Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சர்க்கரை நோயை குணப்படுத்தும் 15 மூலிகைகள்...
இந்த நவீன கால வாழ்க்கை முறையும் வேலை மன அழுத்தமும் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தது தான் இந்த டயாபெட்டீஸ் என்ற நீரிழிவு நோய். இப்பொழுது எல்லாம் டயாபெட்டீஸ் நோயாளிகள் இல்லாத வீடுகளையே பார்க்க முடிவதில்லை
இந்த நவீன கால வாழ்க்கை முறையும் வேலை மன அழுத்தமும் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தது தான் இந்த டயாபெட்டீஸ் என்ற நீரிழிவு நோய். இப்பொழுது எல்லாம் டயாபெட்டீஸ் நோயாளிகள் இல்லாத வீடுகளையே பார்க்க முடிவதில்லை. வீட்டிற்கு ஒருவர் இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முற்றிலுமாக தடுக்க எந்த மருத்துவ முறைகளும் இல்லை. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்து உயிர் வாழலாமே தவிர நோய் முற்றிலுமாக தீர்ந்த பாடில்லை. ஆனால் நாம் பழங்காலத்தில் பயன்படுத்திய சில இயற்கை மூலிகைகளை ஆராய்ச்சி செய்த போது தெரிய வந்தது என்னவென்றால் அவைகள் இந்த டயாபெட்டீஸ் நோயை குணமாக்குவதும் வராமல் தடுக்கவும் உதவுகிறது என்பது தான். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சிறுகுறிஞ்சான்
இது சர்க்கரை அழிப்பான் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் உள்ள கிளைக்கோசைட்ஸ் ஜிம்னமிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இவை நாவின் சுவை நரம்பை கட்டுப்படுத்தி இனிப்பு உணவுகளை எடுத்து கொள்வதை குறைக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் டைட் 2 டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.
பயன்படுத்தும் முறை
கிராமம் முதல் மெட்ரோ பாலிட்டன் சிட்டி வரையிலும் இதை பவுடராகவோ அல்லது இதன் இலைகளை டீ போட்டு பருகியோ அல்லது மாத்திரையாகவோ எடுத்து கொள்ளலாம்.
தேநீர் தயாரிக்கும் முறை
கொதிக்கின்ற நீரில் இதன் இலைகளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதே மாதிரி வெதுவெதுப்பான நீரில் இந்த இலையின் பவுடர் சேர்த்து கூட குடிக்கலாம்.
மாத்திரை - 100 மில்லி கிராம்
பவுடர் - 1/2-1 டீ ஸ்பூன்
இலைகள் - 1 டீ ஸ்பூன்
காலையில் அல்லது சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னாடி எடுத்து கொள்ள வேண்டும்.

ஜின்ஸெங்
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் நவீன ஆராய்ச்சி படி பார்த்தால் இதில் டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்தும் பொருட்கள் உள்ளன. உடம்பில் கார்போஹைட்ரேட் அளவை குறைவாக உறிஞ்சி அதிகப்படியான குளுக்கோஸை ஆற்றலாக செலவழிக்க இது உதவுகிறது. எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 15-20%வரை குறைக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவை சீராக்குகிறது. இதை யுனிவர்சிட்டி ஆஃப் டோரோன்டோவில் கண்டறிந்துள்ளனர்.
பயன்படுத்தும் முறை
இதன் வேர்கள் அல்லது பவுடரை பயன்படுத்தலாம். வேர்களை நன்றாக நறுக்கி கொதிக்கின்ற நீரில் போட்டு கொதிக்க விடவும். 5-6 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி பருக வேண்டும். அல்லது வெதுவெதுப்பான நீரில் ஜின்ஸெங் பவுடரை கலந்து குடிக்கவும்.
பவுடர் - 1 டீ ஸ்பூன்
வேர்கள் - 2-3 அல்லது 7-8 துண்டுகள்
காலையில் அல்லது இரவு உணவிற்கு முன் பயன்படுத்தலாம்

முனிவர் இலை தாவரம்
இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கவும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது. கல்லீரல் வேலையை துரிதமாக்குகிறது. இதை உணவுடனோ அல்லது தேநீர் தயாரித்தோ உண்ணலாம்.
பயன்படுத்தும் முறை
இதை தேநீராகவோ அல்லது இதன் இலைகளை வாயில் போட்டு மென்றோ அல்லது மாத்திரை வடிவிலோ எடுத்து கொள்ளலாம். 1 கப் கொதிக்கின்ற நீரில் 1-2 இலைகளை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கவும்.
இலைகள் - 4-6 கிராம் /ஒரு நாள்
உலர்ந்த இலைகள் - 1/6 - 1/2 டீ ஸ்பூன்
டீ - 2-3 கப் /ஒரு நாள்
காலையில் வெறும் வயிற்றில் தேநீராகவோ அல்லது வெறும் வயிற்றில் இதன் இலைகளை மென்றோ சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவில் கூட இதை சேர்த்து சாப்பிடலாம்.

அவுரிநெல்லி
அவுரிநெல்லி டைப் 2 டயாபெட்டீஸ் நோயை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள குளுக்கோகுயினினின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் டயாபெட்டீஸால் கண்களில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. ஆனால் நீங்கள் டயாபெட்டீஸ்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது இதை உள்ளே சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இரத்த சர்க்கரை அளவு ரெம்பவும் குறைந்து போகவும் வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி இரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பது முக்கியம்.
பயன்படுத்தும் முறை
இதை சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியம். அவுரிநெல்லி சாறு 10-100 மில்லி கிராம் உடன் 25%86 ஆந்தோசைனசைட்ஸ் . இதை காலையிலும் மாலையில் இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னரும் அருந்த வேண்டும்.

ஆர்கனோ
இது மார்ஜோரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்பானிஷ் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படுகிறது. இதிலுள்ள கிளைக்கோசைடிஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ்மாரினிக் அமிலம் கணையத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கார்போஹைட்ரேட் உருவாக்கத்தை குறைத்தல், இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற வேலைகளையும் செய்கிறது.
பயன்படுத்தும் முறை
இதை உணவுகளிலோ, இலைகளை மென்றோ, ஆர்கனோ தேநீர், ஆர்கனோ ஆயில், மாத்திரைகள் போன்ற பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். 1 டீ ஸ்பூன் உலர்ந்த அல்லது ப்ரஷ் ஆர்கனோவை ஒரு கப் கொதிக்கின்ற நீரில் கலக்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.
ஆர்கனோ மாத்திரை - ஒரு நாளைக்கு 600 மில்லி கிராம்
ஆர்கனோ ஆயில் - 4-6 சொட்டுகள் ஒரு நாளைக்கு
உலர்ந்த ஆர்கனோ இலைகள் - 4-5 இலைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை
காலையில் ஆர்கனோ டீ அருந்துவது நல்லது. அல்லது காலையில் எழுந்ததும் இலைகளை மென்று திண்ணலாம். உலர்ந்த இலைகளை மதிய மற்றும் இரவு உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.

கற்றாழை
கற்றாழை ஜெல் ஒரு சதைப்பற்றுள்ள தாவரம். இது அழகு பராமரிப்பு மற்றும் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது நவீன ஆராய்ச்சி படி இதில் லிப்பிட் குறைப்பு பொருட்கள் மற்றும் இரத்த சர்க்கரை குறைப்பு பொருட்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.
பயன்படுத்தும் முறை
மார்க்கெட்டில் கற்றாழை ஜூஸ் கிடைக்கிறது, வீட்டிலேயே கற்றாழை ஜூஸ் தயாரித்து பயன்படுத்தலாம். 3 அங்குலம் கற்றாழை இலையை எடுத்து தொலை நீக்கி ஜெல்லை எடுத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் தண்ணீர் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். கற்றாழை மாத்திரைகளை கூட எடுக்கலாம். கற்றாழை மாத்திரை :300 மில்லி கிராம் ஒரு நாளைக்கு
கற்றாழை ஜூஸ் - பாட்டிலில் கொடுத்திருக்கும் அளவு வீட்டில் தயாரித்த ஜூஸ் - 100 கிராம். காலையில் இந்த ஜூஸை குடிக்கவும். மதிய உணவிற்கு முன் மாத்திரையை எடுத்து கொள்ளுங்கள்.

இஞ்சி
இன்சுலின் சுரப்பை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், இன்சுலின் சென்ஸ்டிவிட்டி போன்ற வேலைகளை செய்கிறது.
பயன்படுத்தும் முறை
பச்சையாக மென்று திண்ணலாம், உணவு,இஞ்சி டீ, இஞ்சி பொடி, எண்ணெய்,, ஜூஸ் போன்ற வடிவில் சேர்த்து கொள்ளலாம்.
இஞ்சி வேர் - 1-2 அங்குலம்
இஞ்சி எண்ணெய் - 3-4 சொட்டுகள்
இஞ்சி ஜூஸ் - 1 அங்குலம்
இஞ்சி பவுடர் - 1/2-1 டீ ஸ்பூன்
காலையில் பயன்படுத்தலாம், மாலை 6 மணிக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மதிய உணவுக்கு முன் இஞ்சி ஜூஸ் உடன் பழச்சாறு கலந்து குடிக்கலாம்

வெந்தயம்
இது சீரண பிரச்சினைகள் டயாபெட்டீஸ் பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்கிறது. இது சமையலில் அதிகளவு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். டைப் 2 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
இரவே இதை ஊற வைத்து கொள்ள வேண்டும். விதைகள் மற்றும் இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயம் - 2 டீ ஸ்பூன்
வெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்
வெந்தய இலைகள் - 200 கிராம்
காலையில் வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை பருகலாம், மதிய மற்றும் இரவு உணவுகளில் இதை சேர்த்து பயன்படுத்தலாம்.
கிடைக்கும் இடங்கள்
சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைனில் கிடைக்கிறது.

பட்டை
தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். டயாபெட்டீஸ், உடல் பருமன், தசை பிடிப்பு, வயிற்று போக்கு, சளி போன்றவற்றிற்கு உதவுகிறது. ஆனால் நவீன ஆராய்ச்சி தகவல்கள் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்று கூறுகின்றனர்.
பயன்படுத்தும் முறை
இதை பட்டை, பொடியாக, மாத்திரையாக பயன்படுத்தலாம்.
பட்டை - 2 அங்குலம்
பட்டை பொடி - 1/2 டீ ஸ்பூன்
பட்டை மாத்திரை - 500 மில்லி கிராம் ஒரு நாளைக்கு
காலையிலும் மாலையிலும் பட்டை டீ தயாரித்து குடிக்கலாம். காலையில் குடிக்கும் ஸ்மூத்தி மற்றும் ஜூஸில் பொடி கலந்து குடிக்கலாம். மாத்திரைகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம்.

கிராம்பு
இது ஒரு வகையான மொட்டு. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சீரண சக்தி பொருட்கள் உள்ளன. ஆராய்ச்சி தகவல்கள் கருத்து படி இது இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது, ட்ரைகிளைசரைடு போன்றவற்றை குறைக்கிறது.
பயன்படுத்தும் முறை
வெறுமனே வாயில் போட்டு மெல்லலாம், உணவில் பொடியாக பயன்படுத்தலாம், கிராம்பு மாத்திரைகள் பயன்படுத்தலாம்.
கிராம்பு :2- மெல்லுவதற்கு
5-6 கிராம்பு உணவில்
கிராம்பு பொடி - 1/2 டீ ஸ்பூன்
கிராம்பு மாத்திரைகள் - 500 மில்லி கிராம் ஒரு நாளைக்கு
இரவில் 3-4 கிராம்பை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். கிராம்பு பவுடரை மதிய மற்றும் இரவு உணவுகளில் சேர்த்து கொள்ளலாம், இரவு உணவிற்கு முன் ஒரு வாரத்திற்கு கிராம்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள்
மஞ்சள் உணவுகளில் கலர் கொடுப்பதற்காகவும் ஆரோக்கிய நன்மைக்காகவும் சேர்க்கப்படுகிறது. இது பாக்டீரியா தொற்று, சரும பராமரிப்பு, சீரண சக்திக்கு போன்றவற்றிற்கு உதவுகிறது. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்களான குர்குமின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய்க்கு இது சிறந்தது.
பயன்படுத்தும் முறை
வாயில் கொஞ்சம் மஞ்சள் போட்டு மென்று திண்ணலாம், மாத்திரை வடிவில், பவுடர் வடிவில் எடுக்கலாம்.
மஞ்சள் துண்டு - 1/2 அங்குலம்
மஞ்சள் பேஸ்ட் - 1-2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1-2 டீ ஸ்பூன்
மஞ்சள் மாத்திரை - 500 மில்லி கிராம் ஒரு நாளைக்கு இரண்டு முறை
வெறும் வயிற்றில் மென்று திண்ணலாம், ஸ்மூத்தி, சமையலில், ஜூஸில் பவுடர் அல்லது மஞ்சள் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். மதிய மற்றும் இரவு உணவிற்கு முன் மாத்திரைகளை எடுக்கவும்.

