Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
ஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா?
சோயா பாலை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்கவும் உதவுகிறது.
பால் அல்லாத, தாவரங்கள் அடிப்படையிலானது தான் சோயா பால். இது சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்படுவது. பால் சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்க்கும் சைவ பிரியர்களுக்கு ஏற்றது. பாலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதிலும் வைட்டமின் பி, வைட்டமின் டி, மக்னீசியம், ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை காணப்படுகிறது. இதனை குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிப்பதை தடுத்திடலாம்.

அதுமட்டுமல்லாது, சோயா பாலை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்கவும் இது உதவுகிறது.
சோயா பீன்ஸை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி எடுக்கப்படுவது தான் சோயா பால். சோயா பீன்ஸில் உள்ள அனைத்து சத்துக்களும் தான் சோயா பாலை ஒரு ஆரோக்கியமான பானமாக மாற்றுகிறது. இப்போது, சோயா பாலில் உள்ள 7 அற்புத நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது
ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படக்கூடும். சோயா பாலில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜன்கள், டெஸ்டோஸ்டிரோனின் அதிகப்படியான சுரப்பைத் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கிறது
சோயா பாலில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதோடு, தடுக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை, தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது
சோயா பாலை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்திட முடியும். இதில் உள்ள அதிகடிப்படியான நார்ச்சத்து, உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது
சாதாரண பாலுடன் ஒப்பிடும் போது சோயா பாலில் சர்க்கரை குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிற்று பசியை தூண்டாது. இதன்மூலம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறைவதோடு, உடல் எடை குறைய உதவும்.

இரத்த நாளங்களை பலப்படுத்தும்
சோயா பாலில் உள்ள அதிகப்படியான ஒமேகா- 6 மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இரத்த நாளங்களை பலப்படுத்த உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, இதய பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கிறது
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் பலவீனமடைந்து, எளிதில் உடையக்கூடிய நிலையாகும். சோயா பாலில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், எலும்புகள் பலம் பெறும். சோயா பால் பவுடரை கூட நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக கூட எலும்புகளை வலுவாக்கலாம்.

மெனோபாஸ் அறிகுறிகளை தடுக்கிறது
பொதுவாக பெண்களுக்கு, மாதவிடாய் நின்றபிறகு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்துவிடும். இதனால், உடல் வெப்பம் வேகமாக அதிகரித்துவிடும். சோயா பாலில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இந்த அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது

சோயா பாலின் ஊட்டச்சத்துகள்
* சோயா பாலில் புரதம் நிறைந்துள்ளது.
* சோயா பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
* சோயா பால் பி-வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும்.
* சோயா பாலில் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.
* சோயா பால் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதன் மூலமும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications











