Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
'கரீபிய கிரிக்கெட் மன்னன்' கிறிஸ் கெய்ல்ஸின் உடல் வலிமையின் ரகசியங்கள்!
கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்று ஆட வேண்டும் அப்போது தான் நிறைய ரன்கள் சேகரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். ஆனால், கிறிஸ் கெய்ல் களத்தில் நின்று ஆட தொடங்கிவிட்டால் ருத்ர தாண்டவம் தான் பந்து எல்லைக் கோட்டினை கடந்து செல்லாது, பறந்து தான் செல்லும். சென்ற பிறவியில் ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானியாக பிறந்திருப்பார் போல கிறிஸ் கெய்ல். பந்துகளை வானத்தில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டுவதில் கிறிஸ் கெய்லுக்கு ஒரு அலாதிப் பிரியம். வேக பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள் என வேறுபாடு எல்லாம் கிறிஸ் கெய்ல் பார்ப்பது கிடையாது. யார் பந்து வீசினால் பேட்டை விளாசுவது மட்டுமே கிறிஸ் கெய்லுக்கு தெரிந்த விஷயம்.
விராத் கோலியின் 1௦ உடற்திறன் இரகசியங்கள்.
டி.20 போட்டிகளில் சதம், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே வீரர் 'கரீபிய கிரிக்கெட் மன்னன்' கிறிஸ் கெய்ல் மட்டும் தான். எதிர் அணியின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது, ஆடுகளத்தின் தன்மையோ, கேப்டன்களின் வியூகமோ அல்ல கிறிஸ் கெய்ல் தான். அவர் நின்று விளாச தொடங்கிவிட்டால் ஆட்டம் வெஸ்ட் இண்டீசின் கையில். ஒரு வேலை அவர் விரைவாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டால். பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் வேஸ்ட் இன்னிங்க்ஸாக தான் இருக்கும் எளிதில் வென்றுவிடலாம்.
காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!
கிறிஸ் கெய்லின், இந்த அசுரத்தனமான ஆட்டத்திற்கு என்னதான் காரணம் என அனைத்து அணிகளின் பந்து வீச்சாளர்களும் திணறியபடி யோசித்துக் கொண்டிருகின்றனர். அதை தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை. கரீபிய கிரிக்கெட் மன்னன் கிறிஸ் கெய்ல்ஸின் உடல் வலிமையின் இரகசியங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில் தொடர்ந்து படியுங்கள்....
புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உடற்பயிற்சி
ஒரு கிரிக்கெட் பத்திரிக்கையாளரிடம் கிறிஸ் கெய்ல் கூறுகையில், எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடித்தமான விஷயம். உடற்பயிற்சி செய்வதில் அதிக நேரம் செலவளிப்பதில் நான் மிகவும் விரும்புவேன். இதன் மூலம் எனது உடற்திறன் பலமடங்கு அதிகரிக்கிறது என கூறியிருக்கிறார்.

கார்டியோ பயிற்சி
கார்டியோ பயிற்சிகள் என்றால் கிறிஸ் கெய்லுக்கு உயிராம். அவர் கார்டியோ பயிற்சிகளுக்கான நடனம் பயிற்சியில் அதிகமாக ஈடுப்படுவேன். அதுவும் பெண்கள் யாரேனும் அந்த பயிற்சியில் உடன் பங்கேற்றனர் என்றால். களத்தில் ஆடுவதை விட அதிக நேரம் ஆடுவேன் என சிரித்து கொண்டே கூறுகிறது கரீபிய சிங்கம்

உடல் வலிமை
கிறிஸ் கெய்லிடம் உங்களது இந்த அதிரடி ஆட்டத்திற்கு என்ன ரகசியம் என கேட்கையில், "முடிந்த வரை தசைகளை நன்கு வலிமையாக வைத்துக் கொள்வது சிறந்ததாகும். அப்போது தான் நன்கு அடித்து ஆட முடியும். நான் எனது தசைகளை எப்போதும் வலுவாக வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருப்பேன்" என்கிறார் கிறிஸ் கெய்ல்.

பாஸ்தா பிரியர்
கிறிஸ் கெய்லுக்கு பாஸ்தா என்றால் மிக மிக பிரியமாம், தினமும் இரண்டு முறையாவது பாஸ்தா சாப்பிட்டு விட விரும்புவேன் என கூறுகிறார் கிறிஸ் கெய்ல்.

கிறிஸ் கெய்ல் டயட்
நிறைய கடினமான உணவுகளை உட்கொள்வதில்லை கிறிஸ் கெய்ல், ஜூஸ் மற்றும் நீராகரங்களையே விரும்பி பருகுகிறார் கிறிஸ் கெய்ல்.



Click it and Unblock the Notifications