டர் அரவிந்த் துருவாசல் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