வேப்பிலை
ஆயுர்வேத முறையில் காலம் காலமாக பயன்படுத்தி வரும் மூலிகை ஆகும். இதில் ஆன்டி டயாபெட்டிக் பொருட்கள், ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி வைரல் பொருட்கள், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயன்படுத்தும் முறை
இதன் இலைகளை சுத்தமாக கழுவி பச்சையாக மென்று சாப்பிடலாம், வேப்பிலை பேஸ்ட், வேப்பிலை மாத்திரை வடிவில் பயன்படுத்தலாம்.
வேப்பிலை - 4-5
வேப்பிலை பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
வேப்பிலை மாத்திரை - பாட்டிலில் உள்ள அளவு
வேப்பிலை பேஸ்ட்டை நீரில் கலந்து காலையில் குடிக்கவும். காலையில் சில இலைகளை மென்று சாப்பிடலாம், காலை உணவிற்கு முன் ஒரு நாளைக்கு ஒரு முறை என மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மாத்திரைகள் ஆன்லைனில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இந்திய சூப்பர் மார்க்கெட்டில் அல்லது உங்கள் அருகில் இருக்கும் மார்க்கெட்டில் இலைகள் கிடைக்கும்.

ஷிலாஜித்
இதன் நிறம் லேசான ப்ரவுன் கலர் மற்றும் அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இமாச்சல மலைப்பிரேசத்தில் இருந்து இது கிடைக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தசைகளின் வலிமைக்கும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், வயதாகுவதை தடுக்கவும், கருவுறுதலை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதுவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
சரியான அளவு மாத்திரைகளை பாலிலோ, தேன் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்தோ பயன்படுத்தலாம். மாத்திரைகள் - 100-300 மில்லி கிராம் ஒரு நாளைக்கு
காலையில் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுகளுக்கு முன் பயன்படுத்தலாம்.
ஆன்லைனில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

குரோமியம்
குரோமியம் தாது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்தல், இனிப்பு பசியை தடுத்தல், இன்சுலின் சுரப்பை சரியாக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது.
பயன்படுத்தும் முறை
குரோமியம் பிக்கோலினேட், குரோமியம் பாலிநிக்கோட்டினேட், மற்றும் குரோமியம் குளோரைடு போன்ற வடிவில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. 100-200 மைக்ரோ கிராம் ஒரு நாளைக்கு இரண்டு முறை மதிய மற்றும் இரவு உணவிற்கு முன் எடுத்து கொள்ள வேண்டும்.

ஆல்பா லிப்போயிக் அமிலம்
இது வரு ஆன்டி ஆக்ஸிடன்ட். இது பொதுவாக உருளைக்கிழங்கு, கீரைகள், பழங்கள் பிரக்கோலி, ஈரல், ஈஸ்ட், சிறுநீரகம் போன்றவற்றில் காணப்படுகிறது. சோர்வு, நினைவின்மை, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் நோய், நியூரோபதி, நிணநீர் மண்டல நோய்கள் போன்றவற்றிற்கு உதவுகிறது. இது டைப் 2 டயாபெட்டீஸ்யை குணப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயன்படுத்தும் முறை
இதை மாத்திரை வடிவில் எடுத்து கொள்ளலாம். மாத்திரை :600 மில்லி கிராம் ஒரு நாளைக்கு மூன்று வாரத்திற்கு எடுக்கவும். மதிய உணவிற்கு முன்னால் எடுக்கவும்
இந்த 15 மூலிகை பொருட்களும் எந்த வித பக்க விளைவுகளும் உண்டு பண்ணாமல் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அப்புறம் எதற்கு இன்னும் வெயிட் பண்றீங்க. பயன்படுத்தி பலனை அடையலாமே.



Click it and Unblock the Notifications











