Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சர்க்கரை நோயாளிகளே! தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு இரத்த சர்க்கரை அதிகரிக்கக்கூடாதா? இதுல ஒன்ன குடிங்க போதும்...
சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீபாவளி அன்று ஸ்வீட் சாப்பிட விரும்பினால், சுகர் ப்ரீ ஸ்வீட் வாங்கி சாப்பிடுங்கள். முக்கியமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பானங்களைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எகிறாமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தீபாவளி பண்டிகையானது சற்று சவாலான காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. ஆனால் தீபாவளி நாளில் பலவகையான இனிப்புக்கள் கண்முன் அதிகம் இருக்கும் மற்றும் அதை சாப்பிட முடியாத நிலையில் இருப்பார்கள். சில சமயங்களில் வாயை கட்டுப்படுத்த முடியாமல் பலர் இனிப்புக்களை சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. அதற்காக ஸ்வீட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கூறவில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீபாவளி அன்று ஸ்வீட் சாப்பிட விரும்பினால், சுகர் ப்ரீ ஸ்வீட் வாங்கி சாப்பிடுங்கள். முக்கியமாக அளவாக ஸ்வீட்டை சாப்பிட்டு, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஒருசில பானங்களைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எகிறாமல் தடுக்கலாம். கீழே இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைக்க உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைக் குடித்து தீபாவளி அன்று இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூ ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. முக்கியமாக பாகற்காய் ஜூஸ் இன்சுலினை சுறுசுறுப்பாக்கி, சர்க்கரையை கொழுப்பாக மாற்றாமல் ஆற்றலாக மாற்றி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் பாகற்காய் ஜூஸ் சரான்டின் என்னும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பொருள் உள்ளது. எனவே உங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டுமானால், பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.

வெந்தய நீர்
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்க வெந்தயம் பெரிதும் உதவி புரியும். ஆய்வு ஒன்றில், தினமும் 10 கிராம் வெந்தய விதையை சுடூநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தையும் சாப்பிட்டால், அது டைப்-2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக வெந்த நீர் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் இது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்துகிறது. குறிப்பாக வெந்தய நீரானது சர்க்கரையை உடல் பயன்படுத்தும் விதத்தை மேம்படுத்த உதவுகிறது.

பார்லி நீர்
பார்லி நீரில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. முக்கியமாக பார்லி நீர் இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது. ஆனால் பார்லி நீரை இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பார்லி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை பல நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறது.

க்ரீன் டீ
மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயானது க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் நீரிழிவு எலிகளுக்கு க்ரீன் டீ வழங்கப்பட்டதில், எலிகளின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது தெரிய வந்தது. எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் க்ரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறினர். இருப்பினும், இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே ஸ்வீட் சாப்பிட்டு உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க, ஒரு கப் க்ரீன் டீயை குடியுங்கள்.

குறிப்பு
என்ன தான் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பானங்களைக் குடித்தாலும், பண்டிகை நாட்களிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். முக்கியமாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு சர்க்கரை நோயாளின் தங்களின் உணவுப் பழக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதாக இரந்தாலும், உங்கள் மருத்துவரை அணுகி அவரின் அனுமதியுடன் மட்டுமே எதையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications