Latest Updates
-
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
கேப்டன் விஜயகாந்த்தின் மரணத்திற்கு உண்மையான காரணம் இதானாம்...
DMDK Leader Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் முன்னதாக நவம்பர் மாதத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரால் சரியாக மூச்சுவிட முடியாததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. அப்போது மியாட் மருத்துமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்தின் உடல்நிலை ஆரம்பத்தில் பெரிய முன்னேற்றம் காட்டுவதாக கூறினார். ஆனால் போக போக உடல்நிலை சற்று மோசமடைந்தது. இருப்பினும் அவர் பூரண குணமடைவார் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர். இருந்தாலும் இன்னும் 14 நாட்கள் இவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு வந்தடைந்தார். ஆனால் நேற்று இரவு அவரது உடல்நிலை சற்று மோசமான நிலையில் இருந்துள்ளது. இன்று அதிகாலை விஜயகாந்த் அவர்கள் மீண்டும் மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது பரிசோதனை செய்யும் போது அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவரது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளது. அதோடு நுரையீரலும் பலவீனமாக இருந்துள்ள நிலையில், கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால், நுரையீரலில் கடுமையான அழற்சி ஏற்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் அவர்கள் காலமானார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பு குறித்து மியாட் மருத்துவமனை மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி (Pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும், அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 அன்று காலமானார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜயகாந்த் அவர்கள் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவிட் முதல் அலையின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பு காரணமான நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா என்பது ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களிலும் உள்ள காற்றுப் பைகளை வீக்கப்படுத்தும் ஒரு தொற்று ஆகும். இதில் காற்றுப் பைகளில் திரவங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இந்நிலையில் சளி, காய்ச்சல், குளிர், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கடுமையான இருமலை ஏற்படுத்தும். இந்த நிமோனியாவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என எது வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம்.
நிமோனியாவில் லேசானது முதலாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரமானது வரை உள்ளன. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் ஆபத்தானது.
நிமோனியாவின் அறிகுறிகள்
நிமோனியாவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை உள்ளது. இது தொற்றை ஏற்படுத்திய கிருமியைப் பொறுத்தது. பெரும்பாலும் இதன் அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலைப் போன்றே தான் இருக்கும். ஆனால், அது நீண்ட காலம் நீடித்திருக்கும். நிமோனியாவின் சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
* சுவாசிக்கும் போது அல்லது இருமலின் போது நெஞ்சு பகுதியில் வலி
* இருமலின் போது சளி வெளியேறுவது
* மிகுந்த உடல் சோர்வு
* காய்ச்சல், வியர்வை, குளிர்
* குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
* மூச்சுத்திணறல்
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
சுவாசிப்பதில் சிரமம் கொண்டிருப்பதோடு, நெஞ்சு வலி, 102 F-க்கும் அதிகமான நிலையான காய்ச்சல், தொடர்ந்து இருமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சில வயதானவர்கள் மற்றும் இதய பிரச்சனை மற்றும் நீண்டகால நுரையீரல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, நிமோனியா விரைவில் மரணத்தை ஏற்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











