Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2023-ல் ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத தினமும் ஃபாலோ பண்ணுங்க போதும்...
2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த புத்தாண்டில் நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எம்மாதிரியான பழக்கங்களை கொள்வது?
Fitness Tips For New Year 2023: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றிய கொரோனா, இன்று வரை பலவாறு உருமாற்றமடைந்து மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் தற்போது கோவிட்-ன் ஓமிக்ரான் BF.7 மாறுபாடு உலகில் பல நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. மேலும் நிபுணர்கள் இந்த கோவிட் BF.7 மாறுபாடு நான்காம் அலையை 2023 ஆம் ஆண்டில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர். எனவே நாம் முன்பை விட உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த புத்தாண்டில் நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எம்மாதிரியான பழக்கங்களை கொள்வது என்று தெரியவில்லையா? கீழே சில ஆரோக்கியமான பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பழக்கங்களை இந்த புத்தாண்டில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்
கோவிட் வைரஸ் இன்னும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முதலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாக காளான்கள், நட்ஸ், பூசணி விதைகள், எள்ளு விதைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் ஜிங்க் அதிகம் உள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத மற்றும் அதிக நன்மை பயக்கும் உணவுகளாகும்.

போதுமான வைட்டமின் டி பெற முயற்சிக்கவும்
வைட்டமின் டி சத்தானது எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்க உதவும். மேலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 15 நிமிடம் அதிகாலை சூரிய ஒளியில் சிறிது நேரம் உடற்பயிற்சியை செய்யுங்கள். மேலும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் தினமும் உணவில் சேர்த்து வாருங்கள். இது இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

நல்ல தூக்கத்தை மேற்கொள்ளவும்
தற்போது அதிக வேலைப்பளுவின் காரணமாக பலரால் போதுமான தூக்கத்தைப் பெற முடிவதில்லை. இதனால் அதிகமான தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பதோடு, அதிகளவிலான காப்ஃபைன் பானங்களை உட்கொள்ள நேரிடுகிறது. ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் போனால், உடல் எப்போதும் சோர்வுடன் இருப்பதோடு, மனநிலை மந்தமாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல், தினசரி செயல்பாடுகளை கூட செய்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், நோயெதிர்ப்பு சக்தியானது பலவீனமாகி, பல கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த 2023-ல் தினமும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும்
மன அழுத்தமானது உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் உட்பட அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாகும். எனவே இந்த புத்தாண்டில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகள் போன்றவற்றில் ஈடுபட்டு போக்கலாம்.

அவசியம் உடற்பயிற்சி செய்யுவும்
உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒருவரை நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், வாரத்தில் 3-4 நாட்கள் 45 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட முயலுங்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் மற்றும் உடலும் ஆரோக்கியமாக ஃபிட்டாக இருக்கும்.



Click it and Unblock the Notifications